விருதுநகர்:விருதுநகர் புனித இன்னாசியார் ஆலய திருவிழாவில் தேர்பவனி மின்னொளியில் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.இந்த ஆலய திருவிழாவையொட்டி ஜூலை 24 மாலை 6 மணிக்கு மதுரை கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலாளர் எஸ்.பீட்டர்ராய் கொடியேற்றினார். விழா நாட்களில் திருப்பலி, மறையுரைநடந்தது. நேற்றுமுன்தினம் ஒன்பதாம் நாளன்று பாதிரியார் ஜே.ஜெயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தது. அதை தொடர்ந்து மாலையில் புனித இன்னாசியார், வேளாங்கண்ணி, ஆரோக்கிய அன்னை திருஉருவ தேர்பவனி மின்னொளியில் நடந்தது. பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகம், தெப்பம், மேலத்தெரு, தேசபந்து மைதானம் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று காலை பாதிரியார்கள் ஞானப்பிரகாசம், ஜே.தாமஸ் எடிசன் தலைமையில் சிறப்பு திருப்பலியும், மாலையில் அலோசியஸ் துரைராஜ், ராஜா தலைமையில் திருப்பலி, திவ்ய நற்கருணை பவனி நடந்தது. ஏற்பாடுகளை பாதிரியார் ஞானப்பிரகாசம் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.