சாயல்குடி: சாயல்குடி காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 3 நாள் யாகம் வளர்த்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9.30 மணியளவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. பெருநாழி அருகே ஆரைகுடியில் கண்ணாயிரமூர்த்தி, கருப்பணசாமி, அழகு வள்ளியம்மன் கோயிகளுக்கும் நேற்று 9.15 மணியளவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.