அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டை காளி அம்மன் கோவிலில், ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.