கிருஷ்ணாவதாரத்தில் திருமால் பசுக்களை மேய்க்கும் தொழில் செய்தார். எனவே, இவர் கோபாலன் என்று பெயர் பெற்றார். கோ என்றால் பசு. பசுக்கள் என்பது உலக உயிர்களைக் குறிக்கும். இந்த உயிர்கள் அனைத்தையும் பராமரிக்கும் தலைவன் என்பதே கோபாலன் என்ற சொல்லின் பொருள். மாடு மேய்த்ததாக சொல்லப்படுவதன் மூலம், எந்தத் தொழிலும் தாழ்ந்ததல்ல என்று அவன் காட்டியுள்ளான். கோ என்றால் சூரியன், பால் என்றால் சந்திரன், அன் என்றால் தலைவன் என்றும் பொருள் உண்டு. சூரிய, சந்திர மண்டலங்களைக் கொண்ட இந்த பூமிக்கு தலைவன் என்பதும் கோபாலனுக்குரிய பொருள் ஆகும்.