பதிவு செய்த நாள்
03
ஆக
2015
12:08
உடுமலை: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை சார்பில், பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் திருமூர்த்திமலையில் இன்று ஆடிப்பெருவிழா துவங்குகிறது. ஆண்டுதோறும், ஆடிப்பெருவிழாவையொட்டி, திருமூர்த்திமலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. நடப்பாண்டில், இப்பெருவிழா, இன்றும், நாளையும் திருமூர்த்திமலை படகுத்துறை அருகே உள்ள இடத்தில் நடக்கிறது. இன்று காலை, 9:30 மணிக்கு, மங்கள இசையுடன் விழா துவங்குகிறது. காலை, 10:30 மணிக்கு, எஸ்.கே.பி., பள்ளியின் வெல்கம் டான்ஸ் ஜி.வி.ஜி., மெட்ரிக் பள்ளியின் பரதநாட்டியம், 10:40 மணிக்கும், 10:50 க்கு வருவாய்த்துறை சார்பில், ஜிக்காட்டம், அரசு கலைக்கல்லுாரி மாணவர்களின் படுகா நடனம், 11.30 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து, வித்யாசாகர் கல்லுாரி மாணவர்களின் நாட்டுப்புற பாடல்கள், விசாலாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், மதியம், 12:00க்கு, பள்ளபாளையம் ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளியின் குழு நடனம், 12:20க்கு சீனிவாசா வித்யாலயா மாணவர்களின் கிராமிய குழு நடனம், 12:30க்கு ஜி.வி.ஜி., மகளிர் கல்லுாரி மாணவியரின் புதியதோர் சொர்க்கம் செய்வோம்- நாடகம் நடக்கிறது. மேலும், அரசு கல்லுாரி மாணவர்களின் தேவராட்டம், திருப்பூர் ஏலாலங்குடி குழுவினரின் நாட்டுப்புற ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.
மதியம் திண்டுக்கல் ராதாரவி குழுவினரின் தப்பாட்ட நிகழ்ச்சியை தொடர்ந்து, கண்காட்சி துவக்கம் உட்பட அரசு விழா நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, மாவடப்பு, குழிப்பட்டி மலைவாழ் மக்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (4ம் தேதி), இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 9:30 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. காலை,10:30 மணிக்கு, ஆர்.ஜி.எம்., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியின் விநாயகர் பக்தி பாடல், உலக சமாதான ஆலயம் சார்பில் யோகா விழிப்புணர்வு, 11:00 மணிக்கு எஸ்.கே.பி., பள்ளியின் சீதா கல்யாணம் நிகழ்ச்சியும், வருவாய்த்துறை சார்பில் ஜிக்காட்டம், வித்யாசாகர் கல்லுாரி சார்பில், கிராமிய கலைப்பாடல், ஆதர்ஷ் மேல்நிலைப்பள்ளியின் பரதநாட்டியம் 12:30 மணிக்கு நடக்கிறது. பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கிராமிய நடனம், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தப்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. போட்டிகள்: இன்று (3ம் தேதி) காலை 10:30க்கு வழுக்கு மரம் ஏறுதல், 11:30க்கு ஆண்களுக்கான கபடி போட்டி, மதியம் 1:30க்கு உறி அடித்தல், 2:30 மணிக்கு லக்கி கார்னர், நாளை (4ம் தேதி) காலை 10:30 மணிக்கு கயிறு இழுத்தல், 11:30க்கு லக்கி கார்னர், மதியம் 12:30 மணிக்கு பெண்களுக்கான கபடிபோட்டி, 2:00 மணிக்கு வழுக்கு மரம் ஏறுதல், உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. பல்வேறு அரசு துறைகளின் கண்காட்சி, இன்று மாலை, 3:00 மணி அளவில் துவக்கப்படுகிறது.