Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » பூதனை முக்தி பெறுதல்
பூதனை முக்தி பெறுதல்
எழுத்தின் அளவு:
பூதனை முக்தி பெறுதல்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
05:07

1. ததநு நந்தம் அமந்தம் சுப ஆஸ்பதம்
ந்ருப புரீம் கரதாந க்ருதே கதம்
ஸமவலோக்ய ஜகாத பவத்பிதா
விதத கமஸ ஸஹாய ஜந உத்யம:

பொருள்: குருவாயூரப்பா! என்றும் மங்களம் குறையாது விளங்கும் நந்தகோபர், கம்ஸனுக்கு கப்பம் கட்டுவதற்காக மதுராவிற்குச் சென்றார். அங்கு உள்ள கம்சனுடைய அதிகாரிகளின் தீய முயற்சிகளை உனது தந்தை வஸுதேவர் அறிந்தார். இதனை நந்தகோபரிடம் கூறினார்.

2. அயி ஸகே தவ பாலக ஜன்ம மாம்
ஸுகயதேத்ய நிஜாத்மஜ ஜந்மவத்
இதி பவத்பித்ருதாம் வ்ரஜநாயகே
ஸமதிரோப்ய சசம்ஸ தம் ஆதராத்

பொருள்: குருவாயூரப்பனே! வஸுதேவர் நந்தகோபரிடம், நண்பரே! உங்களுக்குப் பிறந்த மகனை எனக்குப் பிறந்த மகனாகவே நினைக்கிறேன் என்றார். அவர் நந்தகோபரை உனது தந்தை என்று உயர்வாகக் கூறினார்.

3. இஹ ச ஸந்த்ய நிமித்த சதாநி தே கடக
ஸீம்நி ததோ லகு கம்யதாம்
இதி ச தத்வசஸா வ்ரஜநாயகோ பவத்
அபாயபியா த்ருதம் ஆயயௌ

பொருள்: குருவாயூரப்பா! அவர் நந்தகோபரிடம், நண்பரே! இங்கு தீய சகுணங்கள் பல தோன்றுகின்றன. அதனால் நீங்கள் அதிகம் தாமதிக்காமல் விரைவாக கோகுலம் திரும்புங்கள் என்றார். இதனைக் கேட்ட நந்தகோபர், உனக்கு என்ன தீங்கு விளையுமோ என்று பயந்து மிகவும் விரைவாக கோகுலம் வந்தார்.

4. அவஸரே கலு தத்ர ச காசந வ்ரஜபதே
மதுர ஆக்ருதி: அங்கநா
தரல ஷட்பத லாலித குந்தலா கபட
போதக தே நிகடம் கதா

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மாயனே! குழந்தாய்! அப்போது , வண்டுகள் வட்டமிடுகின்ற கூந்தலை உடையவளாக இருந்த ஓர் அழகிய பெண், உனது அருகில் வந்தாள் அல்லவா?

5. ஸபதி ஸா ஹ்ருதபாலக சேதநா நிசிசா
அந்வய ஜா கில பூதநா
வ்ரஜ வதூஷ்விஹ கா இயம் இதி க்ஷணம்
விம்ருசதீஷு பவந்தம் உபாததே

பொருள்: குருவாயூரப்பா! குழந்தைகள் உயிரைப் பறிப்பவளும், அரசர் குலத்தில் பிறந்தவளும் பூதனை என்பவளும் ஆகிய அவளைக் கண்ட ஆய்ச்சிமார்கள், இவள் யார்? என்று எண்ணினர். அப்போது பூதனை உன்னைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டாள் அல்லவா?

6. லலித பாவ விலாஸ ஹ்ருதாத்மபி:
யுவதிபி: ப்ரதிரோத்தும் அபாரிதா
ஸ்தனம் அஸௌ பவநாந்த நிஷேதுஷீ
ப்ரததுஷீ பவதே கபடாத்மனே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மாயவனே! கபடனே! தனது நடை உடை பாவங்கள் மூலமாக பூதனை ஆய்ச்சி பெண்களை மயக்கினாள். பின்னர் வீட்டில் அமர்ந்து, அவள் உனக்கு தன்னுடைய ஸ்தனங்களால் பால் ஊட்டத் தொடங்கினாள் அல்லவா?

7. ஸமதிருஹ்ய தத் அங்கம் அசங்கிதஸ்
த்வம் அத பாலகலோபந ரோஷித:
மஹத் இவ ஆம்ர பலம் குசமண்டலம்
ப்ரதிசுசூஷித துர்விஷ தூஷிதம்

பொருள்: குருவாயூரப்பா! பல குழந்தைகள் அவளால் கொல்லப்பட்டதால் அவள் மீது நீ மிகுந்த கோபம் கொண்டாய். சிறிதும் பயம் இன்றி அவளது உடலில் ஏறிய நீ, பெரிய மாம்பழம் போன்றதும் விஷம் தடவியதும் ஆகிய அவளது ஸ்தனங்களை உயிருடன் சேர்த்து உறிஞ்சினாய் அல்லவா?

8. அஸுபி: ஏவ ஸமம் தயதி த்வயி
ஸ்தநம் அஸௌ ஸ்தநிதோபம் நிஸ்வநா
நிரபதத் பயதாயி நிஜம் வபு;
ப்ரதிகதா ப்ரவிஸார்ய புஜாவுபௌ

பொருள்: குருவாயூரப்பனே! அவளுடைய ஸ்தனங்களைப் பருகும்போது அவள் உயிரையும் சேர்த்து இழுத்தாய். இதனால் அவள் இடி போன்ற பெருத்த கூச்சலுடன். தன் சுய உருவம் பெற்று, இரண்டு கைகளையும் விரித்தபடி பூமியில் விழுந்தாள் அல்லவா?

9. பயத கோஷண பீஷண விக்ரஹ ச்ரவண
தர்சந மோஹித வல்லவே
வ்ரஜபதே தத் உர: ஸ்த்தல கேலநம்
நநு பவந்தம் அக்ருஹ்ணத கோபிகா:

பொருள்; குருவாயூரப்பா! பூதனையின் அதிபயங்கர கூச்சலைக் கேட்டும், அவளது பெரிய உருவத்தைக் கண்டும் கோகுலத்தில் இருந்த பலரும் மயக்கமுற்று விழுந்தனர். பிணமாய்க் கிடந்த பூதனையின் மார்பில் விளையாடிக் கொண்டிருந்த உன்னை சில ஆய்ச்சி பெண்கள் ஓடி வந்து தூக்கினர் அல்லவா?

10. புவந மங்கல நாமபிரேவ தே யுவதிபிர்
பஹுதா க்ருதரக்ஷணா:
த்வம் அயி வாதநிகேதனநாத மாம்
அகயந் குரு தாவக ஸேவகம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உலகம் அனைத்திற்கும் அனைத்து மங்கலத்தையும் அளிக்கும் உனது பெயரைக் கூறியபடி, உனக்குப் பலவகையிலும் த்ருஷ்டி கழித்தனர். குருவாயூரின் நாதனே! எனது வ்யாதிகளை நீக்கி உனக்குப் பணி புரியும்படி செய்ய வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar