திருப்பரங்குன்றம் உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2015 01:08
திருப்பரங்குன்றம்: உலக நன்மை, மாணவர்களின் படிப்பு சிறக்க மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் அனுஷாதேவி அறக்கட்டளை சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
கல்லுாரி செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். உதவி தலைவர் ராஜகோபால், பொருளாளர் கோவிந்தராஜன், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ராஜமன்னார், ஒருங்கிணைப்பாளர்கள் மல்லிகா, பவானி முன்னிலை வகித்தனர். வி.கே.கே. பிளே குரூப்ஸ் பள்ளி தாளாளர் கமலா துவக்கினார்.
அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னர் கல்லுாரி மாணவிகள் பூஜை செய்தனர்.கல்லுாரி முதல்வர் நேரு, இயக்குநர் ராஜாகோவிந்தசாமி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயராமன், தர்மராஜ், மகாலட்சுமி, உலக திருக்குறள் பேரவை பொதுச்செயலாளர் மணிமொழியன் பங்கேற்றனர்.