விருத்தாசலம்: பூதாமூர் முனீஸ்வரர் கோவில் தீ மிதி திருவிழாவில், ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் பூதாமூர் பெரியநாயகி அம்மன் உடனுறை முனீஸ்வரர் கோவில் தீ மிதி திருவிழா, கடந்த 20ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று தீ மிதி உற்சவத்தையொட்டி, காலை 9:00 மணிக்கு முனீஸ்வரருக்கு வரிசை எடுத்தல், 10:00 மணிக்கு மணிமுக்தாற்றில் இருந்து சக்தி கரகம் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5:00 மணிக்கு பெரியநாயகி உடனுறை முனீஸ்வரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து, தீ குண்டத்தில் அக்னி கரகத்தைத் தொடர்ந்து ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது.