பதிவு செய்த நாள்
08
ஜூலை
2015
03:07
1 வ்யக்தா வ்யக்தம் இதம் ந கிஞ்சித்பவத்
ப்ராக் ப்ராக்ருத பரக்ஷயே
மாயாயாம் குண ஸாம்ய ருத்த விக்ருதௌ
த்வயி ஆகதாயாம் லயம்
நோ ம்ருத்யு: ததா அம்ருதம் ச
ஸமபூம் நாஷ்நோ ந ராத்ரே: ஸ்த்திதி:
தத்ர ஏக: த்வம் அசிஷ்யதா:
கில பரானந்த ப்ரகா சாத்மனா
பொருள்: குருவாயூரப்பனே! முன்னர் மஹாப்ரளயம் உண்டானபோது ஸத்வ, ரஜோ, தமஸ் குணங்கள் சமமாக இருந்தன. அப்போது மாயை உன்னிடம் ஒடுங்கியே இருந்தது. அச்சமயம் ஸ்தூலமாகவும் சூட்சுமமாகவும் காணப்படும் இந்தப் ப்ரபஞ்சமே இல்லை. அப்போது பிறப்பும், இறப்பும், பகலும், இரவும் ஆகிய எதுவும் இல்லை. நீ மட்டுமே உனது சச்சிதானந்தத் திருமேனியுடன் தனியாக இருந்தாய் அல்லவா?
2 கால: கர்ம குணாச்ச ஜீவநிவஹா
விச்வம் ச கார்யம் விபோ
சில்லீலா ரதிம் ஏயுஷி த்வயி ததா
நிர்லீனதாம் ஆயயு:
தேஷாம் நைவ வதந்தி அஸத்வம் அயிபோ:
சக்த்யாத்மனா திஷ்டதாம்
நோ சேத் கிம் ககனப்ரஸுந
ஸத்ருசாம் பூயோ பவேத் ஸம்பவ:
பொருள்: ஸ்ரீஅப்பனே! ப்ரளயத்திற்கு முன்பு நீ உனது உன்னதமான ஆனந்தமான லீலையில் இருந்தாய், அப்போது மூன்று குணங்கள், காலம், கர்மங்கள், அனைத்து உயிர்கள், காரியமான ப்ரபஞ்சம் ஆகிய அனைத்துமே மறைவாக இருந்தன. அவை இல்லை என்று வேதங்கள் கூறவில்லை. அப்படி அவை இல்லாமல் இருந்தால் ஆகாய மலர் போன்று மீண்டும் எப்படித் தோன்ற இயலும்? (ஆகாய மலர் - கற்பனையான பொருள்).
3 ஏவம் ச த்விபரார்த்த காலவிகதௌ
ஈஷாம் ஸிஸ்ருக்ஷாத்மிகாம்
பிப்ராணே த்வயி சுக்ஷுபே த்ரிபுவனீ
பாவாய மாயா ஸ்வயம்
மாயாத: கலு காலசச்தி: அகிலாத்ருஷ்டம்
ஸ்வபாவ: அபிச
ப்ராதுர்பூய குணாந் விகாஸ்ய விதது:
தஸ்யா: ஸஹாயக்ரியாம்
பொருள்: குருவாயூரப்பனே! மேலே கூறிய நிலையானது இரண்டு பரார்த்தம் வரை நீடிக்க நீ நினைத்தாய் (இரு பரார்த்த காலம் - ப்ரம்மனின் ஆயுள்) அந்தக் காலம் முடிந்த பின்னர் நீ ஸ்ருஷ்டி செய்ய வேண்டும் என்று விரும்பினாய் (இது வேதங்களில் - தத்ஜக்ஷத பஹுஸ்யாம் - நான் பலவாக மாறுவேன் என்று உள்ளது). அதற்கான உன் பார்வையைக் கண்டு மாயை கலங்கியது. அந்த மாயையில் இருந்து காலம் என்னும் சக்தியும், கர்மங்களும், கர்மங்களுக்கு ஏற்ற சுபாவங்களும் தோன்றி அவை மாயைக்கு உதவியாக இருந்தன.
4 மாயா ஸன்னிஹித: அப்ரவிஷ்ட வபுஷா
லாக்ஷீ இதி கீத: பவான்
பேதை: தாம் ப்ரதிபிம்பதோ விவிசிவான்
ஜீவோபி நைவாபர:
காலாதி ப்ரதி போதிதா அத பவதா
ஸம்சோதிதாச ஸ்வயம்
மாயா ஸா கலு புத்தி தத்வம் அஸ்ருஜத்
யோ அஸௌ மஹான் உச்யதே
பொருள்: ஸ்ரீ அப்பனே! நீ மாயைக்கு அருகாமையில் இருந்தாலும் அதனுடன் கலவாத ரூபத்துடன் உள்ளதால் உன்னை பலரும் ஸாக்ஷீ (பார்க்கக் கூடியவன்) என்று கூறிகின்றனர். அந்த மாயையின் பிரதிபிம்பமாக, ஆனால் வேறுபட்டதாகத் தோன்றும் ஜீவனும் நீயே ஆவாய். காலம், கர்மம், சுபாவம் என்று பலவாக உன்னால் ஏவப்பட்ட அந்த மாயையே விளங்குகின்றது. அது புத்தி தத்துவம் எனப்படும் மஹத் தத்துவத்தை உண்டாக்கியது.
5. தத்ர அஸௌ த்ரிகுணாத்மகோ அபி ச
மஹான் ஸத்வ ப்ரதான ஸ்வயம்
ஜீவே அஸ்மின் கலு நிர்விகல்பம் அஹம்
இதி உத்போத நிஷ்பாதக:
சக்ரே அஸ்மின் ஸவிகல்ப போதகம்
அஹம் தத்வம் மஹான் கல்வஸௌ
ஸம்புஷ்டம் திரி குணை; தமோதி பஹுலம்
விஷ்ணோ பவத் ப்ரேரணாத்
பொருள்: விஷ்ணுவே! குருவாயூரப்பா! மஹத் தத்துவம் என்பது மூன்று குணங்கள் சேர்ந்ததாக இருந்தாலும், அது ஸத்வ குணத்தையும் அதிகமாக உருவெடுக்கச் செய்து மனிதர்களிடத்தில் நான் என்ற அறிவை உண்டாக்குகிறது. மேலும் அதே மஹத் தத்துவம், தமோ குணத்தை அதிகரித்து மனிதனிடம் நான் பெரியவன். போன்ற மமதையை (அஹங்காரம்) வளர்க்கின்றது.
6 ஸ: அஹம் ச த்ரிகுணக்ரமாத் த்ரிவிததாம்
ஆஸாத்ய வைகாரிகோ
பூய: தைஜஸ தாமஸென இதி
பவன் ஆத்யேன ஸர்வாத்மனா
தேவான் இந்த்ரியம் ஆனினோ அக்ருத
திசாவாதார்க்க பாச்யச் வினோ
வஹ்நீந்த்ராச்யுத மித்ரகான்
விதுவிதி ஸ்ரீருத்ர சாரீரகான்
பொருள்: குருவாயூரப்பனே! மேலே கூறிய அஹங்காரம் என்பது மூன்று குணங்களாக உருவெடுத்தது. அவையாவன - வைகாரிகம் (இது ஸத்வ குணம் ஆகும்). (இது ராஜஸ குணம் ஆகும்). மற்றும் தாமஸம் ஆகும். இவற்றுள் முதலாவதாக <உள்ள ஸத்வ குணத்தில் இருந்து திசைகள், வாயு, சூரியன், வருணன், அச்வினிகள், அக்னிதேவன், இந்திரன், விஷ்ணுமித்ரன், ப்ரஜாபதி, சந்திரன், ப்ரும்மா, ருத்ரன், க்ஷேத்ரக்ஞன் ஆகிய தேவதைகள் தோன்றினர்.
7. பூமன் மானஸ புத்யஹம் க்ருதிமிலச்
சித்தாக்ய வ்ருத்யன் வீதம்
தத்ச அந்த: கரணம் விபோ தவ பலாத்
ஸத்வாம் ச ஏவ அஸ்ருஜத்
ஜாத: தைஜஸத: தசேந்த்ரிய கண:
தத்தாமஸம் சாத்புன:
தன்மாத்ரம் நபஸோ மிருத்புரபதே
சப்த: அஜனி த்வத் பலாத்
பொருள்: அனைத்து இடத்திலும் விளங்கி நிற்கும் குருவாயூரப்பனே! உன்னுடைய ஆணைக்கு இணங்க ஸாத்விக அஹங்காரம் என்பது மனம், புத்தி, அஹங்காரம் என்பவை இணைந்த சித்தம் என்பதைப் படைத்தது. ராஜஸ அஹங்காரம் என்பது பத்து இந்த்ரியங்களை உண்டாக்கியது. எஞ்சியுள்ள தாமஸ அஹங்காரம் என்பது ஆகாயத்தின் சூட்சுமமாக உள்ள சப்தத்தை உண்டாக்கியது.
8. சப்தாத் வயோம தத: ஸஸர்ஜித விபோ
ஸ்பர்சம் ததோ மாருதம்
தஸ்மாத் ரூபமதோ மஹத ச ரஸம்
தோயம் ச கந்தம் மஹீம்
ஏவம் மாதவ பூர்வ பூர்வ கலனாத்
ஆத்யாத்ய தர்மான் வீதம்
பூதக் ராமம் இமம் த்வமேவ பகவன்
ப்ராகாசய: தாமஸத்
பொருள்: மஹாலக்ஷ்மி என்றும் உறைபவனே (மாதவ! குருவாயூரப்பனே! பகவானே! ஓசையில் இருந்து ஆகாயமும், ஆகாயத்தில் இருந்த ஸபர்ஸ (தொடு) உணர்ச்சியும், ஸ்பர்ஸத்தில் இருந்து வாயுவும், வாயுவில் இருந்து ரூபமும், ரூபத்தில் இருந்து அக்னியும் உண்டானது. அக்னியில் இருந்து ரஸ்மும், ரஸத்தில் இருந்து நீரும், நீரில் இருந்து மணமும், மணத்தில் இருந்து பூமியும் உண்டானது. இப்படியாக வரிசையாக பஞ்ச பூதங்களை நீ தாமஸ அஹங்காரத்தில் இருந்து தோற்றுவித்தாய் அல்லவோ?
9. ஏதே பூதகணா: தத்இந்த்ரிய கணா
தேவா: ஜாதா: ப்ருதக்
நோ சேகு: புவனாண்ட நிர்மிதி
விதௌ தேவை: அமீபி: ததா
த்வம் நானாவித ஸுக்திபி: நுதகுண:
தத்வாத் யமூந் யாவிசம்
சேஷ்டா சக்திம் உதீர்ய தானி
கடயன் ஹைரண்ய மண்டம் வ்யதா:
பொருள்: ஸ்ரீ அப்பனே! இப்படியாகத் தோன்றிய பஞ்ச பூதங்கள் ஐந்தும், அவற்றின் தேவதைகளும் தனித்தனியாக இருந்தன. ஆகவே அவற்றால் எந்த ஸ்ருஷ்டியையும் செய்ய இயலவில்லை. அப்போது அந்தத் தேவதைகள் பலவிதமான ஸ்தோத்திரங்கள் மூலம் உன்னையும் உனது திருக்கல்யாண குணங்களையும் துதித்தன. உடனே நீ மஹத் போன்ற தத்துவங்களில் புகுந்து உண்டாக்கும் சக்தியை அளித்தாய். அதன் மூலம் பொன் போன்ற ப்ரம்மாண்டம் உருவானது.
10. அண்டம் தத்கலு பூர்வ ஸ்ருஷ்டஸலிலே
அதிஷ்டத் ஸஹஸ்ரம் ஸமா:
நிர்ப்பிந்தன் அக்ருதா: சதுர்தச
ஜகத்ரூபம் விராடாஹ்வயம்
ஸாஹஸ்ரை: கரபாத மூர்த்த
நிவஹை: நி: சேஷ ஜீவாத்மக;
நிர்பாத: அஸி ம்ருத்புராதிப ஸ மாம்
த்ராயஸ்வ ஸர்வாமயாத்
பொருள்: குருவாயூரப்பனே! இப்படி உருவான அண்டமானது. நீ முன்பே உருவாக்கிய நீரில் ஆயிரம் வருடம் இருந்தது. நீ அதனைப் பிளைந்தாய். அப்போது பதினான்கு லோகங்களின் ரூபம் கொண்டு விராட் புருஷன் என்ற உருவம் கொண்டாய். பல ஆயிரக்கணக்கான கைகள், கால்கள் தலைகள் போன்றவற்றுடன் அனைத்து உயிர்களுமாக நீயே தோன்றினாய் இப்படிப்பட்ட நீ எனது நோய்களில் இருந்து என்னைக் காக்க வேண்டும்.