கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோவிலில், பொதுவிருந்து நடைபெற்றது. திருவிடைமருதூர் முன்னாள் எம்.எல்.ஏ., தவமணி, ஆலய உதவி ஆணையர் மாரியப்பன், பேரூராட்சி தலைவர் சாமிநாதன், துணைத் தலைவர் சிங்காரவேலு உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவ, மாணவியர், பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நாகநாதசுவாமி, பிறையணியம்மன், கிரிகுஜாம்பிகை அம்பாள், ராகுபகவான் ஆகிய சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அன்னதான மண்டபத்தில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய பணியாளர்கள் செய்தனர்.