அயோத்தி ராமர் கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான சிறப்பு யாக பூஜைகள் துவங்கியது.
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் 161 அடி உயர கொடி மரத்தில் வரும் 25ம் தேதி கொடி ஏற்றம் நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் துவங்கி நேற்று வெள்ளிக்கிழமை துவங்கியது. இரண்டாம் நாளான இன்று சிறப்பு ேஷாமம் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடிமரத்தில் கொடியேற்றுவார் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளார்.