பதிவு செய்த நாள்
24
ஜூலை
2015
04:07
1. அந்ய அவதார நிகரேஷு அநிரீக்ஷிதம் நே
பூமா அதிரேகம் அபிவீக்ஷ்ய ததா அகமோக்ஷே
ப்ரஹ்மா பரீக்ஷிதுமநா: ஸ பரோக்ஷ பாவம்
நிந்யே அதவத்ஸக கணாந் ப்ரவிதத்ய மாயாம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது மற்ற அவதாரங்களில் காணப்படாத உனது செல்வங்களை இந்த அவதாரத்தில் குறிப்பாக அகாஸுரன் வதத்தின் போது ப்ரும்மா கண்டான் என்றாலும் உன்னை மேலும் சோதிக்க எண்ணியபடி, தனது மாயை மூலம் மாடுகளின் கூட்டத்தை மறைத்தான்.
2. வத்ஸாந் அவீக்ஷ்ய விவசே பசுப உத்கரே தாந்
ஆநேது காம இவ தாத்ரு மத அநுவர்த்தீ
த்வம் ஸாமி புக்த கவல: கதவாம் ஸ்ததாநீம்
புக்தாம் ஸ்திரோதித ஸரோஜபவ: குமாராந்
பொருள்: குருவாயூரப்பா! தங்கள் மாடுகளைக் காணாமல் உனது நண்பர்களான ஆயர் சிறுவர்கள் மனவருத்தம் கொண்டனர். நீயும் ப்ரும்மாவின் திட்டத்திற்குத் துணை போவது போன்று, பாதி உண்ட சோற்றுக் கவளத்தோடு (மாடுகளைத் தேட) சென்றாய். அப்போது ப்ரும்மா அங்கே உண்டு கொண்டிருந்த சிறுவர்களையும் மறைத்தான்.
3. வத்ஸாயித: ததநு கோப கணாயித: த்வம்
சிக்ய ஆதி பாண்ட முரளீ கவல ஆதிரூப:
ப்ராக்வத் விஹ்ருத்ய விபிநேஷு சிராய ஸாயம்
த்வம் மாயயா அத பஹுதா ப்ரஜம் ஆயயாத
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் நீ உனது மாயை மூலம் ஆயர் சிறுவர்களாகவும் கன்றுகளாகவும் உருமாறினாய். இது தவிர அவர்கள் உறி முதலான பாத்திரங்களாகவும், புல்லாங்குழல்களாகவும், குச்சிகளாகவும் வடிவங்கள் எடுத்தாய். அத்துடன் காட்டில் எப்போதும் போல் விளையாடினாய். பின்னர் மாலை நேரமானதும் ப்ருந்தாவனம் திரும்பினாய் அல்லவா?
4. த்வாம் ஏவ சிக்ய கவல ஆதிமயம் ததாந:
பூய: த்வம் ஏவ பசு வத்ஸக பாலரூப:
கோ ரூபிணீபி: அபி கோப வதூ மயீபி:
ஆஸாதித: அஸி ஜநநீபி: அதி ப்ரஹர்ஷாத்
பொருள்: குருவாயூரப்பா! மாட்டுக் கன்றுகளாக, ஆயர் சிறுவர்களாக, சிறுவர்களின் பொருள்களாக ஆக இப்படி பலவிதமாக உன்னை நீயே உருவம் எடுத்துக் கொண்டாய். இப்படிச் சென்ற நீ அங்கிருந்த ஆய்ச்சிமார்களாலும், பசுக்களாலும் மிகவும் அன்புடன் வரவேற்கப்பட்டாய் அல்லவா?
5. ஜீவன் ஹி கஞ்சித் அபிமாந வசாத் ஸ்வகீயம்
மத்வா தநூஜ: இதி ராக பரம் வஹந்த்ய:
ஆத்மாநம் ஏவ து பவந்தம் அவாப்ய ஸுநும்
ப்ரீதிம் யயு: கியதீம் விநிதா: ச காவ:
பொருள்: குருவாயூரப்பா! இந்த உலகில் ஏதோ ஒரு ஜீவனைத் தனது பிள்ளை என்று பெற்றெடுத்து அதன் மீது அன்பு வைக்கின்றனர். இப்படி இருக்கும்போது அங்கு இருந்த பசுக்களும், தாய்மார்களும் தங்கள் உயிராகவே நினைத்திருந்த உன்னைத் தங்கள் பிள்ளைகளாக (அவர்கள் அறியாமலேயே) அடைந்த போது அவர்கள் எவ்வாறு மிகழ்வுறாமல் இருந்திருப்பார்கள்.
6. ஏவம் ப்ரதிக்ஷண விஜ்ரும்பித ஹர்ஷ பார
நிச்சேஷ கோப கண லாலித பூரி மூர்த்திம்
த்வாம் அக்ரஜ: அபு புபுதே கில வத்ஸர அந்தே
ப்ரஹ்ம ஆத்மதோ: அபி மஹாந் யுவயோ: விசேஷ:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக அனைத்து கோபிகைகளும், பல வடிவம் கொண்ட உன்னை. ஒவ்வொரு நிமிடத்திலும் ஆனந்தம் பொங்க வைத்தனர். நீ இவ்வாறு பல உருவம் கொண்டிருந்ததை உனது அண்ணனான பலராமன் கூட வருட முடிவில் தான் அறிந்தான் அல்லவா? நீங்கள் இருவருமே ஒரே ப்ரஹ்மத்தின் ஸ்வரூபங்கள் என்றாலும் உங்களுக்கு இடையே ஒரு வேறுபாடு இருந்தது அல்லவா?
7. வர்ஷா அவதௌ நவ புராதந வத்ஸ பாலாந்
த்ருஷ்ட்வா விவேக மஸ்ருணே த்ருஹிணே விமூடே
ப்ராதீத்ருச: ப்ரதிநவாந் மகுட அங்கத ஆதி
பூஷாம் சதுர்புஜ யுஜ: ஸஜல அம்புத ஆபாந்
பொருள்: குருவாயூரப்பா! வருடத்தின் முடிவில் ப்ரும்மா தான் ஒளித்து வைத்திருந்த கன்றுகள் மற்றும் சிறுவர்களுக்கும், புதிதாக உள்ள சிறுவர்கள் மற்றும் கன்றுகளுக்கும் எந்த விதமான வித்தியாசமும் காண இயலாமல் வியப்புற்று மயங்கி நின்றான். அப்போது நீ புதிய சிறுவர்கள் மற்றும் கன்றுகளை (ப்ரும்மா அறிந்து கொள்வதற்காக) நான்கு கரங்களுடனும், க்ரீடம் முதலான ஆபரணங்களுடனும், மழைநீர் கொண்ட கறுத்த மேகம் போன்றும் உனது ரூபமாகத் தோன்றச் செய்தாய் அல்லவா?
8. ப்ரதி ஏகம் ஏவ கமலா பரிலாலித அங்காந்
போகி இந்த்ர போக சயநாந் நயந அபிராமாந்
லீலா நிமீலித த்ருச: ஸநக ஆதியோகி
வ்யாஸேவிதாந் கமல பூ: பவத: ததர்ச
பொருள்: குருவாயூரப்பா! உன்னுடைய ஒவ்வோர் உருவத்தையும் மஹாலக்ஷ்மி சீராட்டி வணங்கினாள்.
ஒவ்வோர்! உருவமும் பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்து காணப்பட்டது. ஒவ்வொன்றும் யோக நித்திரையில் கண்மூடி இருந்தது. ஒவ்வொன்றையும் ஸநகாதிகள் வணங்கித் துதித்தனர். இப்படியாக ப்ரும்மா உனது வடிவங்களை அவர்களில் கண்டான் அல்லவா?
9. நாராயண ஆக்ருதிம் அஸங்க்யதமாம் நிரீக்ஷ்ய
ஸர்வத்ர ஸேவகம் அபி ஸ்வம் அவேக்ஷ்ய தாதா
மாயா நிமக்ந ஹ்ருதய: விமுபோஹ யாவத்
ஏக: பபூவித ததா கபல அர்த்தபாணி:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக எண்ணற்ற நாராயண உருவங்களையும், ஒவ்வொரு நாராயணனுக்கும் தான் சேவகனாக நிற்பதையும் ப்ரும்மா கண்டு, மீண்டும் செய்வதறியாது மயங்கி நின்றான். அவன் மீது பரிதாபம் கொண்டு, அவன் மயக்கம் நீங்க, நீ தனியாக கையில் சோற்று உருண்டையுடன் முன்னர் எவ்வாறு இருந்தாயோ அப்படியே தோன்றினாய்.
10. நச்யந் மதே ததநு விச்வபதிம் முஹு: த்வாம்
நத்வா ச நூதவதி தாதரி தாம யாதே
போதை: ஸமம் ப்ரமுதிதை: ப்ரவிசந் நிகேதம்
வரதாலய அதிப விபோ பரிபாஹி ரோகாத்
பொருள்: எங்கும் உள்ளவனே! குருவாயூரின் அதிபதியே! குருவாயூரப்பா! அதன் பின்னர் ப்ரும்மா தனது கர்வத்தை அடக்கிக் கொண்டான். உன்னைப் பலமுறை வணங்கித் துதித்தான். பின்னர் தனது லோகத்திற்குச் சென்றான். நீயும் (பழைய) சிறுவர்கள்.
கன்றுகளுடன் உனது வீட்டிற்குச் சென்றாய்! இப்படிப்பட்ட நீ என்னை பிணிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.