கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த சேஷங்கனூர் சிவன் கோவிலில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் சேஷங்கனூர் கிராமத்தில் அன்புபுரீஸ்வரி உடனுறை அழகேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் மர்ம ஆசாமிகள் ஐந்து ஐம்பொன் மற்றும் வெண்கல சிலைகளை தி ருடிச் சென்றனர். கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்தனர். சென்னை சாலையில் மேல்மருவத்துார் சோத்துப்பாக்கம் அருகே சாலையோரம் குப்பை பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஐந்து ஐம்பொன் மற்றும் வெண்கல சிலைகளை 2013ம் ஆண்டு டிச.18ம் தேதி மேல்மருவத்துார் போலீசார் மீட்டனர். அந்த சிலைகள் சேஷங்கனூர் கோவிலில் திருடியது தெரிந்தது. கண்டமங்கலம் போலீசார் சிலைகளை மீட்டனர். ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு டிச. மாதம் கொள்ளையர்கள் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சோமசுந்தரர் சிலையை திருட முயன்றனர். குறைவாக வந்த திருடர்களால் துாக்க முடியாமல், குறைந்த எடையுள்ள ஐந்து ஐம்பொன் மற்றும் வெண்கல சிலைகளை திருடிச் சென்றனர். இதனால் 1 கோடி ரூபாய் மதிப்புடைய சுந்த÷ ரசர் சிலை அப்போது தப்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூஜை கள் முடித்து கோவில் குருக்கள் காந்தி, 45; கோவிலை பூட்டிச் சென்றார். நேற்று மாலை 4.30 மணிக்கு வந்த போது 1 கோடி ரூபாய் மதிப்பு சோமசுந்தரர் சிலை திருடு போயிருந்தது. பழைய திருட்டு நடந்து 18 மாதங்கள் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.