பதிவு செய்த நாள்
11
ஜூலை
2011
11:07
வேலூர்: வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவில் 3வது மகா கும்பாபிஷேகம் மற்றும் புதிய தங்கத் தேர் கும்பாபிஷேகம் நேற்று காலை 9 மணி க்கு மேல் 10.30 மணிக்குள் நடந்தது.ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தலைமையில் நடந்த கும்பாபிஷேகத்தை தி அம்மா, ரத்தினகிரி பாலமுருகனடிமை ஸ்வாமிகள், கலவை சச்சிதானந்த ஸ்வாமிகள் முன்னிலையில் காஞ்சி காமகோடி பீடம் வேத பாடசாலை முதல்வர் உமாபதி தலைமையில் 150 சிவாச்சாரியார்கள் நடத்தினர்.தொடர்ந்து மகா அபிஷேகம், திருக்கல்யாணம், மண்டபாபிஷேகம், பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம் நடந்தது. விழாவில் லட்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.காஞ்சிபுரம் சைவ சித்தாந்த ஆகம சாகரம் தலைவர் ராஜப்பா, பொன்னை நவக்கிரக கோட்டை நவதி சுயம்பு வினாயகர் கோயில் தலைவர் வேலு, முன்னாள் வேலூர் மாவட்ட கலெக்டர் கங்கப்பா, வேலூர் மாவட்ட கலெக்டர் நாகராஜன், சகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் கோயில் தரும ஸ்தாபன தலைவர் கலவை சச்சிதானந்த ஸ்வாமிகள், செயலாளர் சுரேஷ் குமார், துணைத் தலைவர் வெங்கடசுப்பு, இணை செயலாளர் ராதா கிருஷ்ணன், தங்கத் தேர் கமிட்டி தலைவர் ரமேஷ் குமார் ஆகியோர் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக, மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு சிறப்ப பஸ்கள் இயக்கப்பட்டது.