பதிவு செய்த நாள்
08
ஜூலை
2015
04:07
1. ஹிரண்யாக்ஷம் தாவத் வரத பவதந் வேஷணபரம்
சரந்தம் ஸாம்வர்த்தே பயஸி நிஜ ஜங்கா பரிமிதே
பவத்பக்த: கத்வா கபடபடுதீ: நாரதமுனி:
சனை: ஊசே நந்தன் தனுஜம் அபி நிந்தந் தவ பலம்
பொருள்: வரங்களை அளிக்கும் குருவாயூரப்பனே! இப்படியாக நீ பூமியை மீட்டு வந்த பின்னர், ப்ரளய ஜலத்தில் உன்னை இரண்யாக்ஷன் தேடினான். அந்த நீர் அவனுக்கு முழங்கால் அளவே இருந்தது. அப்போது அவனிடம் சென்ற நாரதர் அவனைப் பாராட்டியும் உனது பலத்தை இகழ்வாகவும் கூறினார் அல்லவா? இங்கு நாரதரை பட்டத்ரி எப்படி வர்ணிக்கிறார்? உன்னுடைய பக்தனும், கபடமாக பேசி மனதை மயக்குவதில் வல்லவரும் ஆகிய நாரதர் என்று கூறுகிறார். பகவான் பலத்தை நாரதர் குறைவாகக் கூறவேண்டிய காரணம் என்ன? அப்படிக் கூறினால் மட்டுமே தனது சொல்லை இரண்யாக்ஷன் கேட்பான் என்ற காரணத்தினால் ஆகும்.
2. ஸ மாயாவீ விஷ்ணு: ஹரதி பவதீயாம் வஸுமதீம்
ப்ரபோ குஷ்டம் கஷ்டம் கிமிதம் தேன: அபிகதித:
நதன் க்வ அஸௌ க்வ அஸௌ இதி ஸ முனினா தர்சிதபத:
பவந்தம் ஸம்ப்ராபத் தரணிதரம் உத்யந்தம் உதகாத்
பொருள்: குருவாயூரப்பனே! நாரதர் இரண்யாக்ஷனிடம், மாயாவியான விஷ்ணு உன்னிடம் இருந்து நீ வைத்திருந்த பூமியை அபகரித்துச் செல்கிறான். கஷ்டம்! கஷ்டம்! என்று கூறினார். இதனைக் கேட்ட இரண்யாக்ஷன், அந்த விஷ்ணு எங்கே! அந்த விஷ்ணு எங்கே! என்று சத்தம் எழுப்பிக் கொண்டு வந்தான். பின்னர் நாரத முனிவரால் காண்பிக்கப்பட்ட பாதையில் வந்து - பூமியை தூக்கிக் கொண்டு நிற்கின்றவனும், ஸமுத்திரத்தில் இருந்து வெளியில் வந்தவனும் ஆகிய உன்னிடம் வந்தான் அல்லவா?
3. அஹோ ஆரண்ய அயம் ம்ருக இதி
ஹஸந்தம் பஹுதரை:
துருக்தை: வித்யந்தம் திதிஸுதம்
அவக்ஞாய பகவன்
மஹும் த்ருஷ்ட்வா தம்ஷ்ட்ராசிரஸி
சகிதாம் ஸவேந மஹஸா
பயாதௌ ஆவாதாய ப்ரஸபம்
உதயுங்க்தா ம்ருதவிதௌ
பொருள்: பகவானே! குருவாயூரப்பனே! உன்னைக் கண்ட அந்த அசுரன், இது என்ன காட்டில் இருக்க வேண்டிய விலங்கா? என்று பரிகாசம் செய்து நகைத்தான். உன்னைப் பலவிதமான தீயச் சொற்களால் திட்டினான். திதியின் மகனான அவனை நீ பொருட்படுத்தாமல், உனது பல்லில் இருந்து கொண்டு இதனைக் கண்டு பயந்து நடுங்கிய பூதேவியை, உன்னுடைய சக்தியால் நீரின் மீது மூழ்காமல் நிலையாக இருக்கும்படி நிறுத்தினாய். அதன் பின்னர் அவனுடன் யுத்தம் செய்ய தயாராக இருந்தாய் அல்லவா?
4. கதாபாணௌ தைத்யே த்வம் அபி க்ருஹீதோந் நத கத:
நியுத்தேந க்ரீடன் கடகட ரவோத்குஷ்ட வியதா
ரணாலோகௌத் ஸுக்யாத் மிலதி ஸுஸங்கே த்ருதம் அமும்
ந்ருந்த்யா: ஸந்த்யாத: ப்ரதமம் இதி தாத்ரா ஜகதிஷே
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த அசுரன் தனது கைகளில் கதை ஆயுதம் வைத்திருந்ததைப் பார்த்த நீயும் மிகவும் பெரியதான கதையைக் கொண்டாய். நீயும் அவனும் யுத்தம் செய்தபோது உண்டான கடகட என்று சத்தம் விண்ணையே அதிரச் செய்தது. நீ விளையாட்டாகவே யுத்தம் செய்ததைக் கண்டு ரசிக்க தேவர்கள் கூடினர். அந்த நேரம் ப்ரும்மா உன்னிடம், இவனை ஸ்ந்த்யா காலத்திற்கு முன்பே கொல்ல வேண்டும்? என்று நினைவுபடுத்தினார் அல்லவா? (இதன் காரணம் ஸ்ந்த்யா காலத்திற்குப் பின் அசுர பலம் அதிகரிக்கும் என்பதால் ஆகும்).
5. கதோந் மர்தே தஸ்மிந் கலு கதாயாம் திதிபுவ:
கதாகாதாத் பூமௌ ஜடிதி பதிதாயாம் அஹஹ போ:
ம்ருது ஸ்மேராஸ்ய: த்வம் தநுஜகுல நிர்மூல நசணம்
மஹா சக்ரம் ஸ்ம்ருத்வா கரபுவி ததான: ருருசிஷே
பொருள்: பிரபுவே! குருவாயூரப்பனே! இப்படியாக நடந்த கதை சண்டையில் இரண்யாக்ஷனின் கதையால் அடிக்கப்பட்ட உனது கதை கீழே விழுந்தது. என்ன வியப்பு! (இப்படி கதை விழுந்ததும் பகவானின் விளையாட்டே ஆகும். வைகுண்டத்தின் வாயிற்காப்போனாக விளங்கியவனே இரண்யாக்ஷன் என்பதை நாம் முன்னர் பார்த்தோம். தன்னுடைய பக்தன் அவன்! அவன் ஒருமுறையாவது ஜெயிக்கட்டும் என்று பகவான் தனது கதையை நழுவவிட்டான்). அப்போது நீ அழகான புன்னகை பூத்த முகத்துடன், அசுரர்களின் குலத்தையே அழிக்கும் திறன் படைத்த சக்கர ஆயுதத்தை வரவழைத்து, அதனை வலது கையில் ஏந்தினாய் அல்லவா?
தத: சூலம் காலப்ரதிமருஷி தைத்யே விஸ்ருஜதி
த்வயி சிந்ததி ஏனத் கரகலித சக்ர ப்ரஹரணாத்
ஸமாருஷ்ட: முஷ்ட்யா ஸ கலு விதுதந் த்வாம் ஸமததோத்
கலந்மாயே மாயா த்வயி கில ஜகந் மோஹனகரீ
பொருள்: குருவாயூரப்பா! அதன் பின்னர் அந்த அசுரன் யமனுக்கு ஒப்பான கோபத்தைக் கொண்டவனாகத் தன்னுடைய சூலத்தை உன்மீது ஏவினான். நீ அந்த சூலத்தை முறித்தபோது அவன் மிகுந்த கோபம் கொண்டான். அப்போது உன்னைத் தனது கைமுட்டியால் அடித்தான். அதன் பின்னர் மாயைகளே நெருங்க இயலாத உன்னிடம் மாயைகளை ஏவினான் அல்லவா?
7. பவச்சக்ர ஜ்யோதிஷ்கண லவ நிபாதேன விதுதே
தத: மாயாசக்ரே விதத கநரோஷாந்த மநஸம்
கரிஷ்டாபி: முஷ்டி ப்ரஹ்ருதிபி: அபிக்னந்தம் அஸுரம்
கராக்ரேண ஸ்வேன ச்ரவண பதமூலே நிரவதீ:
பொருள்: குருவாயூரப்பனே! அந்த அசுரன் உன்மீது ஏவிய மாயைகள் அனைத்தும் உனது சக்கர ஆயுதத்தின் முன் தோன்றிய ஜோதியில் அழிந்தன. இதனால் மேலும் கோபம் கொண்ட அவன் அடுத்து என்ன செய்வது என்று குழம்பினான். தனது பெரிய முஷ்டிகளால் உன்னைக் குத்தினான். உடனே நீ உனது கையின் நுனிப் பாகத்தால் அவனது காதில் அடித்து அவனை வீழ்த்தினாய் அல்லவா?
8. மஹா காய: ஸ: அயம் தவ கரஸரோஜ ப்ரமதித:
கலத்ரக்த: வக்ராத் அபதத் ரிஷிபி: ச்லாகித ஹதி:
ததா த்வாம் உத்தாம ப்ரமதபர வித்யோதி ஹ்ருதயா:
முநீந்த்ரா: ஸாந்த்ராபி: ஸ்துதிபி: அநுவந் அத்வரதநும்
பொருள்: குருவாயூரப்பனே! மிகுந்த பருத்த உடலை உடைய அந்த இரண்யாக்ஷன் உன்னுடைய தாமரை மலர் போன்று சிவந்தும் அழகாகவும் உள்ள கைகளால் தாக்கப்பட்டவுடன் அவன் முகத்தில் இருந்து இரத்தம் வழிந்தது. உடனே முனிவர்களால் புகழப்பட்டு கீழே விழுந்து மடிந்தான். (இங்கு இவன் ஏன் முனிவர்களால் கொண்டாடப்பட வேண்டும்? பகவானின் திருக்கைகள் இவன் மீது பட்டது அல்லவா? அந்தக் காரணத்தினால் ஆகும்) அதே நேரம் முனிவர்கள் ஆனந்தம் அடைந்தவர்களாக மிகுந்த ஓசையுடன் கூடிய ஸ்தோத்திரங்கள் மூலம் வராஹனான உன்னைத் துதித்தனர்.
9. த்வசி சந்த: ரோமஸு அபி குசகண: சக்ஷுஷி க்ருதம்
சதுர்ஹோதர: அங்க்ரௌ ஸ்ருக் அபி வதனே ச உதர இடா
க்ரஹா ஜிஹ்வாயாம் தே பரபுருஷ கர்ணே ச சமஸ:
விபோஸோம: வீர்யம் வரத கலதேச ச அபி உபஸத:
பொருள்: பரம புருஷனே! வரங்கள் அளிப்பவனே! குருவாயூரப்பனே! உன்னுடைய தோலில் காயத்ரி போன்ற சந்தங்கள்; ரோமங்களில் தர்ப்பைகள்: கண்களில் நெய்: கால்களில் நான்கு ரித்விக்குகள் (ப்ரம்மா, ஹோதா, உத்காதா, அத்வர்யு); முகத்தில் ஸ்ருக் என்னும் ஹோமபாத்திரம்; வயிற்றில் இடா என்னும் ஹோம பாத்திரம்; நாக்கில் க்ரஹம் என்ற பாத்திரம்; காதுகளில் ஸமஸம் என்ற தட்டுகளும் விந்துவில் ஸோமரஸம்; கழுத்தில் உபஸத்துகள் என்னும் இஷ்டி மந்திரங்கள் உள்ளன. ஆக பகவானின் உடலை வேதமயமானது என்று வர்ணிக்கின்றார்.
10. முனீந்த்ரை: இத்யாதி ஸ்தவத முகரை: மோதிதமனா:
மஹீயஸ்யா மூர்த்யா விமலதர கீர்த்யா ச விலஸந்
ஸ்வதிஷ்ண்யம் ஸம்ப்ராப்த: ஸுகரஸ விகாரீ மதுரிபோ
நிருந்த்யா ரோகம் மே ஸகலம் அபி வாதாலய பதே
பொருள்: மது என்ற அசுரனைக் கொன்றவனே! குருவாயூரின் பதியே! க்ருஷ்ணா! இப்படியாக முனிவர்கள் உன்னைத் துதித்தபோது நீ மனம் மகிழ்ந்தாய். மிகவும் பெரிய உருவத்துடனும், அளவிட இயலாத தூய்மையான புகழோடும் விளங்கிய நீ, உன்னுடைய இருப்பிடமான வைகுண்டம் அடைந்தாய். அங்கு பரமானந்தத்தில் திளைக்கும் நீ, என்னுடைய அனைத்து பிணிகளையும் நீக்க வேண்டும்.