Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம்
தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
16:57

1. தக்ஷ: விரிஞ்ச தநய: மனோ: தநூஜாம்
லப்த்வா ப்ரஹுதிம் இஹ ஷோடச ச ஆப கன்யா;
தர்மே த்ரயோதச ததௌ பித்ருஷு ஸ்வதாம் ச
ஸ்வாஹாம் ஹவிர்புஜி ஸதீம் கிரிசே த்வதம்சே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பனே! ப்ரும்மாவின் புத்திரரான தக்ஷப் ரஜாதிபதி என்பவர் மநுவுடைய மகளான ப்ரஹுதி என்பவளை மணந்தார். அவள் மூலமாக பதினாறு பெண்களைப் பெற்றார். அந்தப் பெண்களில் பதின்மூன்று பெண்களை தர்ம தேவதைக்கு மணம் முடித்தாள். (இந்தப் பெண்கள் - ச்ரத்தா, மைத்ரீ, தயா, சாந்தி, துஷ்டி, புஷ்டி, க்ரியா, உன்னதி, புத்தி, மேதா, திதிக்ஷா, ஹ்ரீ, மூர்த்தி ஆகியன). ஸ்வதா என்பவளை அக்னி பகவானுக்கும், ஸதீ என்பவளை (இவளே தாக்ஷாயணி ஆவாள்) உன் அம்சமான சிவனுக்கும் மணம் செய்து கொடுத்தார் அல்லவா?

2. மூர்த்திர்ஹி தர்மக்ருஹிணீ ஸுஷுவே பவந்தம்
நாராயணம் நரஸகம் மஹிதாநுபவம்
யஜ்ஜந்மநி ப்ரமுதிதா: க்ருத தூர்ய கோஷா:
புஷ்போத்கராந் ப்ரவவ்ருஷு: நுநுவு: ஸுரௌகா:

பொருள்: குருவாயூரப்பனே! தக்ஷப்ரஜாதிபதியின் மகளான மூர்த்தி என்பவள் தர்மதேவதை மூலமாக மஹிமை உடைய உன்னையும், உனது இரட்டையான நரன் என்ற தோழனையும் பெற்றாள். (இவர்களே நரநாராயணர்கள் ஆவர்) இதனைக் கண்டு மகிழ்ந்த தேவர்கள் மங்கல இசையை மீட்டி, மலர்களைத் தூவி உன்னை வரவேற்று வணங்கினர்.

3. தைத்யம் ஸஹஸ்ரகவசம் கவசை: பரீதம்
ஸாஹஸ்ர வத்ஸர தப: ஸமராபிலவ்யை:
பர்யாய நிர்மித தப: ஸமரௌ பவந்தௌ
சிஷ்டைக கங்கடம் அமும் ந்யஹதாம் ஸலீலம்

பொருள்: குருவாயூரப்பனே! நரநாராயணர்களாக அவதரித்த நீ மாறி மாறி தவமும் யுத்தமும் ஆயிரம் வருடம் செய்தாய் (நரன் தவம் செய்யும்போது நாராயணன் யுத்தம் செய்வதும், நாராயணன் தவம் செய்யும்போது நரன் யுத்தம் செய்வதும்). இது எதற்காக? ஆயிரம் கவசங்கள் கொண்ட ஸஹஸ்ரகவசன் என்ற அரக்கனை அழிக்கவே ஆகும். நீ செய்த ஆயிரம் வருட தவத்தால் ஒவ்வொரு கவசமாக அவிழ்ந்தது. இறுதியில் ஒரு கவசம் மட்டும் இருப்பவனாக அந்த அரக்கனை மாற்றி, அவனை ஒரு விளையாட்டாகவே நீ கொன்றாய்.

4. அந்வாசரன் உபதிசந் அபி மோக்ஷ தர்மம்
த்வம் ப்ராத்ருமான் பதரிகாச்ரமம் அத்யவாத்ஸீ:
சக்ர: அத தே சம தபோ பலநிஸ்ஸஹாத்மா
திவ்யாங்கநா பரிவ்ருதம் ப்ரஜிகாய மாரம்

பொருள்: குருவாயூரப்பனே! உனது சகோதரனான நரனுடன், நீ மோட்ச தர்மத்தைக் கைக்கொண்டும் உபதேஸித்துக் கொண்டும் பதரிகாச்ரமத்தில் வாசம் செய்து வந்தாய். உனது தவ வலிமையையும் இந்த்ரிய கட்டுப்பாடும் கண்டு பொறாமை கொண்ட இந்திரன், தேவமங்கையர் சூழ உன்னிடம் மன்மதனை அனுப்பினான் (உனது தவத்தைக் கலைக்க).

5. காம: வஸந்த மலயாநில பந்துசாலீ
காந்தா கடாக்ஷ விசீகை: விசஸத் விலாஸை:
வித்யந் முஹுர்முஹு: அகம்பம் உதீக்ஷ்ய ச த்வாம்
பீத: த்வயா அத ஜகதே ம்ருது ஹாஸ பஜா

பொருள்: குருவாயூரப்பனே! மன்மதன் தனது உறவினர்களான வஸந்த ருது மற்றும் மலயமாருதம் (தென்றல்) ஆகியோருடன் உன்னிடம் வந்தான். தேவப் பெண்களின் நடன அசைவுகளையும் கடைக்கண் பார்வைகளையும் உன்மீது அம்புகள் போன்று பலமுறை செய்தான். நீ அசையவே இல்லை. இதைக் கண்டு மனதில் பயம் கொண்டான். அப்போது மன்மதனைப் பார்த்து நீ புன்னகையுடன் பின்வருமாறு கூறினாய்.

6. பீத்யா அலம் அங்கஜ வஸந்த ஸுராங்கநா: வ:
மன்மானஸம் த்விஹ ஜுஷத்வம் இதி ப்ருவாண;
த்வம் விஸ்மயேந பரித: ஸ்துவதாம் அத ஏஷாம்
ப்ராதர்சய: ஸ்வ பரிசாரக காதராக்ஷீ:

பொருள்: குருவாயூரப்பனே! (நாராயணனின் தவத்தைக் கலைக்க மன்மதன் முதலானோர், அவர் சபித்து விடுவாரோ என்று பயந்து நின்றனர்). நீ அவர்களை நோக்கி, மன்மதனே! வஸந்தமே! தேவப் பெண்களே! நீங்கள் அஞ்சவேண்டாம். என்னுடைய மனதில் இருந்து தோன்றும் இவர்களைக் கவனியுங்கள் என்றாய். இப்படிக் கூறிவிட்டு உன்னைச் சுற்றி உனக்குத் தொண்டு புரிய நிற்கும் அழகிய கண்கள் படைத்தப் பெண்களை நீ காண்பித்தாய்.

7. ஸம்மோஹநாய மிலிதா: மதனாதய: தே
த்வத் தாஸிகா பரிமலை: கில மோஹம் ஆபு:
தத்தாம் த்வயா ச ஜக்ருஹு: த்ரபயைவ ஸர்வ
ஸவர்வாஸி கர்வ சமநீம் புன: ஊர்வசீம் தாம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனக்கு மயக்கத்தை ஏற்படுத்த வந்த மன்மதன் முதலானோர் உன்னுடைய பணிப்பெண்களிடம் இருந்து வீசிய நறுமணத்தின் மூலம் மயங்கி நின்றார்கள் அல்லவா? இது தவிர, நீ அவர்களுக்கு சுவர்க்கத்தில் உள்ளவர்கள் கர்வத்தை அடக்கும் விதமாக ஊர்வசி என்பவளை கொடுக்க, அவர்களும் அவளை மிகவும் வெட்கத்துடன் ஏற்றனர் அல்லவா?

8. த்ருஷ்ட்வா ஊர்வசீம் தவ கதாம் ச நிசம்ய சக்ர:
பர்யாகுல: அஜநி பவன் மஹிமாவமர்சாத்
ஏவம் ப்ரசாந்த ரமணீய தராவதாராத்
த்வத்த: அதிக: வரத க்ருஷ்ணதநு: த்வமேவ

பொருள்: குருவாயூரப்பனே! இந்திரன் ஊர்வசியை நோக்கியும், உனது லீலைகளைக் கேட்டும் உனது மஹிமையை உணர்ந்தான். தனது தாழ்மையான செயலை எண்ணி மனவருத்தம் கொண்டான். வரதனே! சாந்தமும் அமைதியும் அழகும் உடைய இந்த அவதாரத்தை விட மேலானது என்றால் நீ எடுத்த க்ருஷ்ணாவதாரம் ஆகும். (க்ருஷ்ணனை விட மேலான அவதாரம் இல்லை என்கிறார்)

9. தக்ஷஸ்து தாது: அதிவாலனயா ரஜோந்த:
நாத்யாத்ருத: த்வயி ச கஷ்டம் அசாந்தி: ஆஸீத்
யேந வ்யருந்த ஸ பவத்துநுமேவ ஸர்வம்
யஜ்ஞே ச வைரபிசுனே ஸ்வஸுதாம் வ்யமாநீத்

பொருள்: குருவாயூரப்பனே! ப்ரும்மாவின் குணங்களை அதிகமாகக் கொண்டிருந்த அவன் மகன் தக்ஷப்ரஜாதிபதி ரஜோ குணம் அதிகமாக விளங்கியதால் தனது அறிவை இழந்தான். அதனால் உன்மீது பக்தி செலுத்தாமல், அமைதி இல்லாமல் இருந்தான். கஷ்டம்! இதனால் உன்னுடைய மற்றோர் அம்சமான சிவனைத் த்வேஷம் செய்தான். அந்த வெறுப்பைத் தனது யாகத்தில் வெளிப்படுத்தினான். தனது மகளும் சிவனின் பத்தினியுமான தாக்ஷாயணியை அவமதித்தான்.

10. க்ருத்தேச மர்தித மக: ஸ து க்ருத்த சீர்ஷோ
தேவ ப்ரஸாதித ஹராதத ஸப்த ஜீவ:
த்வத் பூரித க்ரதுவர: புன; ஆப சாந்திம்
ஸ த்வம் ப்ரசாந்திகர பாஹி மருத்புரேச

பொருள்: குருவாயூரப்பனே! (தனது மனைவியையும் தன்னையும் அவமதித்த காரணத்தினால்) சிவன் கோபம் கொண்டார். தக்ஷனின் யாகத்தையும் அழித்து, அவன் தலையையும் சீவினார். அதன் பின்னர் தேவர்களால் சமாதானப்படுத்தப்பட்ட சிவன் மூலமாகவே மீண்டும் உயிர் பெற்றான். அதன் பின்னர் உன்னால் யாகம் மேற்கொண்டு மன அமைதியை மீண்டும் பெற்றான். இப்படியாக மன அமைதியை அளிப்பவனே! என்னைக் காப்பாற்ற வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar