Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » சுதர்சன சாப விமோசனம்
சுதர்சன சாப விமோசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2015
04:08

சுதர்சன சாப விமோசனம், சங்கசூடவதம் அரிஷ்டவதம்

1. இதி த்வயி ரஸ ஆகுலம் ரமித வல்லபே வல்லவா:
கதா அபி புரம் அம்பிகா கமிது: அம்பிகா காநநே
ஸமேத்ய பவதா ஸமம் நிசி நிவேஷ்ய திவ்ய உத்ஸவம்
ஸுகம் ஸுஷுபு அக்ரஸீத் வ்ரஜபம் உக்ர நாக: ததா

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக நீ ராஸக்ரீடை மூலம் கோபிகைகளுக்குப் பரமானந்தத்தை அளித்தாய். ஒரு நாள் அம்பிகா என்ற வனத்தில் இருந்த சிவன் கோயிலுக்கு ஆயர்கள் அனைவரும் சென்றனர். அங்கு நடந்த உத்சவத்தைக் கண்டு மகிழ்ந்தனர். அங்கு அன்று இரவு தங்கினர். அப்போது ஒரு பெரிய மலைப்பாம்பு நந்தகோபரை விழுங்கியது அல்லவா?

2. ஸமுந்முகம் அத உல்முகை: அபிஹதே அபி தஸ்மிந் பலாத்
அமுஞ்சதி பவத் பதே ந்யபதி பாஹி பாஹி இதி தை:
ததா கலு பதா பவாந் ஸமுகபகம்ய பஸ்பர்ச தம்
பபௌ ஸ ச நிஜாம் தநும் ஸமுபஸாத்ய வைத்யா தரீம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இதனைக் கண்ட ஆயர்கள் கொள்ளிக் கட்டைகள் கொண்டு அந்தப் பாம்பை அடித்தனர். ஆயினும் அது நந்தகோபரை விடவில்லை. உடனே அவர்கள் உனது கால்களில் விழுந்து, காப்பாற்று காப்பாற்று என்று கூறினர். நீ விரைவாக வந்து அந்தப் பாம்பின் உடலை உனது அழகான கால்களால் தொட்டாய் அல்லவா? உடனே அந்தப் பாம்பு தனது சாபம் நீங்கப் பெற்று தனது முந்தைய வித்யாதர உருவத்தை மீண்டும் பெற்றதாமே!

3. ஸுதர்சந தர ப்ரபோ நனு ஸுதர்சந
ஆக்ய: அஸ்மி அஹம்
முநீந் க்வசித் உபாஹஸம் த
இஹ மாம் வ்யது: வாஹஸம்
பவத் பத ஸமர்பணாத் அமலதாம்
கத: அஸ்மி இதி அஸௌ
ஸ்துவந் நிஜ பதம் யயௌ
வ்ரஜ பதம் ச கோபா: முதா

பொருள்: குருவாயூரப்பா! அந்த வித்யாதரன் உன்னிடம், க்ருஷ்ணா! சுதர்சன சக்கரத்தைக் கைகளில் உள்ளவனே! ப்ரபுவோ! எனது பெயர் சுதர்சனன் என்பது ஒரு முறை நான் சில முனிவர்களைப் பார்த்துக் கேலி செய்தேன். அவர்கள் என்னை மலைப்பாம்பாக மாறும்படி சபித்தனர். ஆனால் இன்று உனது தூய்மையான பாதம் பட்டதால் எனது சாபம் நீங்கி தூய்மையாக ஆனேன். என்றான். பின்னர் தனது இடத்திற்குச் சென்றான். ஆயர்களும் வ்ரஜ பூமிக்குத் திரும்பினர்.

4.கதா அபி கலு ஸீரிணா விஹரதி த்வயி ஸ்த்ரீ ஜநை:
ஜஹார தநத அநுக: ஸ கில சங்கசூட: அபலா:
அதித்ருதம் அநுத்ருத: தம் அத முக்த நாரீ ஜநம்
ருரோஜித சிரோமணிம் ஹல ப்ருதே ச தஸ்ய அதத:

பொருள்: குருவாயூரப்பா! ஒரு நாள் நீ பலராமனோடும் ஆயர் பெண்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தாய். அப்போது, குபேரனின் வேலையாட்களில் ஒருவனான சங்கசூடன் என்பவன் அந்தப் பெண்களைத் தூக்கிச் சென்றான். நீ உடனே அவனைத் தூரத்திச் சென்று, அவனைக் கொன்றாய். அவன் தலையில் இருந்து உயர்ந்த ரத்தினக் கல்லை பலராமனுக்குப் பரிசாக அளித்தாய் அல்லவா?

5. திநேஷு ச ஸுஹ்ருத் ஜநை: ஸஹ வநேஷு லீலா பரம்
மநோபவ மநோஹரம் ரஸித வேணு நாத அம்ருதம்
பவந்தம் அமரீ த்ருசாம் அம்ருத பாரணா தாயிநம்
விசிந்த்ய கிமு ந ஆலபந் விரஹ தாபிதா: கோபிகா:

பொருள்: குருவாயூரப்பா! நீ பகல் நேரம் முழுவதும் உனது நண்பர்களுடன் காட்டில் விளையாடி மகிழ்ந்தாய். மன்மதனைப் போல் அனைவரையும் உனது அழகால் ஈர்த்தாய். இனிமையான புல்லாங்குழல் ஓசையை எழுப்பினாய். உன்னைக் கண்ட பெண்கள் அமிர்தம் பருகியதாகவே உணர்ந்தனர். அந்தப் பெண்கள் உனது பிரிவைத் தாங்க முடியாமல் விரகதாபத்தில் துடித்தனர். உன்னை நினைத்து எதைத்தான் அவர்கள் கூறவில்லை?

6. போஜ ராஜ ப்ருதக: து அத கச்சித்
கஷ்ட துஷ்ட பத த்ருஷ்டி அரிஷ்ட:
நிஷ்டுர ஆக்ருதி: அபஷ்டு நிநாத:
திஷ்டதே ஸ்ம பவதே வ்ருஷரூபி

பொருள்: குருவாயூரப்பா! போஜ அரசனான கம்சனின் பணியாட்களில் ஒருவன் அரிஷ்டன் என்பவன் ஆவான். அவன் மிகவும் கொடியவன் ஆவான். ஒரு முறை அவன் காளை மாடு போன்ற பயங்கரமான உருவம் கொண்டு, பலமாகக் கத்திக் கொண்டு. உன் எதிரில் வந்து நின்றானாமே!

7. சாக்வர: அத ஜகதீ த்ருதி ஹாரீ
மூர்த்திம் ஏவ: ப்ருஹதீம் ப்ரததாந:
பங்க்திம் ஆசு பரிகூர்ண்ய பசூநாம்
சந்தஸாம் நிதிம் அவாப பவந்தம்

பொருள்: குருவாயூரப்பா! காளை உருவமாக வந்த அவன் மக்களின் தைரியத்தை அபகரித்தான். தனது உருவத்தைப் பெரிதாக வளர்த்தான். இதன் மூலம் பசுக்கள் அனைத்தையும் விரட்டினான். அதன் பின்னர் வேதமயமான உன்னை நோக்கி விரைவாக ஓடி வந்தானாமே!

8. துங்க ச்ருங்க முகம் ஆசு அபியந்தம்
ஸங்க்ருஹய்ய ரபஸாத் அபியம் தம்
பத்ரரூபம் அபி தைத்யம் அபத்ரம்
மர்தயந் அமதய: ஸுர லோகம்

பொருள்: குவாயூரப்பா! அவனது முகத்தில் நீளமான கொம்புகள் இருந்தன. அவன் எந்த அச்சமும் இல்லாமல் உன்னை நோக்கி ஓடி வந்தான். நல்ல காளை உருவம் கொண்டிருந்த போதிலும் உள்ளத்தில் தீய எண்ணம் கொண்ட அந்த அசுரனை நீ விரைந்து பிடித்துக் கொன்றாய். இதனைக் கண்டு தேவர்கள் மகிழ்ந்தனர்.

9. சித்ரம் அத பகவந் வ்ருஷ காதாத்
ஸுஸ்திரா அஜநி வ்ருஷ ஸ்திதி: உர்வ்யாம்
வர்ததே ச வ்ருஷ சேதஸி பூயாந்
மேத இதி அபிநுத: அஸி ஸுரை: த்வம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தேவர்கள் உன்னை நோக்கி, பகவானே! நீ இன்று காளை வடிவம் கொண்டு இந்த அசுரனை அழித்தாய். இதனால் இந்த உலகில் தர்மம் வேர் ஊன்றியது. இதனால் தேவேந்தின் மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்தான், என்று துதித்தனர் அல்லவா? (இங்கு வ்ருஷ என்பது காளை, தர்மம், இந்திரன் என்று மூன்று பொருள்களில் உள்ளது).

10. ஓளக்ஷகாணி பரிதாவத தூரம்
வீக்ஷ்யதாம் அயம் இஹ உக்ஷ விபேதீ
இத்தம் ஆத்த ஹஸிதை: ஸஹ கோபை:
கோஹக: த்வம் அவ வாத புர ஈச

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஈசனே! இதனைக் கண்ட ஆயர்கள், காளை மாடுகளே! இங்கு உங்களைக்  கொல்பவன் உள்ளான். ஆகவே தூரமாக ஓடி விடுங்கள் என்று கிண்டலாகக் கூறினார்கள் அல்லவா? பின்னர் நீ அவர்களுடன் வீட்டிற்குச் சென்றாய். குருவாயூரில் உள்ள ஈசனே! என்னைக் காப்பாற்று வாயாக!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar