பதிவு செய்த நாள்
18
ஜூலை
2015 
12:07
 
 பரமக்குடி: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.பரமக்குடியில் இருந்து 15 கி.மீ., தொலைவில் நயினார் கோவிலில், நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு, சவுந்தர்யநாயகி அம்மனுடன், நாகநாதசுவாமி அருள் பாலிக்கிறார். இக்கோயிலில் நேற்று ஆடி மாத முதல் வெள்ளியை மூன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதற்காக, அதிகாலை 3 மணி முதல் ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் பாதயாத்திரைசென்றனர். அவர்களுக்கு எமனே ஸ்வரம், குணப்பனேந்தல், வல்லம் பகுதிகளில் நீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.இது குறித்து பக்தர்கள் கூறுகையில், "திருமண தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும், உடல் உபாதை கள் நீங்கவும் சுவாமியை வேண்டி ஒவ்வொரு ஆண்டும் பாதயாத்திரை மேற்கொள்கிறோம், என்றனர்.கோயிலின் எதிரே உள்ளவாசுகி தீர்த்தகுளத்திற்கு மழைநீர் வரும் வழிகள் அடைபட்டுள்ளதால் குளத்தில் சிறிதளவு நீர் மட்டும் தேங்கியுள்ளது. குளத்தைச் சுற்றியுள்ள வீடுகள், குளியல் தொட்டிகளில் இருந்துவெறியேறும் கழிவு நீரும் குளத்திற்குள் விடப்படுவதால் துர் நாற்றம் வீசுகிறது3 மடங்கு விலையில் பூஜை பொருட்கள்: பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்புவசதிகள் இல்லை. நயினார் கோவில் அருகில் மட்டும் சில போலீசார் பணியில் இருந்தனர். கோயிலின் அருகில் வியாபாரிகள் 3 மடங்கு விலையில் பூஜை பொருட்களை விற்பனைசெய்ததால் பக்தர்கள் வேதனையடைந்தனர்.பரமக்குடியில் இருந்து நடந்து சென்ற பக்தர்கள் திரும்பி வர போதிய பஸ் வசதியில்லாததால், பஸ்களின் படிக்கட்டுகளில்நின்று ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.