பதிவு செய்த நாள்
24
ஆக
2015
03:08
1. க்வசித் அத தபந உபராக காலே
புரி நிததத் க்ருதவர்ம காமஸுநூ
யதுகுல மஹினா ஆவ்ருத: ஸுதீர்த்தம்
ஸமுபகத: அஸி ஸமந்த பஞ்சக ஆக்யம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒரு சமயம் நீ சூரிய க்ரஹணம் அன்று க்ருதவர்மனையும் அநிருத்தனையும் துவாரகை நகரத்திற்குக் காவலாக வைத்து விட்டு, ஸமந்த பஞ்சகம் என்ற இடத்திற்கு, யாதவர்கள் அனைவரும் தங்கள் வீட்டுப் பெண்கள் உட்பட உன்னைத் தொடரச் சென்றாயாமே!
2. பஹுதர ஜநதா ஹிதாய தத்ர த்வம் அபி
புநந் விநிமஜ்ய தீர்த்த தோயம்
த்விஜ கண பரிமுக்த வித்த ராசி:
ஸமமிலதா: குரு பாண்டவ ஆதி மித்ரை:
பொருள்: குருவாயூரப்பா! அனைத்து மனிதர்களின் நலனுக்காக அங்கு இருந்த புண்ணிய நீரில் நீ நீராடினாய். இதன் மூலம் அந்த நீரை மேலும் தூய்மைப்படுத்தினாய். அங்கு இருந்த அந்தணர்களுக்குத் தானம் பல கொடுத்தாய். பின்னர் (அங்கு வந்திருந்த) கவுரவர்களுடனும், பாண்டவர்களுடனும் பேசி மகிழ்ந்தாய்.
3. தவ கலு தயிதா ஜநை: ஸமேதா
த்ருபத ஸுதா த்வயி காட பக்தி பாரா
தத் உதித பவத் ஆஹ்ருதி ப்ரகாரை:
அதி முமுதே ஸமம் அந்ய பாமிநீபி:
பொருள்: குருவாயூரப்பா! அப்போது உன் மீது ஆழ்ந்த பக்தி உடைய திரௌபதி உனது மனைவிகளுடன் பேசி மகிழ்ந்தாளாமே! உனது மனைவிகள் அவளிடம் நீ அவர்களை எப்படிக் கவர்ந்து வந்து மணந்தாய் என்று கூறி மகிழ்வுற்றனர். இதனைக் கேட்டத் திரௌபதியும் மற்ற பெண்களும் மகிழ்ந்தனர்.
4. ததநு ச பகவந் நிரீக்ஷ்ய கோபாந்
அதி குதுகாத் உபகம்ய மாநயித்வா
சிரதா விரஹ ஆதுர அங்க ரேகா:
பசுப வதூ: ஸரஸம் த்வம் அந்வயாஸீ
பொருள்: குருவாயூரப்பா! பகவானே! அதன் பின்னர் நீ நந்தகோபர் முதலான ஆயர்களைக் கண்டு அவர்களுடன் பேசி மகிழ்ந்தாய். உனது நெடுநாளைய பிரிவினால் கோபிகைகள் மிகவும் இளைத்திருந்தனர். நீ மிகவும் அன்புடன் அவர்கள் பின்னே சென்றாயாமே!
5. ஸபதி ச பவத் ஈக்ஷண உத்ஸவேந
ப்ரமுதித மாந ஹ்ருதாம் நிதம்பிநீ நாம்
அதிரஸ பரிமுக்த கஞ்சுலீகே
பரிசப ஹ்ருத்யதரே குசே ந்யலைஷீ:
பொருள்: குருவாயூரப்பா! கோபிகைகள் உன்னைக் கண்டவுடன் தங்கள் மனதில் இதுநாள் வரை கொண்டிருந்த கர்வத்தினை விட்டு மிகவும் மகிழ்வு கொண்டனர். அவர்களது மார்புக் கச்சைகள் தாமாகவே மகிழ்ச்சியால் அவிழ்ந்தன. முன்பு உனக்கு உண்டாகிய பழக்கம் காரணமாக இன்பம் விளைவிக்கும் அவர்கள் ஸ்தனங்களில் நீ ஒன்றிவிட்டாயாமே!
6. ரிபு ஜந கலஹை: புந: புந: மே
ஸமுபகதை: இயதீ விலம்பநா அபூத்
இதி க்ருத பரிரம்பணே த்வயி த்ராக்
அதி விவசா கலு ராதிகா நிலில்யே
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அங்கு இருந்த ராதையை நோக்கி, பல பகைவர்களுடன் அடிக்கடி யுத்தம் செய்ய நேரிட்டது. இதனால் நான் வருவதில் தாமதம் ஆகிவிட்டது. என்று கூறி அவளை அணைத்துக் கொண்டாய். அவளும் மிகுந்த மகிழ்வு உண்டாகி உன்னிடம் ஒடுங்கினாளாமே!
7. அபகத விரஹ வ்யதா: ததா தா
ரஹஸி விதாய ததாத தத்வ போதம்
பரம ஸுக சித் ஆத்மக: அஹம் ஆத்மா இதி
உதயது வ: ஸ்புடம் என சேதஸி இதி
பொருள்: குருவாயூரப்பா! நீ அவர்களுடன் தனிமையில் இருந்து அவர்கள் உன்னைப் பிரிந்ததன் காரணமாக உண்டான துன்பத்தை நீக்கினாய். பின்னர் அவர்களிடம், நான் பரம ஆனந்தத்தின் வடிவம் ஞானத்தின் வடிவம்; இப்படியாக உள்ள பரம்பொருள் (பரமாத்மா) என்று நீங்கள் உங்கள் மனதில் உணர்ந்து கொள்ளுங்கள் என்று உன்னைப் பற்றிய உயர்ந்த ஞானத்தை உபதேசித்தாய்.
8. ஸுக ரஸ பரிமிச்ரித: வியோக:
கிம் அபி புரா பவத் உத்தவ உபதேசை:
ஸமபவத் அமுத: பரம் து தாஸாம்
பரம ஸுக ஐக்யம் அயீ பவத் விசிந்தா
பொருள்: குருவாயூரப்பா! முன்பு உத்தவர் வந்திருந்தபோது அவர் கூறிய உபதேசங்கள் மூலம் கோபிகைகளுக்கு உண்டான துன்பம் சிறிது மறைந்திருந்தது. இப்போது நீ கூறியதைக் கேட்டவுடன் அவர்கள் வருத்தம் நீங்கி மனம் முழுவதும் ஆனந்தமே நிரம்பியிருந்தது.
9. முனி வர நிவஹை: தவ அத பித்ரா
துரித சமாய சுபாநி ப்ருச்யமாநை:
த்வயி ஸதி கிம் இதம் சுபாந்த்ரை: இதி
உரு ஹஸிதை: அபி யாஜித: ததா அஸௌ
பொருள்: குருவாயூரப்பா! உனது தந்தையான வசுதேவர் அங்கிருந்த முனிவர்களிடம் பாவம் தொலைந்து புண்ணியம் உண்டாகும் நற்செயல்களை உபதேசிக்குமாறு கூறினார். அவர்கள் சிரித்துக் கொண்டே, (உன்னைப் பார்த்து), நீ அருகில் உள்ளபோது நற்செயல்கள், கர்மங்கள் என்று ஏதாவது அவசியமா? என்றனர். ஆனாலும் வசுதேவரிடம் யாகம் ஒன்றைச் செய்யும்படிக் கூறினர்.
10. ஸுமஹதி யஜநே விதாயமாநே
ப்ரமுதித மித்ர ஜநே ஸஹ ஏவ கோபா:
யது ஜந மஹிதா: த்ரி மாஸ மாத்ரம்
பவத் அநுஷங்க ரஸம் புரா இவ பேஜு:
பொருள்: குருவாயூரப்பா! முனிவர்கள் கூறியபடி ஒரு பெரிய யாகம் வசுதேவரால் நடத்தப்பட்டது. பல நண்பர்களும் யாதவர்களும் கலந்து கொண்டு பெருமை அளித்தனர். இப்படியாக உன்னுடன் ஆயர்கள் மூன்று மாத காலம் இருந்தனர். முன்பு போலவே அவர்கள் மிகுதியான சுகம் பெற்றனர்.
11. வ்யபகம ஸமயே ஸமேத்ய ராதாம்
த்ருடம் உபகூஹ்ய நிரீக்ஷ்ய வீத: கேதாம்
ப்ரமுதித ஹ்ருதய: புரம் ப்ரயாத:
பவந புர ஈச்வர பாஹி மாம் கதேப்ய:
பொருள்: குருவாயூரப்பா! நீ மீண்டும் புறப்படத் தயாரானாய். அப்போது ராதையிடம் சென்று அவளை அன்புடன் அணைத்துக் கொண்டாய். இதனால் நீ பிரியப் போகிறாய் என்று துன்பம் அற்றவளாக அவள் இருந்தாள். இதனைக் கண்டு மகிழ்வுற்ற நீ துவாரகைக்கு திரும்பினாய். இப்படிப்பட்ட நீ எனது பிணிகளில் இருந்து காப்பாயாக!