ரூர்: கரூர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் கோவிலில் கும்பாபிஷேக ஐந்தாம் ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை வழிப்பட்டனர். பிரசித்தி பெற்ற கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சக்கரத்தாழ்வார் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. நேற்று காலை 7.30 மணிக்கு கலசஸ்தாபனம், மதியம் 12 மணிக்கு ஸ்ரீ சுதர்சன ஹோமம், 1 மணிக்கு மஹா தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை 7.30 மணிக்கு கலச புனர்பூஜை, 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஸ்வாமி அலங்காரத்துடன் திருவீதி உலா புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்கின்றனர்.