பதிவு செய்த நாள்
29
ஜூலை
2015
05:07
1. மதந ஆதுர சேதஸ: அந்வஹம்
பவத் அங்க்ரி த்வய தாஸ்ய காம்யயா
யமுநா தட ஸீம்நி ஸைகதீம்
தரல அக்ஷ்ய: கிரிஜாம் ஸமார்ச்சிசந்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னால் நிலையற்று மருண்ட பார்வை பார்க்கின்ற கோபிகைகள். உன் மீது கொண்ட காமத்தால் மனம் சஞ்சலம் அடைந்தனர். உன்னுடைய பாதங்களில் சரணம் என்று புக விரும்பினார்கள். அதற்காக யமுனை நதிக்கரையில் அவர்கள் மணலால் பார்வதி உருவத்தை உருவாக்கி, அவளை வணங்கினர் அல்லவா?
2. தவ நாம கதா ரதா: ஸமம்
ஸுத்ருச: ப்ராத: உபாகதா: நதீம்
உபஹார கதை: அபூஜயந்
தயித: நந்த ஸுத: பவேத் இதி
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மிகவும் அழகிய கண்களை உடைய கோபிகைகள் உன்னுடைய திருப்பெயர்கள் மீதும் உனது சரிதங்கள் மீதும் மிகவும் பற்று கொண்டிருந்தனர். இதனால் அன்றாடம் விடியற்காலைப் பொழுதில் அனைவரும் சேர்ந்து யமுனை ஆற்றுக்குச் சென்றனர். அங்கு உள்ள அந்த பார்வதியை பலவிதமான மலர்களால் பூஜித்து, நந்தகோபரின் மகனான க்ருஷ்ணனே எங்கள் கணவனாக அமைய வேண்டும் என்று வேண்டினர்.
3. இதி மாஸம் உபாஹித வ்ரதா:
தரல அக்ஷீ: அபிவீக்ஷ்ய தா பவாந்
கருணா ம்ருதுல: நதீ தடம்
ஸமயாஸீத் தத் அநுக்ரஹ இச்சயா
பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக அந்தக் கோபிகைகள் ஒரு மாத காலம் விரதம் மேற்கொண்டனர். இதனால் உனக்கு அவர்கள் மீது கருணை உண்டானது. அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய நீ, அவர்கள் நீராடிக் கொண்டிருந்த யமுனை நதியின் கரைக்கு வந்தாய்.
4. நியம அவஸிதௌ நிஜ அம்பரம்
தட ஸீமநி அவமுச்ய தா: ததா
யமுநா ஜல கேலந ஆகுலா:
புரத: த்வாம் அவலோக்ய லஜ்ஜிதா:
பொருள்: குருவாயூரப்பா! தங்கள் நோன்பை முடித்த பின்னர் அந்தக் கோபிகைகள், தங்களுடைய ஆடைகளை நதியின் கரையில் வைத்தனர். அதன் பின்னர் அவர்கள் யமுனை நதியில் இறங்கி விளையாடி மகிழத் தொடங்கினர். அந்த நேரம் நீ அவர்கள் முன்னால் வந்தாய். உன்னைக் கண்டவுடன் வெட்கம் அடைந்தனர். அல்லவா?
5. த்ரபயா நமித ஆநநாஸு அதோ
வநிதாஸு அம்பர ஜாலம் அந்திகே
நிஹிதம் பரிக்ருஹ்ய பூருஹ:
விடபம் த்வம் தரஸா அத்ரூடவாந்
பொருள்: குருவாயூரப்பா! அவர்கள் வெட்கத்தால் தலை குனிந்து நின்றனர். அப்போது நீ அவர்கள் கரையில் வைத்திருந்த ஆடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, மிகவும் வேகமாக அங்கிருந்த ஒரு மரத்தில் ஏறிக் கொண்டாய்.
6. இஹ தாவத் உபேத்ய நீயதாம்
வஸநம் வ: ஸுத்ருச: யதா யதம்
இதி நர்ம ம்ருது ஸ்மிதே த்வயி
ப்ருவதி வ்யாமுமுஹே வதூ ஜநை:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அவர்களிடம் மெதுவாகச் சிரித்துக்கொண்டே, அழகான கண்களைக் கொண்ட கோபிகைகளே! இங்கு வந்து உங்கள் உடைகளை எடுத்துச் செல்லுங்கள் என்றாய். இதனைக் கேட்ட அவர்கள் செய்வது அறியாது திகைத்து நின்றார்கள்.
7. அயி ஜீவ சிரம் கிசோர
ந: தவ தாஸீ: அவ சீகரோஷி கிம்
ப்ரதிச அம்பரம் அம்புஜ ஈக்ஷண இதி
உதித: த்வம் ஸ்மிதம் ஏவ தத்தவாந்
பொருள்: குருவாயூரப்பனே! அவர்கள் உன்னை நோக்கி, நந்தகோபரின் குழந்தையே! நீ நீண்ட நாள் நல்லபடியாக வாழ்வாய். உன்னுடைய அடிமைகள் நாங்கள். எங்களை ஏன் (இன்னும் ஏற்காமல்) மனம் பேதலிக்கச் செல்கிறாய்? எங்கள் உடைகளைத் தந்துவிட மாட்டாயா? என்றனர். ஆனால் நீ அவர்களுக்கு உனது புன்னகையை மட்டுமே கொடுத்தாய்.
8. அத்ருஹ்ய தடம் க்ருத அஞ்ஜலீ:
பரிசுத்தா: ஸ்வகதீ: நிரீக்ஷ்ய தா:
வஸநாநி அகிலாநி அநுக்ரஹம்
புந: ஏவம் கிரம் அபி அதா: முதா
பொருள்: குருவாயூரப்பா! இதனால் அவர்கள் மிகுந்த சுத்தமான மனதுடன், கூப்பிய கைகளைக் கொண்டு உனக்கு அஞ்சலி செய்தவர்களாகக் கரைக்கு வந்தனர். உடனே நீ அவர்கள் ஆடைகளைக் கொடுத்தாய். மேலும் அவர்களுக்கு நீ பின் வரும் சொற்களையும் கூறினாய்.
9. விதிதம் நநு வ: மநீஷிதம்
வதிதார: து இஹ மோக்யம் உத்தரம்
யமுநா புலிநே ஸசந்த்ரிகா:
க்ஷணதா இதி அபலா: த்வம் ஊசிவாந்
பொருள்: குருவாயூரப்பா! நீ அவர்களிடம், கோபிகைகளே! உங்கள் மனதில் உள்ள எண்ணம் முழுவதும் நான் அறிந்து கொண்டேன். அந்த எண்ணங்களுக்கான பதிலை உங்களுக்கு இன்னும் சிறிது காலம் கழித்து, யமுனை ஆற்றின் கரையில் உள்ள மணலில், நிலவுடன் இணைந்த ஓர் இரவு கூறும் என்றாய்.
10. உபகர்ண்ய பவந் முக ச்யுதம்
மது நிஷ்யந்தி வச: ம்ருகீ த்ருச:
ப்ரணயாத் அபி வீக்ஷ்ய வீக்ஷ்ய தே
வதந அப்ஜம் சநகை: க்ருஹம் கதா:
பொருள்: குருவாயூரப்பா! மான் போன்ற அழகான கண்களை உடைய அந்த கோபிகைகள், உனது இனிமையான சொற்களை கேட்டு மிகவும் மகிழ்ந்தனர். உனது அழகிய தாமரை போன்ற மலர்ந்த முகத்தை மீண்டும் மீண்டும் பார்த்தனர். அப்படியே பார்த்தபடி வீடுகளுக்குச் சென்றனர்.
11. இதி நநு அநுக்ருஹ்ய வல்லவீ:
விபிந அந்தேஷு புரா இவ ஸஞ்சரந்
கருணா சிசிர: ஹரே ஹர
த்வரயா மே ஸகல ஆமய ஆவலிம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஹரியே! இப்படியாக அவர்களுக்கு நீ அனுக்ரஹம் செய்தாய். பின்னர் காட்டிலேயே தொடர்ந்து சுற்றினாய். இத்தகைய கருணையுடன் கூடிய நீ, என்னுடைய அனைத்து பிணிகளையும் விரைவாக நீக்க வேண்டும்.