பதிவு செய்த நாள்
18
ஆக
2015
02:08
ஸைரந்த்ர்யா: ததநு சிரம் ஸ்மர ஆதுராயா:
யாத: அபூ: ஸுலலிதம் உத்தவேந ஸார்த்தம்
ஆவாஸம் த்வத் உபகம உத்ஸவம் ஸதா ஏவ
த்யாயந்த்யா: ப்ரதிதிந வாஸ ஸஜ்ஜிகாயா:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒரு முறை நீ ஸைரந்த்ரி என்பவளைப் பார்த்துப் பேசினாய். அது முதலவாக அவள் எப்போதும் உன்னையே த்யானம் செய்து கொண்டிருந்தாள். உன்மீது காதல் கொண்ட அவள் உனது சேர்க்கையால் உண்டாகும் இன்பத்தையே எண்ணியிருந்தாள். நீ வருவாய் என்று அன்றாடம் தன்னையும் தன் வீட்டையும் அலங்கரித்தாள். இப்படியிருக்கும்போது. ஒருநாள் நீ உத்தவரோடு அவள் வீட்டிற்குச் சென்றாயாமே!
2. உபகதே த்வயி பூர்ண மநோரதாம்
ப்ரமத ஸம்ப்ரம கம்ப்ர பயோதராம்
விவித மாநநம் ஆதததீம் முதா
ரஹஸி தாம் ரமயாஞ் சக்ருஷே ஸுகம்
பொருள்: குருவாயூரப்பா! நீ அவள் வீட்டிற்கு வந்தவுடன் தன்னுடைய விருப்பம் நிறைவேறியதால் பெரிதும் மகிழ்ந்தாள். மிகவும் பரபரப்புடன், தனது ஸ்தனங்கள் அசைய அவள் உனக்கு வேண்டிய பல மரியாதைகளைச் செய்தாள். நீ அவளுடன் தனிமையில் இருந்து, அவளைச் சுகமாக இருக்கும்படி செய்தாய் அல்லவா?
3. ப்ருஷ்டா வரம் புந: அஸௌ அவ்ருணோத் வராகீ
பூய: த்வயா ஸுரதம் ஏவ நிசா அந்தரேஷு
ஸாயுஜ்யம் அஸ்து இதி வதேத் புத ஏவ காமம்
ஸாமீப்யம் அஸ்து அநிசம் இதி அபி ந அப்ரவீத் கிம்
பொருள்: குருவாயூரப்பா! நீ அவளிடம் வேறு ஏதாவது வரம் கேட்குமாறு கூறினாய். ஆனால் உன்னைத் தவிர வேறு ஒன்றையுமே அறியாத பேதைப்பெண் உன்னுடன் மேலும் சில இரவுகளில் இன்பமாக இருப்பதையே வரமாகக் கேட்டாள். மிகுந்த ஞானம் உடையவர்கள் மட்டுமே மோட்சம் கேட்டார்கள். அருகில் எப்போதும் இருக்க வேண்டும் என்று அவள் ஏன் கேட்கவில்லை? (உனது மாயையோ?)
4. தத: பவாந் தேந நிசாஸு காஸுசித்
ம்ருகீ த்ருசம் தாம் நிப்ருதம் விநோதயந்
அதாத் உபச்லோக: இதி ச்ருதம் ஸுதம்
ஸ: நாரதாத் ஸாத்வத் தந்த்ர வித்பபௌ
பொருள்: குருவாயூரப்பா! அவள் கேட்டுக்கொண்ட படி, மான் போன்ற கண்களை உடைய அவளுடன் நீ சில இரவுகள் தங்கி அவளை இன்பமடையச் செய்தாய். அவள் மூலமாக உபச்லோகன் என்ற மகன் பிறந்தான். அவன் நாரதர் மூலமாக உயர்ந்த பாஞ்சராத்ர ஆகமத்தைக் கற்றுக் கொண்டானாமே!
5. அக்ரூர மந்திரம் இத: அத பல உத்தவாப்யாம்
அப்யர்ச்சித: பஹு நுத: முதிதேந தேந
ஏநம் விஸ்ருஜ்ய விபிந ஆகத பாண்டவேய
வ்ருத்தம் விவேதித ததா த்ருதராஷ்ட்ர சேஷ்டாம்
பொருள்: குருவாயூரப்பா! அதன் பின்னர் நீ உத்தவரோடும் பலராமனோடும் அக்ரூரரின் வீட்டிற்குச் சென்றாய். உன்னைக் கண்டதும் பெரிதும் மகிழ்ந்த அக்ரூரர் உன்னைப் பலவாறாகப் போற்றி வணங்கினார். நீ அக்ரூரரை பாண்டவர்களிடம் அனுப்பி, அவர்கள் காட்டில் இருந்து திரும்பி வந்த செய்தியையும், திருதராஷ்டிரன் அவர்களுக்கு இழைத்த தீமைகளையும் தெரிந்து கொண்டாய்.
6. விகாதாத் ஜாமாது: பரம ஸுஹ்ருத: போஜ ந்ரூபதே:
ஜராஸந்தே ருந்ததி அநவதி ருஷா அந்தே அத மதுராம்
ரத ஆத்யை: த்யோ லப்தை: கதிபய பல: த்வம் பல யுத:
த்ரயோ விம்சதி அக்ஷௌஹிணி தத் உபநீதம் ஸமஹ்ருதா:
பொருள்: ஜராஸந்தனின் மாப்பிள்ளையும் சிறந்த நண்பனுமான கம்ஸனை நீ கொன்றதால், உன்மீது ஜராஸந்தன் மிகவும் கோபம் கொண்டான். தனது படையுடன் மதுராவைத் தாக்கினான். நீ விண்ணுலகில் இருந்து உனக்குக் கிடைத்த தேர் மற்றும் ஆயுதங்களுடன் பலராமனுடன் சேர்ந்து ஜராஸந்தனின் இருபத்து மூன்று அக்ஷௌணி படைகளை அழித்தாய். (அக்ஷௌணி- 2,870 யானை, 2,870 தேர், 65,610 குதிரைகள், 1,09,350 வீரர்கள்)
7. பத்தம் பலாதத பலேந பலோத்தரம் த்வம்
பூய: பல உத்யம ரஸேந முமோசித ஏநம்
நிச்சேஷ திக் ஜய ஸமாஹ்ருத விச்வ ஸைந்யாத்
க: அந்ய: தத: ஹி பல பௌருஷவாத் ததாநீம்
பொருள்: குருவாயூரப்பா! அதன் பின்னர் பலராமன் வலிமை மிக்க அந்த ஜராசந்தனை வென்று அவனைக் கட்டிப்போட்டான். ஆனால் நீயோ, அவன் மீண்டும் தனது முழு ஆதரவுப் படைப்புகளைத் திரட்டிக் கொண்டு வருவதை விரும்பினாய். எனவே அவனது கட்டினை அவிழ்த்து விட்டாய். அனைத்து திசைகளுக்கும் சென்று அங்குள்ள அரசர்களை வென்றுள்ளதால் அவனது படை மிகவும் பெரியது. இத்தனை பெரிய படைபலம் உள்ள அரசர்கள் அப்போது அவனைத் தவிர வேறு யாரும் இல்லை.
8. பக்ந: ஸ லக்ந ஹ்ருதய: அபி ந்ருபை: ப்ரணுந்ந:
யுத்தம் த்வயா வ்யதித ஷோடச க்ருத்வ ஏவம்
அக்ஷெஹிணீ: சிவ சிவ அஸ்ய ஜகந்த விஷ்ணோ
ஸம்பூய ஸைநிகவதி த்ரிசதம் ததாநீம்
பொருள்: குருவாயூரப்பா! விஷ்ணுவே! அந்த ஜராசந்தன் உன்னிடம் தோற்றதால் மிகுந்த வெட்கம் அடைந்து இருந்தான். ஆயினும் மற்ற அரசர்கள் அவனைத் தூண்டினர். இதனால் அவன் உன்னுடன் பதினாறு முறை போர் செய்தானாமே! கடவுளே! கடவுளே! அந்தப் போர்கள் எல்லவாற்றிலும் நீ அவனது முந்நூற்று தொண்ணூற்றொரு அக்ஷௌஹிணிப் படைகளை அழித்தாய் அல்லவா?
9. அஷ்டாதசே அஸ்ய ஸமரே ஸமுபேயுஷி த்வம்
த்ருஷ்ட்வா புர: அத யவநம் யவந த்ரி கோட்யா
த்வஷ்ட்ரா விதாப்ய புரம் ஆசு பயோதி மத்யே
தத்ர அதயோக பலத: ஸ்வ ஜநாத் அநைஷீ:
பொருள்: குருவாயூரப்பா! உன்னிடம் ஜராசந்தன் பதினெட்டாவது முறையாக போருக்கு வந்தான். அப்போது அவனது மூன்று கோடி யவனர்களுடன் அவர்கள் தலைவனான காலயவனனைக் கண்டாய். நீ உடனே விச்வகர்மனை அழைத்து, கடலுக்கு அடியில் ஒரு நகரத்தை உருவாக்கினாய். உனது நாட்டில் உள்ள அனைவரையும் உன்னுடைய யோகத்தின் மூலமாக அந்த நகரத்தில் சென்று சேர்த்தாய்.
10. பத்ப்யாம் த்வம் பத்ம மாலீ சகித
இவ புராந் நிர்க்கத: தாவமாந:
ம்லேச்ச ஈசேந அநுயாத: வத ஸுக்ருத
விஹீநேந சைலே ந்யலைஷீ:
ஸுப்தேந அங்க்ரி ஆஹதேந த்ருதம்
அத முசுகுந்தேந பஸ்மீக்ருதே அஸ்மிந்
பூபாய அஸ்மை குஹா அந்த: ஸுலலித
வபுஷா தஸ்திஷே பக்தி பாஜே
பொருள்: குருவாயூரப்பா! அதன் பின்னர் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை உடைய நீ, ஜராசந்தனுக்கு அஞ்சி ஓடுவது போல் மதுராவை விட்டு வெளியில் ஓடினாய். உன் கையால் கொல்லப்படும் அளவிற்குக்கூடப் புண்ணியம் செய்யாத அந்த யவனர் தலைவன் (மிலேச்ச அரசன்) உன்னைத் தொடர, நீ ஒரு மலைக்குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டாய். அந்தக் குகைக்குள் வந்த அவன், அங்கு உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் என்பவனை (நீ என்று நினைத்து) காலால் உதைத்து எழுப்பினான். அந்த முசுகுந்தனின் வரத்தின் காரணமாக, அவன் விழித்துப் பார்த்ததும் எதிரே இருந்த மிலேச்ச அரசன் எரிந்து சாம்பலானான். அந்த நேரத்தில் சிறந்த விஷ்ணு பக்தனான அந்த முசுகுந்தனுக்கு நீ அழகான திருமேனியுடன் காட்சியளித்தாயாமே.
11. ஜக்ஷ்வாக: அஹம் வ்ரக்த: அஸ்மி அகில
ந்ருப ஸுகே த்வத் ப்ரஸாத ஏக காங்க்ஷு
ஹா தேவ இதி ஸ்துவந்தம் வர விததிஷு தம்
நிஸ்ப்ருஹம் வீக்ஷ்ய ஹ்ருஷ்யந்
முக்தே: துல்யாம் ச பக்திம்துத ஸகல
மலாம் போக்ஷம் அபி ஆசு தத்வா
கார்யம் ஹிம்ஸா விசுத்யை தப இதி
ச ததா ப்ராத்த லோக ப்ரதீத்யை:
பொருள்: குருவாயூரப்பா! அந்த முசுகுந்தன் உன்னிடம், நான் இக்ஷ்வாகு வம்சத்து அரசன் ஆவேன். எனக்கு அரச போகங்களில் விருப்பமோ நாட்டமோ இல்லை. உன்னுடைய அனுக்ரகத்தை மட்டுமே வேண்டியுள்ளேன் என்று கூறி வணங்கினான். உன்னிடம் வரம் எதுவும் கேட்கவும் அவன் விரும்பவில்லை. அதனைக் கண்டு நீ மகிழ்ந்து அவனுக்கு மோட்சத்திற்கு ஒப்பான பக்தியை அளித்தாய். அவன் விரைந்து மோட்சம் பெறும் ஞானத்தை அளித்தாய். பல காலமாக அவன் வேட்டை மூலமாக செய்த கொலைகள் காரணமாக உண்டான பாவம் தொலைய தவம் செய்யுமாறும் கூறினாய்.
12. ததநு மதுராம் கத்வா ஹத்வா சமூம் யவந ஆஹ்ருதாம்
மகத பதிநா மார்க்கே ஸைந்யை: புரா இவ நிவாரித:
சரம விஜயம் தர்பாய அஸ்மை ப்ரதாய பலாயித:
ஜலதி நகரீம் யாத: வாத ஆலய ஈச்வர பாஹிமாம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ பின்னர் மதுராவிற்குச் சென்று அங்கு கால யவனனின் படைகளை அழித்தாய். நீ செல்லும் வழியில் உன்னைத் தனது படைகளுடன் ஜராசந்தன் தடுத்தான். அவனுக்கு கர்வம் மேலும் வளர, அவன் இறுதியாக ஒரு முறை வெற்றி பெறுவதுபோல் மாயையை உண்டாக்கினாய். (எப்படி?) நீ ஓடிச்சென்று கடலின் நடுவில் அமைக்கப்ட்டிருந்த துவாரகைக்குச் சென்றுவிட்டாய். இப்படிப்பட்ட நீயே என்னைக் காப்பாற்ற வேண்டும்.