மதுரை; தெலுங்கு புத்தாண்டு (உகாதி) தினத்தில் அதிகாலை எண்ணெய் குளியல் செய்து, புத்தாண்டைகள் அணிந்து, யுகாதி அல்லது உகாதி பச்சடி உடனான அறுசுவை விருந்து சமைத்து, பண்டிகையை கொண்டாடப்படுகிறது.
உகாதி பச்சடி என்பது தெலுங்கு புத்தாண்டு (உகாதி) அன்று தயாரிக்கப்படும், வாழ்க்கையின் ஆறு சுவைகளை (இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, உப்பு) உணர்த்தும் ஒரு பாரம்பரிய சத்துமிக்க பச்சடி ஆகும். இது வேப்பம்பூ, வெல்லம், மாங்காய், புளி, மிளகு, உப்பு, மற்றும் தேங்காய்/வாழைப்பழம் சேர்த்து, தண்ணீரில் கலந்து நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. வாழ்க்கையில் இன்பம், துன்பம், சவால், கசப்பான அனுபவங்கள் என அனைத்தும் கலந்துதான் வரும். இந்த ஆறு சுவைகளும் சேர்ந்த இந்த பச்சடியை இறைவனுக்கு படைத்து, உண்பது எல்லா சூழ்நிலைகளையும் சமமாக ஏற்கும் மனப்பக்குவத்தை உணர்த்துகிறது. இதனால் தெலுங்கு புத்தாண்டில் உகாதி பச்சடி முக்கிய இடம் பெறுகிறது.