பதிவு செய்த நாள்
23
ஜூலை
2015
04:07
1. த்வாம் ஏகதா குருமருத்புர நாத வோடும்
காட அதிரூட கரிமாணம் அபாரயந்தீ
மாதா நிதய சயநே கிம் இதம் பத இதி
த்யாயந்தீ அசேஷ்டத க்ருஹேஷு நிவிஷ்ட சங்கா
பொருள்: குருவாயூரப்பனே! ஒரு நாள் உன்னைத் தனது மடியில் வைத்திருந்த யசோதை நீ திடீரென மிகவும் கனமாக இருப்பதை உணர்ந்தாள். மனதில் கவலையுடன் படுக்கையில் படுக்க வைத்து, வீட்டு வேலைகள் செய்யத் தொடங்கினாள்.
2. தாவத் விதூரம் உபகர்ணித கோர கோஷ
வ்யாஜ்ரும்பி பாம்ஸு படலீ பரிபூரித ஆச:
வாத்யா வபு: ஸ: கில தைத்யவர: த்ரணாவர்த்த்
ஆக்ய: ஜஹார ஜந மாநஸ ஹாரிணம் த்வாம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த நேரம் சற்று தொலைவில் மிகப் பெரிய ஓசை எழுந்தது. அனைத்துத் திசைகளிலும் மண் துகள்கள் பறந்து மறைந்தன. இப்படியாக வந்த த்ருணாவர்த்தன் என்ற அசுரன், அனைவரையும் கவர்ந்து, உன்னை கவர்ந்து சென்றான் அல்லவா?
3. உத்தாம பாம்ஸு திமிர ஆஹத த்ருஷ்டி பாதே
த்ரஷ்டும் கிம் அபி அகுசலே பசுபால லோகே
ஹா பாலகஸ்ய கிம் இதி த்வத் உபாந்தம் ஆப்தா
மாதா பவந்தம் அவிலோக்ய ப்ருசம் ருரோத
பொருள்: குருவாயூரப்பா! எங்கும் படர்ந்த புழுதியின் காரணமாக அனைத்து இடங்களிலும் இருள் சூழந்தது. அங்கு இருந்த இடையர்கள், பசுக்கள் ஆகியவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. அப்போது யசோதை, உன்னை நினைத்தவளாய். குழந்தைக்கு என்ன நேர்ந்ததோ? என்று கூறியபடி ஓடி வந்தாள். உன்னை அங்கு காணாமல் கதறி அழத் தொடங்கினாள்.
4. தாவத் ஸ: தாநவ வர: அபி ச தீனமூர்த்தி
பாவத்க பார பரிதாரண லூந வேக:
ஸங்கோசம் ஆப ததநு க்ஷத பாம்ஸு கோஷே
வ்யதாயத பவத் ஜநநீ நிநாத:
பொருள்: குருவாயூரப்பா! உன்னைத் தூக்கிச் சென்ற அசுரன். உனது பாரம் தாங்காமல் வேகம் குறைந்தவனானான். அவனது உடலும் சுருங்கி அசைவின்றி இருந்தான். இதனால் காற்றின் வேகம் குறைந்தது. எனவே காற்றின் ஓசையும், புழுதியும் அடங்கின. ஆயினும் உனது தாயின் அழுகை ஒலித்தது.
5. ரோத உபகர்ணந வசாத் உபகம்ய கேஹம்
க்ரந்தத்ஸு நந்தமுக கோப குலேஷு தீந:
த்வாம் தாநவ: து அகில முக்தி கரம் முமுக்ஷு:
த்வயி அப்ரமுஞ்சதி பபாத வியத் ப்ரதேசாத்
பொருள்: குருவாயூரப்பா! உனது தாயின் அழுகைக் குரலைக் கேட்ட நந்தகோபரும் மற்றவர்களும் உனது வீட்டிற்கு ஓடி வந்தனர். காரணம் அறிந்த அவர்களும் அழுதனர். அப்போது தனது வலிமை இழந்த அசுரன் உன்னை விட்டுவிட எண்ணினான். ஆனால் அனைவருக்கும் முக்தி என்னும் விடுதலை அளிக்கும் நீ, அவனை விடவில்லை. ஆகவே உனது பாரம் தாங்காமல் உன்னுடன் சேர்ந்து அவனும் கீழே விழத் தொடங்கினான்.
6. ரோத ஆகுல: ததநு கோப கணா: பஹிஷ்ட
பாஷாண ப்ருஷ்ட புவி தேஹம் அதிஸ்த்தவிஷ்டம்
ப்ரைக்ஷந்த ஹந்த நிபதந்தம் அமுஷ்ய வக்ஷஸி
அக்ஷீணம் ஏவ ச பவந்தம் அவம் ஹஸந்தம்
பொருள்: குருவாயூரப்பா! அழுது கொண்டிருந்த ஆயர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்கள் ஒரு பாறை மீது அசுரனின் உடல் வீழ்ந்து கிடப்பதைக் கண்டனர். அவனது மார்பின் மீது நீ எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்ததைக் கண்டனர். இது என்ன வியப்பு!
7. க்ராவ ப்ரபாத பரிபிஷ்ட கரிஷ்ட தேஹ
ப்ரஷ்ட அஸு துஷ்ட தநுஜ உபரி த்ருஷ்ட ஹாஸம்
ஆக்நாநம் அம்புஜ கரேண பவந்தம் ஏத்ய
கோபா தது: கிரி வராத் இவ நீல ரத்நம்
பொருள்: குருவாயூரப்பா! பாறையின் மீது விழுந்ததால் அந்த அசுரனின் பெரிய உடலானது மிகவும் சிதைந்து காணப்பட்டது. உயிரற்ற அந்த உடலின் மீது அமர்ந்திருந்த நீ, உனது தாமரை போன்ற அழகிய கைகளால் அதனை தட்டிக் கொண்டும், சிரித்து மகிழ்ந்து கொண்டும் இருந்தாய் அல்லவா? உடனே உன் அருகில் வந்த ஆயர்கள். பெரிய மலையான அந்த உடலில் இருந்து நீல இரத்தினத்தினைப் போன்ற உன்னை எடுத்தனர்.
8. ஏகைகம் ஆசு பரிக்ருஹ்ய நிகாம நந்தந்
நந்தாதி கோப பரிரப்த விசும்பித அங்கம்
ஆதாது காம பரிசங்கித கோப நாரீ
ஹஸ்த அம்புஜ ப்ரதிதம் ப்ரணும: பவந்தம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இதனைக் கண்டு வியப்புடன் மகிழ்ந்த நந்தகோபரும் மற்றவர்களும் ஒருவர்பின் ஒருவராக உன்னைக் தூக்கி வைத்துக் கொண்டு மகிழ்ந்தனர். உன்னைக் கட்டி அணைத்து முத்தம் இட்டனர். அந்த நேரம் உன்னை ஆய்ச்சி பெண்கள் தூக்கிக் கொள்ள விரும்புவதை உணர்ந்த நீ, அவர்களது தாமரை மலர் போன்ற சிவந்த அழகிய கைகளுக்குத் தாவினாய். இத்தகைய உன்னைப் பணிக்கிறோம்.
9. பூய: அபி கிம் து க்ருணும்; ப்ரணத ஆர்த்தி ஹாரீ
கோவிந்த: ஏவ பரிபாலயதாத் ஸுதம் ந:
இத்யாதி மாதர பித்ரு ப்ரமுகை: ததாநீம்
ஸம்ப்ரார்த்தித: த்வத் அவநாய விபோ த்வம் ஏவ
பொருள்: குருவாயூரப்பா! அப்போது உனது தாய், தந்தை மற்றும் ஆயர்கள் அனைவரும், தன்னுடைய அடியார்களின் துன்பத்தை நீக்கும் கோவிந்தனே எங்கள் குழந்தையைக் காக்க வேண்டும். இவ்வாறு அவனை வேண்டுவதைத் தவிர நாங்கள் என்ன செய்வது? என்று துதித்தனர். இப்படியாக உன்னைக் காப்பாற்றும்படி உன்னையே வேண்டுவது வியப்பு!
10. வாத ஆத்மகம் தநுஜம் ஏவம் அயி ப்ரதூந்வந்
வாத உத்பவாத் மம கதாந் கிமு நோ துநோஷி
கிம் வாகரோமி புந: அபி அநில ஆலய ஈச
நிச்சேஷ ரோக சமநம் முஹு: அர்த்தயே த்வாம்
பொருள்: ஈசனே! க்ருஷ்ணா, குருவாயூரப்பா! காற்றின் வடிவம் கொண்டு வந்த அசுரனை நீ இப்படியாக வதம் செய்தாய். வாதத்தின் மூலமாக வந்த எனது பிணியை நீ ஏன் நீக்கவில்லை? நான் என்ன செய்வது? எனது பிணிகள் அனைத்தையும் தீர்க்கும்படி உன்னை மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்.