Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » பகவானின் வர்ணனை
பகவானின் வர்ணனை
எழுத்தின் அளவு:
பகவானின் வர்ணனை

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
03:07

1 ஸாந்த்ராநந்தாவ போதாத்மகம்
அனுபமிதம் காலதேசாவதிப்ப்யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிகமசத
ஸஹஸ்ரேண நிர்பாஸ்யமாநம்
அஸ்பஷ்டம் த்ருஷ்ட மாத்ரே புநருரு
புருஷார்த்தாத்மகம் ப்ரஹ்ம தத்வம்
தத்தாவத்பாதி ஸாக்ஷாத் குருபவனபுரே
ஹந்த பாக்யம் ஜநாநாம்.

பொருள்: முழுமையான ஆனந்தமும் ஞானமும் தன்னுடைய வடிவமாகவே உடையது; எதனுடனும் ஒப்பிட முடியாதது; காலம் தேசம் போன்ற எல்லைகளைக் கடந்து நிற்பது; ஆயிரக்கணக்கான வேத நூல்களாலும் விவரித்துக் கூறப்பட்டாலும் உணர்த்தப் பட முடியாதது; அதனைக் கண்டவுடன் நமக்கு உயர்ந்த பலன்களை அளிக்க வல்லது; இப்படிப்பட்ட உயரந்த ஒரு ப்ரஹ்மம்,  குருவாயூரில் நின்ற ஒளிவீசுகிறது. இதனை அடைய மக்கள் செய்த புண்ணியம் என்னவோ? ஆச்சரியமாக உள்ளதே!

2 ஏவம் துர்லப்ய வஸ்துந்யபி
ஸுலபதாய ஹஸ்த லப்தே யதன்யத்
தன்வா வாசா தியா வா பஜதி பதஜன:
க்ஷுத்ரதைவ ஸ்புடேயம்
ஏதே தாவத் வயம் து ஸ்திரதர மனஸா
விச்வபீடாப ஹத்யை
நிச்சேஷாத்மான மேனம் குருபவன
புராதீசமேவ ஆச்ரயாம!

பொருள்: இப்படியாக கிடைப்பதற்கு மிகவும் அரிய ஒரு பொருள் நமக்கு எளிதாகக் கிடைக்கும்படி நின்று உள்ளது. நம்முடைய கைகளுக்கு எட்டிய தூரத்தில் உள்ளது. இதனை உணராமல் மனிதர்கள் தங்கள் உடலாலும் மனதாலும், வாக்காலும் மற்ற தெய்வங்களை நாடுகின்றனர். இது அவர்கள் அறியாமையே என்பது விளங்குகிறது. ஆனால் நாங்கள் உலகத்தில் உள்ளவர்களின் துன்பம் அனைத்தும் நீங்க, உறுதியான மனதுடன், அனைத்திற்கும் ஆத்மாவாக விளங்கும் இந்த குருவாயூரப்பனை மட்டுமே நாடி நிற்கிறோம்.

3 ஸ்த்த்வம் யத்தத் பராப்யாம் அபரி
கலனதோ நிர்மலம் தேநதாவத்
பூதைர் பூதேந்த்ரியை; தேவபுரிதி
பஹுச: ச்ரூயதே வ்யாஸ வாக்யம்
தத் ஸவச்சத்வாத் அச்சாதித பரஸுக
சித் கர்ப்ப நிர்ப்பாஸ ரூபம்
தஸ்மின் தன்யா ரமந்தே ச்ருதிமதி
மதுரே ஸுக்ரஹே விக்ரஹே தே

பொருள்: குருவாயூரப்பா! ரஜோ மற்றும் தமஸ் குணங்கள் கலவாமல் ஸத்வ குணம் மட்டுமே உள்ளதால் தோஷம் இல்லாமல் விளங்கக்கூடிய பஞ்ச பூதங்களாலும் பதினொரு இந்த்ரியங்களாலும் உனது திருமேனி ஆக்கப்பட்டது என்ற வேதவ்யாஸர் கூறுகிறார். இப்படியாக உனது திருமேனி உள்ளதால் அதற்குள் அடங்கிய ப்ரகாசமும் ஞானமும் ஆனந்தமும் மறையாமல் உள்ளது. இத்தகைய உனது அர்ச்சாவதார விக்ரஹத்தைக் கண்டும், அதனைப் பற்றிக் கேட்டும். அதனை த்யானித்தும் உனது அடியார்கள் மிகுந்த ஆனந்தம் பெறுகின்றனர்.

4 நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி
பரமானந்த பீயூஷ ரூபே
நிர்லீனானேக முக்தாவலி ஸுபகதமே
நிர்மல ப்ரஹ்ம ஸிந்தௌ
கல்லோ லோல்லாஸ துல்யம் கலு விமலதரம்
ஸ்த்வம் ஆஹு: ததாத்மா
கஸ்மந்நோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி
வசஸ்த்வத் கலாஸ்வேவ பூமந்

பொருள்: குருவாயூரப்பனே! நீ மாறுதல்கள் அடையாமலும், எப்போதும் முழுமை பெற்றவனாகவும், ஆனந்தம் அளிக்கும் அமிர்தம் போன்றும் உள்ளாய். இத்தகைய அமிர்தம் உள்ள கடலில் உனது அடியார்கள் முத்துக்கள் போல் நிரம்ப உள்ளனர். இத்தகைய ப்ரஹ்மம் ஆகிய கடலில் வீசும் அலைகள் உனது ஸத்வகுணம் ஆகும். பரிபூரணமாக உள்ளவனே (பூமன்) நீ நிஷ்கலன் (முழுமையானவன், பிரிக்கவே இயலாதவன்) என்பது உண்மையே. உன்னை ஸகலன் என்று கூறுவது நீ எடுத்த அவதாரங்கள் மூலமே பொருந்தும்.

5 நிர்வ்யா பாரோபி நிஷ்காரணம் அஜ பஜஸே
யத் க்ரியா மீக்ஷணாக்யாம்
தேனைவோதைதி லீநா ப்ரக்ருதி ரஸதி
கல்பாபி கல்பாதி காலே
தஸ்யா:ஸம் சுத்தம் அம்சம் கமபி தம்
அதிரோதாயகம் ஸத்வரூபம்
ஸத்வம் த்ருத்வா ததாஸி ஸ்வமஹிம
விபவாகுண்ட வைகுண்ட ரூபம்

பொருள்: தோற்றம் என்பதே இல்லாமல், பிறப்பில்லாமல் எப்போதும் உள்ள குருவாயூரப்பா! நீ செய்ய வேண்டும் என்று எந்தச் செயலும் இல்லை (அனத்திற்கும் உன்னால் ஏவப்பட்டவர்கள் உள்ளனர்.) இருந்தாலும் நீ பார்க்கும் பார்வையில் இருந்து ப்ரக்ருதி உண்டானது. அது ஸ்ருஷ்டிக்கு முன்னர் உன்னிடம் மறைந்து இருந்தது. கல்பம் தொடங்கியபோது அது உன்னிடம் இருந்து தோன்றியது. உனது மகிமையால் என்றும் குன்றாமல் உள்ள சக்தியை உடையவனே! வைகுண்டத்தில் உள்ளவனே! உனது சக்தியின் மூலம் மாயையான ப்ரக்ருதியின் ஸத்வ அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நீ இந்த ஒப்பற்ற உருவம் கொண்டுள்ளாய்.

6 தத்தே ப்ரத்யக்ர தாரா தரலலித
கலாயாவலீ கேலிகாரம்
லாவண்யஸ்ய ஏகஸாரம் ஸுக்ருதி ஜன
த்ருசாம் பூர்ண புண்ய அவதாரம்
லக்ஷ்மி நிச்சங்க லீலா நிலயனம்
அம்ருதஸ்யந்த ஸந்தோஹ மந்த:
ஸிஞ்சத் ஸஞ்சிந்தகானாம்
வபுரனுகலயே மாருதாகாரநாத

பொருள்: குருவாயூரப்பனே! உன்னுடைய திருமேனியானது எப்படி உள்ளது? நீர் கொண்ட மேகம் போன்று கறுத்தும் அழகாகவும்; காயம்பூ மலர் போன்று மனதிற்கு இன்பம் அளிப்பதாகவும்; எல்லையற்ற அழகிற்கு இருப்பிடமாகவும்; புண்ணியம் செய்த மனிதர்களுக்கு முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் விளைவாகவும்; மஹாலக்ஷ்மீ மிகவும் விரும்பி விளையாடும் இடமாகவும்; த்யானம் செய்பவர்களின் மனதில் அமிர்தம் போன்ற இனிமை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இதனை, இந்தத் திருமேனியை நான் எப்போதும் த்யானிக்கிறேன்.

7 கஷ்டா தே ஸ்ருஷ்டி சேஷ்டா
பஹுதரபவ கேதாவஹா ஜீவபாஜாம்
இத்யேவம் பூர்வம் ஆலோசிதம் அஜித
மயா நைவமத்யாயி ஜானே
நோ சேஜ்ஜீவா: கதம் வா மதுரதரமிதம்
த்வத்வபு: சித்ர ஸார்த்ரம்
நேத்ரை: ச்ரோத்ரை: ச பீத்வா
பரமரஸ ஸுதாம்போதிபூரே ரமேரந்

பொருள்: யாராலும் வெல்ல முடியாதவனே! குருவாயூரப்பா! நீ ஸ்ருஷ்டிப்பதால் மனிதர்கள் இந்த உலகில் பிறக்கின்றனர். அப்படிப் பிறந்த பின்னர் பலவகையான துயரங்களை அனுபவிக்கின்றனர். ஆக உன்னுடைய ஸ்ருஷ்டி என்பது மனிதர்களுக்குத் துன்பம் அளிக்கவே உள்ளது என்று ஒரு காலத்தில் நான் எண்ணியது உண்டு. உன்னைக் கண்ட பின்னர் என்னுடைய இந்த எண்ணம் தவறு என்று அறிந்தேன்! நீ அப்படி எங்களை உருவாக்கவில்லை என்றால், பரமானந்தம் அளிக்கும் உனது இந்தத் திருமேனியை எப்படிக் காண இயலும் ? காதுகளால் உனது பெருமைகளை எப்படிக் கேட்க இயலும்? எப்படி ஆனந்தக் கடலில் மூழ்கவும் முடியும்?.

8 நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததம் அபி
புரஸ்தைர் அநப்யர்த்திதானபி
அர்த்தான் காமாந் அஜஸ்ரம் விதரதி
பரமானந்த ஸாந்த்ராம் கதிம்ச
இத்தம் நி: சேஷலப்ப்யோ நிரவதி பல:
பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷுத்ரம் தம் சக்ரவாடீ த்ருமம் அபிலஷதி
வ்யர்த்தம் அர்த்திவ்ரஜ: அயம்

பொருள்: ஹரே குருவாயூரப்பா! நீ எளிதாக அடையக் கூடியவனாகவும் கேட்ட பலன்களை உடனே அளிப்பவனாகவும், பாரிஜாத மரம் போன்றும் உள்ளாய். உன்னை வழிபடுவோர்களுக்கு அனைத்தையும் நிரம்ப வழங்குகின்றாய். என்ன கேட்பது என்று அறியாதவர்கள் மனதில் உள்ள விருப்பத்தைப் புரிந்தும் அளிப்பவன் நீயே. அவர்களுக்கு மிகுந்த ஆனந்தம் அளிப்பவனும் மோட்சம் அளிப்பவனும் நீயே. இப்படி நீ எளிதாக அடைய உள்ளவனாக இருந்தும் மனிதர்கள் தேவலோகத்தில் உள்ள கற்பக மரம் போன்ற அற்ப விஷயங்களையே விரும்புகின்றனரே! (அர்த்தா=அறம், பொருள், வீடு, இன்பம்).

9 காருண்யாத் காமம் அன்யம் தததி கலு
பரே ஸ்வாத்மதஸ்த்வம் விசேஷாத்
ஐச்வர்யாத் ஈசதே அன்யே ஜகதி
பரஜனே ஸ்வாத்மனோ அபீ ஈச்வர; த்வம்
த்வயி உச்சை: ஆரமந்தி ப்ரதிபத
மதுரே சேதனா: ஸ்பீதபாக்யா:
த்வம் ச ஆத்மாராமா ஏவ இதி அதுல
குணகணாதார சவுரே நமஸ்தே

பொருள்: இனிமையான திருக்கல்யாண குணங்கள் உடைய வாஸுதேவனே! குருவாயூரப்பா! இந்த உலகில் உள்ள பல தெய்வங்கள்,  தன்னை வணங்கும்பவர்களுக்கு தங்களை அல்லாமல் மற்றவற்றை மட்டுமே வழங்குகின்றன. நீயோ உன்னை வணங்குபவர்களுக்கு உனது ஆத்மாவையே (உன்னையே) கொடுக்கின்றாய், மற்ற தெய்வங்கள் ஐஸ்வர்யத்தின் மூலமும் அணிமா போன்ற சக்திகளின் மூலமாக தங்களது ஈச்வர தன்மையை விளக்குகின்றன. நீயோ ஆத்மாவையே வென்று அதனை நிரூபிக்கின்றாய். புண்ணியம் செய்தவர்கள் உன்னையே அடைந்து உயர்ந்த ஆனந்தம் அடைகின்றனர். யாரிடமும் எதனையும் எதிர்பாராமல் உள்ளவனே! ஆனந்த ரூபனே! உனக்கு நமஸ்காரம்.

10 ஐச்வர்யம் சங்கராதீச்வரவி நியமனம்
விச்வதேஜோ ஹராணாம்
தேஜ: ஸம்ஹாரி வீர்யம் விமலமபி யசோ
நிஸ்ப்ருஹை: ச உபகீதம்
அங்கா ஸங்கா ஸதா ஸ்ரீ: அகில வித் அஸி
ந க்வாபி தே ஸங்கவார்த்தா
தத்வாதாகார வாஸின் முரஹர பகவச்
சப்த முக்யாச்ரய: அஸி

பொருள்: முரன் என்ற அசுரனைக் கொன்றவனே! ஹரியே! குருவாயூரில் என்றும் வாசம் செய்பவனே! உன்னுடைய செல்வம் எது? சங்கரன் போன்றவர்களை அவர்கள் கடமைகளில் அவர்களை ஈடுபட வைப்பது அன்றோ! அனைவரின் சக்தியையும் அபகரிக்கும் திறன் உடைய சங்கரனின் சக்தியையும் அபகரிக்கும் திறன் உடையவன் நீயே. உன்னுடைய புகழை முற்றும் துறந்த முனிவர்கள் பாடுகின்றனர். உன்னுடைய உடலில் மஹாலக்ஷ்மி எப்போதும் வசித்து வருகிறாள். நீ அனைத்தையும் அறிந்தவன். எதிலும் பற்று இல்லாமல் உள்ளாய். பகவான் என்ற பதத்திற்கு இலக்கணமாக உள்ளாய். (பகவான் என்ற பதம் ஆறு குணங்களைக் குறிக்கும்-ஐச்வர்யம், புகழ், தேஜஸ், செல்வம், ஞானம் மற்றும் வைராக்யம்).

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar