பதிவு செய்த நாள்
24
ஜூலை
2015
04:07
1. பவத் ப்ரபாவ அவிதுரா: ஹி கோபா:
தரு ப்ரபாத் ஆதிகம் அத்ர கோஷ்டே
அஹேதும் உத்பாத கணம் விசங்க்ய
ப்ரயாதும் அந்யத்ர மந: விதேநு:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது சக்தியை அறியாத ஆயர்கள், மரம் விழுந்தது போன்ற செயல்கள் தீய சகுனங்களாகத் தென்படுகின்றன என முடிவு செய்தனர். அதனால் கோகுலத்தை விடுத்து வேறு ஓர் இடத்திற்குச் செல்ல முடிவு செய்தனர்.
2. தத்ர உபநந்த அபித கோபவர்ய:
ஜகௌ பவத் ப்ரேரணயா ஏவ நூரும்
இத: ப்ரதீச்யாம் விபிநம் மஹோஜ்ஞம்
ப்ருந்தாவநம் நாம விராஜநி இதி
பொருள்: குருவாயூரப்பா! அப்போது அந்த ஆயர்களில் உபநந்தன் என்ற சிறந்தவன், நாம் இப்போது உள்ள இந்த கோகுலத்திற்கு மேற்கே ப்ருந்தாவனம் என்னும் அழகிய காடு உள்ளது என்றான். இவன் இப்படிக் கூறியது உன்னுடைய எண்ணமே அல்லவா?
3. ப்ருஹத் வநம் தத் கலு நந்த முக்ய:
விதாய கௌஷ்ட்டீநம் அத க்ஷணேந
த்வத் அந்வித த்வத் ஜநநீ நிவிஷ்ட
கரிஷ்ட யாந அநுகதா: விசேலு:
பொருள்: குருவாயூரப்பனே! அதன் பின்னர் நந்தகோபர் முதலானோர் இணைந்து, ப்ருஹத்வனம் என்ற பெயர் கொண்ட, அவர்கள் வசித்து வந்த கோகுலத்தை, சில மணி நேரத்திலேயே ஒரு மாட்டுத் தொழுவமாக மாற்றினார்கள். உன்னைத் தூக்கிச் கொண்டு உனது தாய் ஒரு வண்டியில் அமர்ந்தாள். இதனால் பெருமை உடைய அந்த வண்டியை பின்பற்றி அனைவரும் ப்ருந்தாவனத்திற்குச் சென்றனர்.
4. அந: மநோஜ்ஞ த்வநி தேநு பாலீ
குர ப்ரணாத அந்தரத: வதூபி:
பவத் விநோத ஆலபித அக்ஷராணி
ப்ரபீய ந அஜ்ஞாயத மார்க தைர்க்யம்
பொருள்: குருவாயூரப்பா! வழி முழுவதும் வண்டிகளின் இனிமையான ஓசையும், மாடுகளின் குளம்புச் சத்தங்களும் கேட்டபடி அவர்கள் சென்றனர். மேலும் மழலை முற்றாத சொற்களால் நீ ஆயர்களுடன் இனிமையாகப் பேசுவதையும் கேட்டனர். இதனால் அவர்களுக்கு நடந்த களைப்பும் தூரமும் தெரியவில்லை.
5. நிரீக்ஷ்ய ப்ருந்தாவநம் ஈச நந்தத்
ப்ரஸுந குந்த ப்ரமுக த்ருமௌகம்
அமோததா: சாத்வல ஸாந்த்ர லக்ஷ்ம்யா
ஹரிந்மணீ குட்டித புஷ்ட சோபம்
பொருள்: குருவாயூரப்பா! ஈசனே! (அந்த ப்ருந்தாவனம் எப்படி இருந்தது?) எங்கும் பூத்துக் குலுங்கியபடி மலர்கள்; குந்தம் போன்ற மலர்கள் நிறைந்த சோலைகள்; சோலைகளில் இரத்தினக் கற்கள் பதித்து வைத்தது போல் ஒளி வீசியபடி பசும்புற்கள் நிறைந்த தரை-இப்படியாக அழகு பொதிந்து விளங்கிய ப்ருந்தாவனத்தைக் கண்டு நீ மகிழ்ந்தாய் அல்லவா?
6. நவாக நிர்வ்யூட நிவாஸ பேதேஷு
அசேஷ கோபேஷு ஸுக ஆஸிதேஷு
வநச்ரியம் கோப கிசோரபாலீ
விமிச்ரித: பர்யக அலோகதா: த்வம்
பொருள்: குருவாயூரப்பா! அங்கு அவர்களால் சந்திரனின் பிரபை போன்று அழகான தனித்தனி வீடுகள் கட்டப்பட்டன. அவர்கள் சுகமாக வாசம் செய்யத் தொடங்கினர். நீ ஆயர் சிறுவர்களை உடன் அழைத்துக் கொண்டு ப்ருந்தாவனத்தில் அனைத்து இடங்களிலும் சுற்றி வந்தாய் அல்லவா?
7. அரால மார்க ஆகத நிர்மல அபாம்
மரால கூஜாக்ருத நர்ம லாபாம்
நிரந்தர ஸ்மேர ஸரோஜ வக்த்ராம்
களிந்த கந்யாம் ஸமலோகய: த்வம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அன்னப் பறவைகளின் இனிமையான ஒலியே அவளது இனிமையான பேச்சு; மலர்ந்து உள்ள தாமரை மலர்களே அவளது புன்னகை உடைய முகம் - இப்படியாக வளைந்து வளைந்து ஓடுபவளும் தெளிவான நீரை உடையவளும் களிந்தன் என்பவனின் மகளுமான யமுனை நதியை கண்டு நீ மகிழ்ந்தாய் அல்லவா?
8. மயூர கேகா சத லோபநீயம்
மயூக மாலா சபலம் மணீநாம்
விரிஞ்ச லோக ஸ்ப்ருசம் உச்ச ச்ருங்கை:
கிரிஞ்ச கோவர்த்தநம் ஜக்ஷதா: த்வம்
பொருள்: குருவாயூரப்பனே! மயில்களின் கோகோ என்னும் ஓசையால் அனைவரையும் ஈர்ப்பதும், ரத்தினக்கற்கள் வீசுகின்ற ஒளியால் பல நிறங்கள் உடையதும், உயர்ந்து உள்ளதால் அதன் உச்சி ப்ரும்மலோகத்தை எட்டுவதும் ஆகிய கோவர்த்தன மலையை நீ பார்த்தாய் அல்லவா?
9. ஸமம் தத: கோப குமாரகை: த்வாம்
ஸமந்த்த: யத்ர வந அந்தம ஆகா:
தத: தத: தாம் குடிலாம் அபச்ய:
களிந்த ஜாம் ராகவதீம் இவ ஏகாம்
பொருள்; குருவாயூரப்பா! நீ இடையர்களுடன் அந்தக் காட்டில் பல இடங்களிலும் சென்றாய். நீ எந்த இடத்திற்கெல்லாம் சென்றாயோ அந்த இடங்கள் அனைத்திற்கும், உன் மீது மிகுந்த காதல் உடையவளாக ஓடி வந்த யமுனையைக் கண்டாய் அல்லவா?
10. ததாவிதே அஸ்மின் விபிநே பசவ்யே
ஸமுத்ஸுக: வத்ஸகண ப்ரசாரே
சரந் ஸராம: அத குமாரகை: த்வம்
ஸமீர கேஹ அதிப பாஹி ரோகாத்
பொருள்: குருவாயூரப்பா! க்ருஷ்ணா! இப்படியாக பல சிறப்புகள் உடையதும். பசுக்களுக்கு இன்பம் அளிப்பதும் ஆக ப்ருந்தாவனம் இருந்தது. அங்கு நீ பசுக்களை மேய்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டாய். பலராமனுடனும் இடையர்களுடனும் சேர்ந்து நீ பல இடங்களில் பசு மேய்த்து வந்தாய். இப்படிப்பட்ட நீ என்னை பிணிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.