பதிவு செய்த நாள்
08
ஆக
2015
11:08
சாத்தூர்: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிகடைசி வெள்ளி விழா கொடியேற்றுத்துடன் துவங்கியது.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இக்கோயில் விழா சிறப்பு பூஜையுடன் 7.8.15 துவங்கிய நிலையில், இதில் கலந்து கொண்ட பக்தர்கள் குலவை, ஓம்சக்திபராசக்தி என்ற பக்தி கோஷமிட்டு வணங்கினர். கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி, உதவி ஆணையர் ரோஜாலிசுமதா, தாசில்தார் ஸார்ஜான்பேகம் ,இருக்கன்குடி, நத்தத்துபட்டி, கே.மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, அப்பனேரி, நென்மேனி உள்ளிட்ட ஊராட்சிகளின் தலைவர்கள், முக்கியபிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
ஆகஸ்ட் 15 வரை ஒன்பது நாள் நடக்கும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆகஸ்ட்14ல் ஆடி கடைசி வெள்ளி விழா நடக்கிறது. அன்று அம்மன் ரிஷப வாகனத்தில் அர்ஜூனாநதியில் எழுந்தருளி, இருக்கன்குடி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசிப்பர்.