திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த நல்லாவூர் சுந்தரகுஜாம்பிகை சமேத பாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 8ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு விநாயகர், முருகன், மூலவர் விமானம், அம்பாள், சரஸ்வதி உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகள் சன்னதிகளிலும் புனித கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 10 .30 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை மயிலாப்பூர் சண்முகம் குருக்கள், அர்ச்சகர்கள் சுப்ரமணியன், ஜெய்சங்கர், அய்யப்பன், புதுச்சேரி பாலசந்திர மவுலீஸ்வர அரசு உள்ளிட்ட குழுவினர் செய்து வைத்தனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாகிகள் தொழிலதிபர் சுப்பா ரெட்டியார், முத்துமல்லா, செந்தில்குமார் செய்திருந்தனர்.