பதிவு செய்த நாள்
14
ஆக
2015
11:08
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, 200 ஆண்டு பழமை வாய்ந்த திரவுபதியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம், ஆக.,20ல் நடக்கிறது. மடத்துக்குளம் அருகே வஞ்சிபுரத்தில் திரவுபதியம்மன்கோவில் உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவிலை புதுப்பிக்கும் பணி, பல ஆண்டுக்கு முன் தொடங்கியது. எனினும், பணி நிறைவு செய்யப்படவில்லை.கோவிலில் பூஜைகளும் நடக்காமல், பாழடைந்த நிலையில் இருந்தது. பக்தர்கள் பலரது முயற்சியால், இரு ஆண்டுக்கு முன் மீண்டும் திருப்பணிகள் தொடங்கின. கோவில் விஸ்திரிப்பு, புதிய கோபுரம், முன் மண்டபங்கள் அமைத்தல், புதியசிலைகள், குதிரை வாகனங்கள், சுற்றுசுவர் இதர கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.ஆக.,20ல் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்துள்ளனர். விழா, ஆக.,18 மாலை,6:00 மணிக்கு முதல்கால யாக பூஜையுடன் தொடங்குகிறது. ஆக.,19ல் இரண்டாம், மூன் றாம் கால யாக பூஜைகள் நடக்கின்றன. ஆக.,20ம் தேதி காலை,5:00 மணிக்கு நான்காம்கால யாகபூஜை நடக்கிறது. அன்று காலை,7:45 மணியிலிருந்து, 8:15 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் கூறியதாவது:இப்பகுதியில் பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்ததாக பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை இருக்கிறது. இதன் அடிப்படையில் திரவுபதியம்மனுக்கு முன்னோர்கள் கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். 200 ஆண்டுகள் பழமையான இக்கோவில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கு கிராம மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இவ்வாறு, பக்தர்கள் தெரிவித்தனர்.