Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » பகவானின் அழகு
பகவானின் அழகு
எழுத்தின் அளவு:
பகவானின் அழகு

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
03:07

1 ஸுர்ய ஸ்பர்த்தி கிரீடம் ஊர்த்வ திலக
ப்ரோத்பாஸி பாலாந்தரம்
காருண்யாகுல நேத்ரம் ஆர்த்ர
ஹலிதோல்லாஸம் ஸுநாஸாபுடம்
கண்டோத்யன் மகராப குண்டலயுகம்
கண்டோஜ்வலத் கவுஸ்துபம்
த்வத்ரூபம் வனமால்ய ஹாரபடல
ஸ்ரீவத்ஸ தீப்ரம் பஜே

பொருள்: குருவாயூரப்பனே! உன்னுடைய க்ரீடம் சூரியனைவிட பல மடங்கு ஒளியுடையதாக உள்ளது. அழகாக நெற்றியில் இடப்பட்டுள்ள திலகத்தால் நெற்றி ஒளி வீசுகிறது. கண்களில் கருணை ததும்பி உள்ளது. அந்தக் கண்கள் புன்னகையும் வீசிச் சிரிக்கின்றன; மூக்கு எடுப்பாக உள்ளது; காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள் மீன் போன்று கன்னங்களில் வந்து வந்து இடித்து நிற்கின்றன; கழுத்தில் கவுஸ்துபம் என்ற மணி ஒளி வீசுகிறது; திருமார்பில் வைஜயந்தி என்ற மாலையும் முத்து மாலையும் உள்ளன; மேலும் ஸ்ரீவத்ஸம் கொண்டதுமாக உனது மார்பு உள்ளது. இத்தனை அழகான உனது உருவத்தை நான் த்யானம் செய்கிறேன்.

2 கேயூராங்கத கங்கணோத்தம
மஹாரத்ன அங்குலீயாங்கித
ஸ்ரீமத்பாஹு சதுஷ்க ஸங்க கதா
சங்க்காரி பங்கேருஹாம்
காஞ்சித் காஞ்சன காஞ்சி ஸாஞ்சித
லஸத் பீதாம்பராலம்பினீம்
ஆலம்பே விமலாம் புஜத்யுதிபதாம்
மூர்த்திக் தவ ஆர்த்திச்சிதம்

பொருள்: ஸ்ரீஅப்பனே! உன்னுடைய நான்கு கைகளில் வளையல்கள், அங்குத ஆபரணம், கங்கணம், ரத்னம் உள்ள மோதிரங்கள் உள்ளன. அந்தக் கைகள் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை மலர் ஆகியவற்றை ஏந்தி உள்ளன. உனது இடுப்பில் அரைஞான கயிறும் பட்டு ஆடையான பீதாம்பரமும் உள்ளன. உனது திருவடிகள் தாமரை மலர் போன்று அழகாக சிவந்து தூய்மையாக உள்ளன. உனது இத்தகைய அழகான திருமேனியைக் கண்டவர்களது துன்பங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. இதனை நான் சரணம் என்று அடைகிறேன்.

3 யத் த்ரைலோக்ய மஹீயஸ: அபி
மஹிதம் ஸம்மோஹனம் மோஹநாத்
காந்தம் காந்தி நிதானத:
அபி மதுரம் மாதுர்ய துர்யாதபி
ஸௌந்தர்யோத்தரோபி ஸுந்தரதரம்
த்வத்ரூபம் ஆச்சர்யதோபி
ஆச்சர்யம் புவநே ந கஸ்ய குதுகம்
புஷ்ணாதி விஷ்ணோ விபோ

பொருள்: அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளவனே (விபோ) விஷ்ணுவே! உனது உருவம் எப்படிப்பட்டது? மூன்று உலகிலும் பெருமையும் சிறந்தும் உடைய பொருள் எது இருந்தாலும் அதனை விட சிறந்ததாக உள்ளது; எந்தப் பொருள் அனைவரது மனதையும் கவருமோ அந்தப் பொருளை விட உனது திருமேனி கவரக்கூடியது; எந்தப் பொருள் கவர்ச்சியும் ஒளியும் கொண்டதோ அதனை விடக் கவர்ச்சியும் ஒளியும் உடையது; எது மிகவும் இனிமையாக உள்ளதோ அதனை விட இனிமையானது; எது அழகாக உள்ளதோ அதனைவிட அழகு நிறைந்ததாக உள்ளது; எது வியப்பை அளிக்கிறதோ அதனை விட வியப்பை அளிப்பதாக உள்ளது. இத்தனை சிறப்புடைய உனது திருமேனி யாருக்குத்தான் மன மகிழ்வை அளிக்காது?

4 தத்தாத்ருங் மதுராத்மகம் தவ வபு;
ஸம்ப்ராப்ய ஸம்பந்மயீ
ஸா தேவீ பரமோத்ஸுகா சிரதரம்
ந ஆஸ்தே ஸ்வபக்தேஷ்வபி
தேன அஸ்யா: பத கஷ்டம் அச்யுத விபோ
த்வத்ரூப மனோஜ்ஞக
ப்ரேமஸ்தைர்யமயாத் அசாபல பலா
சாபல்ய வார்த்தோதபூத்

பொருள்: எங்கும் உள்ளவனே! உனது அடியார்களை கைவிடாதவனே! (அச்யுதன்) அனைத்து ஐச்வர்யங்களுக்கும் இருப்பிடமாக உள்ளவன் மஹாலக்ஷ்மீ. அவள், ஒப்பு இல்லாத உயர்ந்த உனது திருமேனியை அடைந்து, அதனால் மிகவும் மனமகிழ்வு அடைந்து, தங்கிவிட்டாள். இதனால் அவள் தன்னுடைய அடியார்களிடம் கூட தங்கியிருப்பதில்லை. இதனால் அவளுக்கு சபலம் உடையவள். நிலை அற்றவள் என்ற அவப்பெயர் அல்லவா உண்டானது.

5 லக்ஷ்மீஸ்தாவக ராமணீயக
ஹ்ருதைவேயம் பரேஷ்வஸ்த்திரேதி
அஸ்மிந் அந்யத் அபி ப்ரமாணமதுநா
லக்ஷ்யாமி லக்ஷ்மீபதே
யே த்வத் த்யான குணாநு கீர்த்தன
ரஸாஸக்தா ஹி பக்த ஜநா;
தேஷ்வேஷா வஸதி ஸ்த்திரைவ தயித
ப்ரஸ்தாவ தத்தாதரா

பொருள்: குருவாயூரப்பா! மஹாலக்ஷ்மியின் நாயகனே! பதியே! உன்னுடைய திருமேனி அழகில் மிகவும் கவரப்பட்டு உன்னுடன் இருக்கும் மஹாலக்ஷ்மி பிறரிடம் இருப்பதில்லை என்பதற்கு இன்னும் ஓர் ஆதாரமும் உள்ளது. உன்னைப் பற்றியும் உனது திருக்கல்யாண குணங்களைக் குறித்தும் நாம ஸங்கீர்த்தனம் செய்யும் உனது அடியார்கள் - இவர்கள் எனது கணவரைப் பற்றி அன்றோ கூறுகிறார்கள். - என்று மகிழ்ந்து அவர்களிடமும் வாசம் செய்கிறாள் அன்றோ! இதன் மூலம் உன்னைப் பற்றிக் கூறாதவர்களிடம் மட்டுமே இவள் நிலையாக இருப்பதில்லை என்று உணரலாம்.

6 ஏவம்பூத மநோஜ்ஞதா நவஸுதா
நிஷ்யந்த ஸந்தோஹனம்
த்வத்ரூபம் பரசித் ரஸாயனமயம்
சேதோஹரம் ச்ருண்வதாம்
ஸத்ய: ப்ரேரயதே மதிம் மதயதே
ரோமாஞ்சயதி அங்ககம்
வ்யாஸிஞ்சத்யபி சீதபாஷ்ப விஸரை;
ஆனந்த மூர்ச்சோத்பவை;

பொருள்: குருவாயூரப்பா! கடந்த ஸ்லோகத்தில் கூறியதுபோல் உள்ள உனது அழகானது அமிர்தத்தை வழங்குவதாகவும். ஆனந்த வடிவமாகவும், பார்ப்பவர்கள் உள்ளத்தைக் கவருவதாகவும் இருக்கிறது. உனது திருமேனி அழகை ஒருமுறை யாராவது கூறக்கேட்டால் அதனைத் திரும்பத் திரும்பக் கேட்க மனம் துள்ளுகிறது. அப்படிக் கேட்டவுடன் மனதைப் பரவசம் நிரப்புகிறது. உடல் எங்கும் மயிர்க்கூச்சல் உண்டாகிறது. ஆனந்தக் கண்ணீர் பெருகி உடல் முழுவதும் நனைந்து விடுகின்றது.

7 ஏவம் பூததயா ஹி பக்த்யபிஹிதோ
யோக: ஸ யோகத்வயாத்
கர்மஜ் ஞான மயாத ப்ருசோத்தமதரோ
யோகீச்வரைர் கீயதே
ஸௌந்தர்யைக ரஸாத்மகே த்வயி
கலு ப்ரேம ப்ரகர்ஷாத்மிகா
பக்திர் நி: ச்ரமம் ஏவ விச்வ புருஷைர்
லப்ப்யா ரமாவல்லப

பொருள்: லக்ஷ்மியின் நாயகனே! குருவாயூரப்பா! மேலே உள்ள ஸ்லோகத்தின் நிலை நமக்கு உண்டாவதால்தான் பக்தி யோகமே சிறப்பானது என்று கூறப்பட்டது. இது கர்மயோகம், ஞானயோகம், ஆகியவற்றை விட உயர்ந்தது என்று யோகிகள் கூறுகின்றனர். அழகின் இருப்பிடமாகவே உள்ள உன்னிடம் காதலின் விளைவால் உண்டாகும் பக்தியோகம் மனிதர்களுக்கு எளிதில் கைகூடும் அல்லவா?

8 நிஷ்காமம் நியதஸ்வ தர்ம சரணம்
யத்கர்ம யோகா பிதம்
தத்தூரேத்ய பலம் யத் ஓளபநிஷத
ஜ்ஞானோ பலப்யம் புன;
தத் அவ்யக்ததயா ஸுதுர்கமதரம்
சித்தஸ்ய தஸ்மாத் விபோ
த்வத் ப்ரேமாத்மக பக்திரேவ ஸததம்
ஸ்வாதீயஸீ ச்ரேயஸீ

பொருள்: எங்கும் நிறைந்துள்ள குருவாயூரப்பா! எந்த விதமான பலனையும் விரும்பாமல், தனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்வது கர்மயோகம், இது பலநாள் கழித்தே பலன் அளிக்கும். உபநிஷத்துக்களை நன்கு கற்பதன் மூலம் ஞானயோகம் கைகூடும். ஞானயோகத்தின் பலன் இந்த்ரியங்களால் அனுபவிக்கவோ உணரவோ இயலாது, ஆகக் கடினமானது, எனவே இந்த இரண்டை விட, உன் மீது வைக்கும் பக்தி மூலம் கிட்டும் பக்தி யோகமே இனிமையானதும் சிறப்பானதும் ஆகும்.

9 அத்யாயாஸ கராணி கர்மபடலான்
ஆசர்ய நிர்யந் மலா;
போதே பக்தி பதேபி அதவாபி உசிததாம்
ஆயாந்தி கிம் தாவதா
க்லிஷ்ட்வா தர்க்கபதே பரம் தவ
வபுர் ப்ரஹ்மாக்க்யம் அந்யே புந;
சித்தார்த் ரத்வம் ருதே விசிந்த்ய பஹுபி:
ஸித்யந்தி ஜன்மாந்தரை:

பொருள்: ஸ்ரீஅப்பனே! மிகுந்த கடினத்துடன் தங்கள் கடமைகளைச் செய்து, அதன் மூலம் தங்கள் மன இருளை நீக்கி, இதனால் ஞானயோகத்திற்கும் பக்தி யோகத்திற்கும் தங்களைக் தகுதி உடையவர்களாக சிலர் செய்து கொள்கின்றனர். இதனால் என்ன பயன்? உனது அழகால் உள்ளத்தில் நெகிழ்வு உண்டாகாமல், வேதாந்தம் தர்க்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு, ப்ரஹ்மம் என்று உன்னைத் த்யானித்து, பல பிறவிகள் கடந்து உன்னை அடைகின்றனர்.

10 த்வத் பக்திஸ்து கதா ரஸாம்ருதஜரீ
நிர்மஜ்ஜனேன ஸ்வயம்
ஸித்த்யந்தீ விமல ப்ரபோத பதவீம்
அக்லேசத; தன்வதீ
ஸத்ய: ஸித்திகரீ ஜயத்யிவிபோ
ஸைவாஸ்துமே த்வத்பத
ப்ரேம ப்ரௌடி ரஸார்த்ரதர த்ருத்தரம்
வாதால யாதீச்வர

பொருள்: ப்ரபுவான குருவாயூரப்பனே! உன்னிடம் உள்ள பக்தி என்பது உனது லீலைகள் நிரம்பிய கதைகளில் அல்லவா உள்ளது? அவை அமிர்தம் போன்று உள்ளன. அவை (கதைகள்) எந்தச் சிரமமும் இன்றி உனது மார்க்கத்தைக் காண்பிக்கின்றன. பிறவியின் பயனை உடனே அளிக்கின்றன. உன்னுடைய திருவடிகளில் நான் பொதிந்து கிடக்கும் அந்த பக்தி எனக்குச் சீக்கிரமாக உண்டாக வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar