நெடும்பலம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2011 11:07
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நெடும்பலம் கைலாசநாதர் கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள நெடும்பலம் கைலாசநாதர் கோவில், 13ம் நூற்றாண்டில், மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்தது. இக்கோவிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அர்த்தநாரீஸ்வருக்கு தனியாக கோவில் கட்டப்பட்டது.நேற்று கும்பாபிஷேகம் செய்ய முடிவுச் செய்யப்பட்டு, நான்கு கால யாகச்சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8.15 மணிக்கு, புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவந்தனர். வானில் கருட பகவான் வட்டமிட்டு ஆசி வழங்க, விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். யாகச்சாலை பூஜைகளை கொற்கை சிவாச்சாரியார் வெங்கடேசசிவம் தலைமையில் சிவாச்சாரியர்கள் செய்திருந்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் நீதிமணி, ஆய்வாளர் மதியழகன் மற்றும் திருப்பணி கமிட்டி பொறுப்பாளர்கள் பாலசுப்ரமணியன், சுவாமிநாதன், நடராஜன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். டி.எஸ்.பி., குருசாமி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.