பதிவு செய்த நாள்
20
ஜூலை
2015
03:07
1 ஸ்தம்பே கட்டயத ஹிரண்யகசிபோ:
கர்ணௌ ஸமாசூர்ணயந்
ஆகூர்ணத் ஜகதண்டகுண்ட குஹர:
கோர: தவ அபூத் ரவ:
சிருத்வா யம் கில தைத்ய ராஜஹ்ருதயே
பூர்வம் கதாபி அச்ருதம்
கம்ப: கச்சந ஸம்பபாத சலித: அபி
அம்போஜபூர் விஷ்டராத்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தூணில் இரண்யகசிபு தனது கத்தியால் அடித்தான். உடனே அவன் காதுகளைக் கிழிப்பது போன்றும் அண்டங்கள் அனைத்தும் நடுங்குவது போன்றும் ஒரு பயங்கரமான கர்ஜனை உண்டானது. இதற்கு முன்பு இப்படி ஓர் ஓசையைக் கேட்காத அசுரர் தலைவனான இரண்யனின் மனதில் ஏற்பட்ட நடுக்கத்தைச் சொற்களால் கூற இயலாது. இந்த ஓசையைக் கேட்ட ப்ரும்மாவே தனது ஆசனத்தில் நழுவினார் அல்லவா?
2. தைத்யே திஷு விஸ்ருஷ்ட
சக்ஷுக்ஷி மஹா ஸம்ரம்ப்பிணி ஸ்தம்பத:
ஸம்பூதம் ந ம்ருகாத்மகம் ந
மநுஜாகாராம் வபுஸ்தே விபோ
கிம் கிம் பீஷணம் ஏதத் அத்புதம் இதி
வ்யுத்ப்ராந்த சித்தே அஸுரே
விஸ்பூர்ஜத் தவலோக்ர ரோம விகஸத்
வர்ஷ்மா ஸமாஜ்ரும்பதா:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இந்த ஓசை எங்கிருந்து வருகிறது என்று தனது கண்களை நான்கு திசைகளிலும் சுழற்றிப் பார்த்தான். அப்போது மிருக வடிவமோ மனித வடிவமோ அல்லாத உனது உருவம் அந்தத் தூணில் இருந்த வெளிவந்து. உன்னைக் கண்ட இரண்யன் அச்சத்துடன். என்ன இது! என்ன இது! பயங்கரமாகவும் வியப்பாகவும் உள்ளதே என்று தனது மனம் கலங்கி நின்றான். அடர்த்தியாகவும் வெண்மையாகவும் இருந்த பிடரி முடிகளால் ஒளி வீசும் உடலை உடையவனாக நீ மேலும் மேலும் வளர்ந்தாய் அல்லவா?
3. தப்த ஸ்வர்ண ஸ்வர்ண கூர்ணத்
அதிரூக்ஷ அக்ஷம் ஸடாகேஸர
ப்ரோத்கம்ப ப்ரநிகும்பித அம்பரம்
அஹோ ஜீயாத் தவேதம் வபு;
வ்யாத்த வ்யாப்த மஹாதரீஸக முகம்
கட்க உக்ர வல்கத் மஹா
ஜிஹ்வா நிர்கம த்ருச்யமான ஸுமஹா
தம்ஷ்ட்ராயுக உட்டாமரம்
பொருள்; குருவாயூரப்பனே! உனது கண்கள் உருக்கிய தங்கம் போல் ஒளியுடன் உடையதாகவும் சுழன்று விளங்குவதாகவும் பயங்கரமானதாகவும் இருந்தன; பிடரி மயிர்கள் அசைவதால் ஆகாயமே மறைக்கப்பட்டது; திறந்து காணப்பட்ட உனது வாய் பெரிய குகை போல் இருந்தது. நாக்கு கத்தி போன்று பயங்கரமாக நீண்டு இருந்தது; நாக்கு வெளியே வரும்போது தெரிந்த இரண்டு முன் பற்களும் பயங்கரமாக விளங்கின. ஸ்ரீ அப்பனே! இத்தனை வியப்புடன் கூடிய உன்னுடைய திருமேனி என்றும் சிறந்து இருப்பதாக!
4. உத்ஸர்பத் வலிபங்க பீஷண
ஹநும் ஹ்ரஸ்வ ஸ்தவீயஸ்தர
க்ரீவம் பீவர தோச்சத உத்கத நக
க்ரூராம்சு தூரோல்பணம்
வ்யோமோல்லங்கி கநாகநோபம
கனபரத்வான நிர்தாவித
ஸ்பர்த்தாலு ப்ரகரம் நமாமி பவதஸ்தம்
நாரஸிம்ஹம் வபு;
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ கர்ஜனை செய்யும்போது உன் கன்னத்தில் காணப்படும் சதைகளால் மோவாய்க்கட்டை பயங்கரமாக காட்சி தருகிறது. கழுத்து குட்டையாகவும் அகலமாகவும் உள்ளது; உருண்டையாக பருத்த ஆயிரம் கைகளில் இருந்து வெளியில் நீண்ட நகங்கள் பளீரென்று ஒளிவீசி பயங்கரமாக உள்ளன; மழை மேகங்களில் உள்ள கனமான இடி ஓசை போன்று எழும் கர்ஜனை; இதனால் விரட்டப்பட்ட அசுரர் கூட்டம் - இப்படியாக உள்ள உனது நரஸிம்ஹ உருவத்தை நான் வணங்குகிறேன்.
5. நூனம் விஷ்ணு: அயந் நிஹன்மி அமும்
இதி ப்ராம்யத் கதாபீஷணம்
தைத்யேந்தரம் ஸமுபாத்ரவந்தம் அத்ருதா
தோர்ப்யாம் ப்ருதுப்யாம் அமும்
வீர: நிர்கலித: அத கட்க பலகே
க்ருஹ்ணந்த விசித்ர ச்ரமாந்
வ்யாவ்ருண்வன் புன: ஆபபாத: புவந
க்ராஸ்யோத்யதம் த்வாம் அஹோ
பொருள்: குருவாயூரப்பனே! உன்னைக் கண்ட இரண்யன், இவன் நிச்சயமாக விஷ்ணுதான், இவனைக் கொல்கிறேன் பார் என்று கத்தினான். உன்னருகில் ஓடிவந்த அவன் கைகளில் பார்ப்பவரை பயமுறுத்தும் வண்ணம் கதாயுதம் இருந்தது. அவனை நீ உனது பெரிய கரங்களால் பிடித்தாய். ஆனால் அவன் நழுவிவிட்டான். பின்னர் கத்தி மற்றும் கேடயம் ஆகியவற்றைத் தனது கைகளில் ஏந்தியபடி வித்தியாசமான தாக்குதல்களை வெளிக்காட்டினான். உலகையே உண்டு உமிழ்ந்த உன்னை நோக்கி மறுபடியும் தாக்க ஓடிவந்தான்.
6. ப்ராம்யந்தம் திதிஜாதமம் புனரபி
ப்ரோத்க்ருஹ்ய தோர்ப்யாம் ஜவாத்
த்வாரே அத ஊருயுகே நிபாத்ய நகரான்
வ்யுதகாய வக்ஷோ புவி
நிர்பிந்தன் அதிகர்ப நிர்பர
களத்ரத்காம்பு பத்தோத்ஸவம்
பாயம் பாயம் உனதரய: பஹுஜகத்
ஸம்ஹாரி ஸிம்ஹாரவான்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னை நோக்கி வந்த அந்த அசுரனை மறுபடியும் உனது கைகளால் நீ பிடித்தாய். அவனைத் தூக்கிச் சென்று சபையின் வாயிற்படிகளில் அமர்ந்து உனது இரு தொடைகள் மீது படுக்க வைத்தாய். பின்னர் அவன் மார்பை உனது கை நகங்களால் கிழித்தாய். அப்போது வயிற்றில் இருந்து வெளியேறிய இரத்தத்தை உற்சாகம் தோன்றக் குடித்தாய். பின்னர் உலகமே நடுங்கும் வகையில் கர்ஜனை செய்தாய் அல்லவா?
7. த்யக்த்வா தம் ஹதம் ஆசு ரக்த லஹரீ
ஸிக்தோன்னமத் வர்ஷமணி
ப்ரத்யுத்பத்ய ஸமஸ்த தைத்ய படலீம் ச
ஆகாத்யமானே த்வயி
ப்ராம் யத் பூமி விகம்பிதாம்புதி குலம்
வ்யாலோல சைலோத்கரம்
ப்ரோத் ஸர்ப்பத்கசரம் சராசரம் அஹோ து;
ஸ்தாம் அவஸ்தாம் ததௌ
பொருள்: குருவாயூரப்பா! இரத்தக் குளத்தில் நனைந்து விளங்கிய அந்த அசுரனின் உடலை நீ தூக்கி எறிந்தாய். பின்னர் பாய்ந்து தாவி அங்கு இருந்த அசுரர்கள் அனைவரையும் நீ கடித்து உண்ணும்போது பூமி தாறுமாறாகச் சுழன்றது; சமுத்திரங்கள் கலங்கின; மலைகள் ஆட்டம் கண்டன; நட்சத்திரங்கள் கீழே விழுந்தன.
8. தாவத் மாம்ஸ வபா கரால வபுஷம் கோராந்த்ர மாலாதரம்
த்வாம் மத்யே ஸபம் இத்தரோஷம் உஷிதம் துர்வார குர்வாரவம்
அப்யேதும் ந சசாக கோபி புவனே தூரே ஸ்திதா பீரவ:
ஸர்வே சர்வ விரிஞ்ச வாஸவ முகா: ப்ரத்யேகம்: தோஷத:
பொருள்: குவாயூரப்பனே! பின்னர் நீ மாமிஸத்தாலும் இரத்தம் கொழுப்பு ஆகியவற்றாலும் பூசப்பட்ட உடலுடன், இரண்யன் குடலை மாலையாக அணிந்து மிகுந்த கோபத்துடன் அந்த மண்டபத்தின் நடுவில் நின்றாய். யாராலும் உன்னிடம் இருந்து எழுந்த உரத்த ஓசையை தடுக்க இயலவில்லை, உன்னருகில் வரவும் இந்த உலகில் யாருக்கும் துணிவு இல்லை. சிவன், ப்ரும்மா, இந்த்ரன் போன்றவர்கள் கூட உன்னருகில் வர பயந்து கொண்டு தள்ளி நின்று உன்னைத் துதித்தார்கள் அல்லவா?
9. பூயோபி அக்ஷத ரோஷதாம்னி பவதி
ப்ரஹ்மாஜ்ஞயா பாலகே
ப்ரஹ்லாதே பதயோ: நமதி அயபபயே
காருண்ய பாராகுல:
சாந்த: த்வம் கரம் அஸ்ய மூர்த்னி ஸமதா:
ஸ்தோத்ரை: அத உத்காயத:
தஸ்ய அகாமதியோபி தேனித வரம்
லோகாய ச அனுக்ரஹம்
பொருள்: குருவாயூரப்பனே! அனைவரும் துதித்தும் உன் சீற்றம் தணியவில்லை. கோபத்தின் இடமாகவே நீ விளங்கினாய். அப்போது ப்ரும்மாவின் சொல்லைக் கேட்டக் குழந்தையான ப்ரஹ்லாதன் சிறிதும் பயம் இல்லாமல் உனது திருவடிகளை வணங்கினான். நீ உடனே கருணையுடன் கோபம் நீங்கி அவன் தலைமீது உனது கைகளை வைத்தாய். உன்னைக் குறித்து பல துதிகளைக் கூறிக் கொண்டும், எதன் மீதும் பற்று இல்லாமல் நின்ற ப்ரஹ்லாதனுக்கு பக்தி வரம் அளித்து, இந்த உலகையும் நீ அநுக்ரஹம் செய்தாய் அல்லவா?
10. ஏவம் நாடித ரௌத்ர சேஷ்டித
விபோ ஸ்ரீதாபநீயாபித
ச்ருத்யந்த ஸ்புடகீத ஸர்வ
மஹிமந் அத்யந்த சுத்தாக்ருதே
தத்தாத்ருங் நிகிலோத்தரம் புநரஹோ
கஸ்த்வாம் பரோ லங்க்கயேத்
ப்ரஹ்லாத ப்ரிய ஹே மருத்புரபதே
ஸர்வாமயாத் பாஹிமாம்
பொருள்: குருவாயூரப்பனே! ப்ரஹ்லாதனுக்குப் ப்ரியமானவனே! இப்படியாக பயம் விளைவிக்கும் லீலைகள் புரிந்தவனும், ந்ருஸிம்ஹாதாபநீயம் என்ற உபநிஷத்தில் பெருமைகள் நன்றாக விளக்கப்பட்டவனும், தூய்மையான உருவம் உடையவனும், எங்கும் நிறைந்தவனுமாக நீ உள்ளாய். உன்னை உனது பக்தர்களைத் தவிர யார்தான் மீற முடியும்? எனது நோய்களில் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்.