Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » அகாஸுரவதம்
அகாஸுரவதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2015
16:40

1. கதாசந வ்ரஜ சிசுபி: ஸமம் பவாந்
வந அசநே விஹித மதி: ப்ரகேதாம்
ஸமாவ்ருத: பஹுதர வத்ஸ மண்டலை:
ஸதேமநை: நிரகமத் ஈச ஜேமனை:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஈசனே! ஒரு நாள் உனது நண்பர்களுடன் சென்று வனத்தில் உணவு உண்ண ஆவல் கொண்டாய். அதற்காக ஒரு நாள் அதிகாலையில் பல மாடுகளுடன் கையில் சாதம். ஊறுகாய் போன்றவற்றை எடுத்துக் கொண்டு நீ புறப்பட்டாய் அல்லவா?

2. விநிர்யத: தவ சரண அம்புஜ த்வயாத்
உதஞ்சிதம் த்ரிபுவந பாவநம் ரஜ:
மஹர்ஷய புலக தரை: கலேவரை:
உதூஹிரே த்ருத பவத் ஈக்ஷண உத்ஸவா:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ இவ்வாறு வெளியில் கிளம்பியபோது அங்கு உனது தாமரை போன்ற அழகிய திருவடிகளில் புழுதி கிளம்பியது. அது மூன்று உலகங்களையும் தூய்மையாக்க வல்லது அல்லவா? அதனை முனிவர்கள் தங்கள் உடலில் பூசிக்கொண்டு உன்னுடைய தரிசனத்தை ஒரு விழாவாகவே கொண்டாடினர் அல்லவா?

3. ப்ரசாரயதி அவிரல சாத்வலே தலே
பசூந் விபோ பவதி ஸமம் குமாரகை:
அகாஸுர: ந்யருணத் அகாய வர்த்தநீம்
பயாநக: ஸபதி சயாநக ஆக்ருதி:

பொருள்: குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! நீ ஆயர்களோடு புற்கள் நிறைந்த தரைப்பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாய். அப்போது அகன் என்ற அசுரன் உனக்கு ஆபத்து விளைவிப்பதற்காக, பெரிய மலைப்பாம்பு போன்று உருவம் எடுத்துக் கொண்டு நீ செல்லும் வழியை மறித்துக் கிடந்தான் அல்லவா?

4. மஹா அசல ப்ரதிம தநோ: குஹா நிப
ப்ரஸாரித ப்ரதித முகஸ்ய காநநே
முக உதரம் விஹரண கௌதுகாத் கதா:
குமாரகா: கிம் அபி விதூரகே த்வயி

பொருள்: குருவாயூரப்பனே! காட்டிற்குள் சென்று உனது நண்பர்கள் விளையாட எண்ணினர். நீ சற்று தூரத்தில் இருந்தபோது, மலை போன்று உடலும் குகையாக வாயையும் உடைய அந்த அசுரனின் வாய்க்குள் சென்றனர். அல்லவா?

5. ப்ரமாதத: ப்ரவிசதி பந்நக உதரம்
க்வதத் ததௌ பசுப குலே ஸவத்ஸகே
விதந் இதம் த்வம் அபி விவேசித ப்ரபோ
ஸுஹ்ருத் ஜநம் விசரணம் ஆசுரக்ஷிதம்

பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக ஆயர்கள் எதுவும் அறியாமல் அந்தப் பாம்பின் வாயில் நுழைந்தனர். அங்கு அந்த பாம்பின் வயிற்றில் ஏற்பட்ட வெப்பத்தால் வேதனை அடைந்தனர். இதனை அறிந்து கொண்ட நீ, வேறு யாரையும் தங்கள் உதவி என்று நினைக்காத உனது நண்பர்களைக் காப்பாற்ற அந்தப் பாம்பின் வாய்க்குள் நுழைந்தாய்.

6. கல உதரே விபுலித வர்ஷ்மணா த்வயா
மஹா உரகே லுடதி நிருத்த மாருதே
த்ருதம் பவாந் விதளித கண்ட மண்டல:
விமோசயந் பசுப பசூந் விநிர்யயௌ

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தப் பாம்பின் வாய்க்குள் நுழைந்த நீ அதன் கழுத்தில் உனது உருவத்தைப் பெரியவனாக வளர்த்தாய். இதனால் அந்தப் பாம்பு மூச்சு விடமுடியாமல் திணறியது. அந்த வேதனையில் புரண்டது. நீ வேகமாக அதன் கழுத்தைப் பிளந்து கொண்டு, உனது தோழர்களையும், மாடுகளையும் அழைத்து கொண்டு வெளியில் வந்தாய்.

7. க்ஷணம் திவி த்வத் உபகமார்த்தம் ஆஸ்திதம்
மஹா அஸுர ப்ரபவம் அஹோ மஹ: மஹத்
விநிர்கதே த்வயி து நிலீநம் அஞ்ஜஸா
நப: தலே நந்ருது: அதோ ஜகு: ஸுரா:

பொருள்: உடனே அந்த அசுரனின் உடலில் இருந்து ஓர் ஒளி வெளிக்கிளம்பி வந்தது. நீ அந்தப் பாம்பின் உடலில் இருந்து வெளியே வருவதற்காகக் காத்து நின்றது. நீ வெளியில் வந்தவுடன் அது உன்னில் வந்து சேர்ந்தது. இதனைக் கண்டு தேவர்கள் ஆனந்தம் கொண்டு பாடி ஆடி மகிழ்ந்தனர்.

8. ஸ விஸ்மயை: கமலபவ ஆதிபி: ஸுரை:
அநுத்ருத: ததநு கத: குமாரகை:
திநே புந: தருண தசாம் உபேயுஷி
ஸ்வகை: பவாந் அதநுத போஜந உத்ஸவம்

பொருள்: குருவாயூரப்பா! அதன் பின்னர் உன்னைத் தொடர்ந்து (வான் வழியாக) ப்ரும்மா முதலானோர் வந்தனர். நீ உனது நண்பர்களுடன் இணைந்து, காட்டிற்குள் சென்றாய். நடுப்பொழுது வந்ததும் அவர்களுடன் அமர்ந்து உணவு உண்பதை ஒரு விழாவாகவே செய்தாய்.

9. விஷாணிகாம் அபி முரளீம் நிதம்பகே
நிவேசயந் கபலதர: கர அம்புஜே
ப்ரஹாஸயந் கலவசநை: குமாரகாந்
புபோஜித த்ரிதச கணை: முதா நுத:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ உனது மாடு மேய்க்கும் குச்சியையும், புல்லாங்குழலையும் இடுப்பில் செருகி வைத்திருந்தாய். தாமரை போன்று சிவந்தும் அழகாயும் உள்ள உனது சிறிய கைகளில் உணவை வைத்துக் கொண்டு நின்றாய். உனது வசீகரமான பேச்சுகள் மூலம் நண்பர்களை மகிழ வைத்தாய். அப்படியே உணவையும் உண்டாய். இதனைக் கண்டு மகிழ்வுற்ற தேவர்கள் உன்னைத் துதித்தனர் அல்லவா?

10. ஸுக அசநம் து இஹ தவ கோபமண்டலே
மக அசநாத் ப்ரியம் இவ தேவ மண்டலே
இதி ஸ்துத: திரிதச வரை: ஜகத்பதே
மருத் புரீ நிலய கதாத் ப்ரபாஹிமாம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உலகின் பதியே! அந்தத் தேவர்கள் உன்னை நோக்கி, பகவானே! இங்கு கோபர்களின் இடத்தில் அவர்கள் குழந்தைகளோடு அமர்ந்து உணவை உண்கிறாய். இந்த உணவு, தேவலோகத்தில் நடைபெறும் யாகங்களில் உனக்கு அளிக்கப்படும் அவிர்பாக உணவை விடச் சிறப்பாகவும் ப்ரியமாகவும் உள்ளது போலும் என்று கூறியபடி வணங்கினர். இப்படிப்பட்ட செயல்களை நிகழ்த்தும் நீ என்னை பிணிகளிடம் இருந்து காக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar