பதிவு செய்த நாள்
20
ஆக
2015
12:08
வேப்பம்பட்டு: வேப்பம்பட்டு, நாகாத்தம்மன் கோவிலில், வரும் 27ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் அடுத்த, வேப்பம்பட்டில் உள்ளது நாகாத்தம்மன் கோவில். இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம், வரும், 27ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக, இன்று, காலை 7:30 மணிக்கு, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வரும் 25ம் தேதி, காலை 8:30 மணிக்கு, மகா கணபதி ஹோமமும், பஞ்சகவ்ய பூஜையும்; மாலை 5:00 மணிக்கு, விநாயகர் பூஜையும், முதல் கால யாக சாலை பூஜையும் நடைபெற உள்ளன. மறுநாள் 26ம் தேதி, காலை 9:15 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜையும், வேத பாராயணமும்; மாலை 5:30 மணிக்கு, மூன்றாம் கால யாக சாலை பூஜையும், நாடி சந்தானமும், திரவிய ஹோமமும் நடைபெற உள்ளன. தொடர்ந்து, 27ம் தேதி, காலை 5:30 மணிக்கு,, நான்காம் கால யாக சாலை பூஜையும், கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், விநாயகர், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளன. மண்டல பூஜைகள், 48 நாட்களுக்கு நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.