Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜயோகம் தரும் ராஜராஜேஸ்வரி! செங்கழுநீரம்மன் கோவில் பெருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
10 ஆயிரம் கோவில்களுக்கு பூஜை அரசு வழங்குகிறது உபகரணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2015
11:07

சென்னை: சிறு கோவில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் துவங்கி வைக்கிறார்.சிறுகோவில்களில், ஒருகால பூஜையேனும் நடத்தப்பட வேண்டும் என, 1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார். 1993ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மக்கள் பங்கு, 2,500 ரூபாய் அரசு பங்கு, 20 ஆயிரம் ரூபாய் மற்றும் கோவில் பராமரிப்பு நிதி 1,300 ரூபாய், கோவில் நல நதியில் இருந்து 1,200 ரூபாய் என, ஒவ்வொரு கோவிலுக்கும், 25 ஆயிரம் ரூபாய் பராமரிப்புச் செலவாக வழங்கப்பட்டது. இந்த தொகை பின், 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இப்போது, 11,931 கிராமப்புற கோவில்களில் பூஜை நடந்து வருகிறது.கிராமங்களில் உள்ள சிறு கோவில்களில், பூஜைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை என்றும், அரசே அவற்றை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, கிராமங்களில் உள்ள, 10 ஆயிரம் சிறு கோவில்களுக்கு பித்தளை தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு, அன்ன தொங்கு விளக்கு ஆகியவற்றை வழங்க அறநிலையத் துறைக்கு, அரசு உத்தரவிட்டது. கும்பகோணம் பூம்புகார் நிறுவனம் சார்பில் கோவில்களுக்கு வழங்க வேண்டிய பூஜை உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. இந்தப் பொருட்களை எல்லா மாவட்டத்துக்கும் அனுப்பி வருகின்றனர். எல்லா ஊர்களுக்கும் சென்று சேர்ந்த பின், முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை துவங்கி வைக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar