பதிவு செய்த நாள்
24
ஆக
2015
05:08
1. ப்ராக் ஏவ ஆசார்ய புத்ர ஆஹ்ருதி நிசமநயா
ஸ்வீய ஷட் ஸுநு வீக்ஷாம்
காங்க்ஷந்த்யா மாது: உக்த்யா ஸுதல புவி
பலிம் ப்ராப்ய தேந அர்ச்சித: த்வம்
தாது: சாபாத் ஹிரண்ய அந்வித கசிபு
பவாந் சௌரிஜாந் கம்ஸ பக்நாந்
ஆநீய ஏநாந் ப்ரதர்ச்ய ஸ்வ பதம்
அநயதா: பூர்வ புத்ராந் மரீசே:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ உனது குருவான ஸாந்தீபனி முனிவரின் குழந்தையை மீட்டு வந்து கொடுத்ததை தேவகி கேள்விப்பட்டாள் (தசகம் 76, சுலோகம் 1), அதைப்போன்று, கம்சனால் கொல்லப்பட்ட தனது குழந்தைகளையும், அழைத்து வரும்படி உன்னிடம் வேண்டினாள். நீயும் ஸுதல (பாதாளலோகம்) லோகத்தில் இருந்த மகாபலியிடம் சென்றாய். அவன் உன்னை வரவேற்று மகிழ்ந்தான். அந்த ஆறு பிள்ளைகளும் ஒரு சாபம் காரணமாக முதலில் ஹிரண்யகசிபுவிற்குப் பிறந்தனர். பின்னர் அவர்கள் வசுதேவருக்குப் பிறந்தனர். அப்போது கம்சனால் கொல்லப் பட்டனர். அவர்களை ஸுதல லோகத்தில் இருந்து அழைத்து வந்து தேவகியிடம் காண்பித்து, அவர்களை வைகுண்டம் அனுப்பினாய்.
2. ச்ருத தேவ இதி ச்ருதம் த்விஜ இந்த்ரம்
பஹுலாச்வம் ந்ருபதிம் ச பக்தி பூர்ணம்
யுகபத் த்வம் அநுக்ரஹீது காம:
மிதிலாம் ப்ராபித தாபஸை: ஸமேத:
பொருள்: குருவாயூரப்பா! மிதிலை நகரத்தில் ச்ருததேவன் என்ற அந்தணன் உனது சிறந்த பக்தனாக வாழ்ந்தான். அது போன்று பஹுலாச்வன் என்ற அரசனும் இப்படியே வாழ்ந்தான். அவர்கள் இருவருக்கும் நீ ஒரே நேரத்தில் கருணை மழை பொழிய விரும்பினாய். ஆகவே முனிவர்கள் புடைசூழ நீ மிதிலைக்குச் சென்றாயாமே!
3. கச்சந் த்வி மூர்த்தி: உபயோ: யுகபந் நிகேதம்
ஏகேந பூரி விபவை: விஹித உபசார:
அந்யேந தத் திந ப்ருதை: ச பல ஓதந ஆத்யை:
துல்யம் ப்ரஸேதித ததாத ச முக்திம் ஆப்யாம்
பொருள்: குருவாயூரப்பா! நீ இரண்டு உருவங்கள் எடுத்தவனாக ஒரே நேரத்தில் இருவர் வீடுகளுக்கும் சென்றாயாமே! அரசன் உன்னை மிகுந்த செல்வத்தால் வரவேற்றான். ஆனால் அந்தணனோ அன்று அவன் சம்பாதித்த பழம், உணவைக் கொண்டு வரவேற்றான். நீ அவர்கள் இருவர் வர÷ வற்பிலும் ஒன்றுபோல் மகிழ்வுற்றாய், இருவருக்கும் மோட்சம் அளித்தாய்.
4. பூய: அத த்வாரவத்யாம் த்விஜ தநய ம்ருதிம்
தத் ப்ரலாபாந் அபி த்வம்
க: வா தைவம் நிருந்த்யாத் இதி கில கதயந்
விச்வ வோடா அபி அஸோடா:
ஜிஷ்ணோ: கர்வம் விநேதும் த்வயி மநுஜ
தியா குண்டிதாம் ச அஸ்ய புத்திம்
தத்வ ஆரூடாம் விதாதும் பரமதம
பத ப்ரேக்ஷணந இதி மந்யே
பொருள்: குருவாயூரப்பா! துவாரகையில் வாழ்ந்து வந்த ஓர் அந்தணனின் குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன. அவன் மிகவும் வருத்தத்துடன், புலம்பித் தீர்த்தான். நீ அவனிடம் தலைவிதியை யார்தான் மாற்ற இயலும்? என்று உலகையே தாங்குபவனாக இருப்பினும், இப்படிக் கூறினாய். நீ இப்படி இருந்ததற்குக் காரணம் - அர்ஜுனன் கொண்டிருந்த கர்வத்தை அடக்கவும், உன்னை அவன் சாதாரண மனிதன் என்று எண்ணியிருந்த எண்ணத்தை நீக்கவும், வைகுண்ட லோகத்தைக் காண்பித்து அவனுக்கு ஞானம் உண்டாக்கவும் என்றே நான் நினைக்கிறேன்.
5. நஷ்டா: அஷ்ட அஸ்ய புத்ரா: புந:
அபி தவ து உபேக்ஷயா கஷ்ட வாத:
ஸ்பஷ்ட: ஜாத: ஜநாநாம் அத தத்
அவஸரே த்வாரகாம் ஆப பார்த்த:
மைத்ர்யா தத்ர உக்ஷித: அஸௌ நவம்
ஸுத ம்ருதௌ விப்ர வர்ய ப்ரரோதம்
க்ருத்வா சக்ரே ப்ரதிஜ்ஞாம் அநுபஹ்ருத
ஸுத: ஸந்நிவேக்ஷ்யே க்ருசாநும்
பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக அந்தப் ப்ராமணனின் எட்டுப் பிள்ளைகள் பிறந்தவுடன் இறந்தன. துவாரகை மக்கள் அனைவரும், நீ இதனைக் கவனிக்கவில்லை. ஆகவே இப்படி நடக்கிறது என்று உன்னைக் குறித்துத் தவறாகப் பேசினார்களாமே! அந்த நேரம் அர்ஜுனன் துவாரகைக்கு வந்து உன் நண்பன் என்ற முறையில் தங்கினான். அந்த நேரத்தில் ப்ராமணனின் ஒன்பதாவது பிள்ளையும் பிறந்து இறந்தது. இதனைக் கண்ட அர்ஜுனன், அந்தப் ப்ராமணனின், அடுத்து உனக்குப் பிறக்கும் குழந்தை இறந்து விட்டால் உடனே மீட்டுத் தருகிறேன். தவறினால் நான் தீக்குளிப்பேன் என்று சபதம் செய்தான்.
6. மாநீ ஸ த்வாம் அப்ருஷ்ட்வா த்விஜ நில கத:
பாண ஜாலை : மஹா அஸ்த்ரை:
ருந்த்தாந: ஸுதி கெஹம் புந: அபி
ஸஹஸா த்ருஷ்ட நஷ்டே குமாரே
யாம்யாம் ஐந்த்ரீம் ததா அந்யா: ஸுர வர நகரீ:
வித்யயா ஆஸாத்ய ஸத்ய:
மோக உத்யோக: பதிஷ்யந் ஹ்ருத புஜி பவதா
ஸஸ்மிதம் வாரித: அபூத்
பொருள்: குருவாயூரப்பா! தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வது என்பதால் கர்வம் கொண்டிருந்த அர்ஜுனன் உன்னிடம் சொல்லாம லேயே அந்தப் ப்ராமணன் வீட்டிற்குச் சென்றான். குழந்தை பிறக்கும் அறை முழுவதையும் தனது அம்புகளால் கோட்டை போல் கட்டி மறைத்தான். அப்போது ஒரு பிள்ளை பிறந்தது. ஆனால் உடனே காணாமற் போயிற்று. (இதுவரை உடலாவது இருந்தது, இப்போது அதுவும் இல்லை). இதனைக் கண்ட அர்ஜுனன் யமலோகம், இந்த்ரலோகம் முதலான லோகங்களுக்குத் தனது யோகத்தின் மூலம் சென்று குழந்தையைத் தேடினான். ஆனால் தனது முயற்சி தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து, தான் செய்த சபதத்தின்படி தீயில் விழத் தயாராக நின்றான். உடனே ஒரு புன்முறுவலோடு நீ தடுத்தாயாமே!
7. ஸார்த்தம் தேந ப்ரதீசீம் திசம் அதிஜவிநா
ஸ்யந்தநேந அபியாத:
லோகாலோகம் வ்யதீத: திமிர பரம் அதோ
சக்ர தாம்நா நிருந்தந்
சக்ர அம்சு க்லிஷ்ட த்ருஷ்டிம் ஸ்திதம்
அத விஜயம் பச்ய பச்ய இதி வாராம்
பாரே த்வம் ப்ராததர்ச: கிம் அபி ஹி
தமஸாம் தூரதூரம் பதம் தே
பொருள்: குருவாயூரப்பா! நீ அர்ஜுனனுடன் தேரில் ஏறிக்கொண்டு மேற்குத் திசையில் விரைந்தாய். அங்கு வெகுதூரம் கடந்து லேகாலோக மலையைக் கடந்தாய். அங்கு எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. உனது சக்கரத்தை முன்னே செலுத்த அது ஒளி வீசியபடி சென்றது. அதனைப் பி ன்தொடர்ந்து சென்ற நீ அர்ஜுனனிடம், அதோ பார்! வைகுண்டத்தைப் பார் என்று விளக்க இயலாத உனது வைகுண்டத்தைக் காண்பித்தாயாமே!
8. தத்ர ஆஸீநம் புஜங்க அதிப சயந
தலே திவ்ய பூஷ ஆயுத ஆத்யை:
ஆவீதம் பீத சேலம் ப்ரதி நவ ஜலத
ச்யாமலம் ஸ்ரீமத் அங்கம்
மூர்த்திநாம் ஈசிதாரம் பரம் இஹ
திஸ்ரூணாம் ஏகம் அர்த்தம் ச்ருதீநாம்
த்வாம் ஏவ த்வம் பர ஆத்மந் ப்ரியஸக
ஸஹித: நேமித க்ஷேம ரூபம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த வைகுண்டத்தில் நீயே திவ்யமான காட்சி அளித்தாய். ஆதிசேஷன் மீது சயனித்தவனாக, எழிலுடைய பல ஆபரணங்கள் அணிந்தவனாக, ஆயுதங்களை உடையவனாக, மஞ்சள் பட்டு உடுத்தியவனாக, நீர் கொண்ட மழை மேகம்போல் நீல நிறம் உடையவனாக, திருமார்பில் மஹாலக்ஷ்மி உடையவனாக, மூன்று மூர்த்திகளும் ஒருங்கே உள்ளவனாக, வேதங்கள் அனைத்தும் விளக்கும் பொரு ளாக, மங்கலங்கள் அளிக்கும் இனிய உருவம் உடையவனாக நீ இருந்தாய். இப்படிப்பட்ட அந்த நாராயண ரூபத்தை நீயும் உனது நண்பனான அர்ஜுனனும் வணங்கினீர்களாமே!
9. யுவாம் மாம் ஏவ த்வௌ அதிக விவ்ருத
அந்தர் ஹித தயா
விபிந்நௌ ஸந்த்ரஷ்டும் ஸ்வயம் அஹம்
அஹார்ஷம் த்விஜ ஸுதாந்
நயேதம் த்ராக் ஏதாந் இதி கலு
விதீர்ணாந் புந: அமூந்
த்விஜாய ஆதாய அதா: ப்ரணுத மஹிமா
பாண்டு ஜநுஷா
பொருள்: குருவாயூரப்பா! அங்கு இருந்த நாராயணனாகிய நீ, நான் வெளியில் தெரிகின்ற செல்வமாகிய பரமாத்மாவாகவும், மறைந்த செல்வமான ஜீவாத்மாகவும் பிறந்தேன். இப்படி எனது அவதாரமாக உள்ள உங்கள் இருவரையும் காண விருப்பம் கொண்டேன். எனவே அந்த ப்ராமணனின் குழந்தைகளை இங்கு கொண்டு வந்தேன். இனி நீங்கள் அவர்களை அழைத்துப் போகலாம் என்றாய். அப்போது அர்ஜுனன் உன்னைப் புகழ்ந்தான். பின்னர் அந்தப் ப்ராமணின் குழந்தைகளை நீ அவனிடம் அளித்தாய்.
10. ஏவம் நாநா விஹாரை: ஜகத் அபிரமயந்
வ்ருஷ்ணி வம்சம் ப்ரபுஷ்ணந்
ஈஜாந: யஜ்ஞ பேதை: அதுல விஹ்ருதிபி:
ப்ரீணயந் ஏ நேத்ரா:
பூபார க்ஷேப தம்பாத் பத கமல ஜுஷாம்
மோக்ஷணாய அவதீர்ண:
பூர்ணம் ப்ரஹ்ம ஏவ ஸாக்ஷாத் யதுஷு
மநுஜதா ரூஷித: த்வம் வ்யலாஸீ:
பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக நீ பலவிதமான லீலைகள் மூலம் உலகத்தை மகிழ வைத்தாய். பல வகையான யாகங்களைச் செய்தாய். உனது பல லீலைகள் மூலம் மான் போன்ற விழி படைத்த பெண்களை மயக்கினாய். பூமியின் சுமையை குறைப்பது என்ற உறுதி கொண்டு உன்னைத் தொழுதவர்களுக்கும், சரணம் புகுந்தவர்களுக்கும் மோட்சம் அளித்தாய். இதற்காகவே யாதவ குலத்தில் பிறந்து, பரம்பொருளாகிய நீ மனித வடிவில் மறைந்து நின்றாய்.
11. ப்ராயேண த்வாரவத்யாம் அவ்ருதத்
அயி ததா நாரத: த்வத் ரஸ ஆர்த்ர:
தஸ்மாத் லேபே கதாசித் கலு ஸுக்ருத
விதி: த்வத் பிதா தத்வ போதம்
பக்தாநாம் அக்ர யாயீ ஸ ச கலு
மதிமாந் உத்தவ த்வத்த ஏவ
ப்ராப்த: விஜ்ஞாந ஸாரம் ஸ கில ஜந
ஹிதாய அதுநா ஆஸ்தே பதர்யாம்
பொருள்: குருவாயூரப்பா! உனது லீலைகளை அனுபவிக்க எண்ணி நாரதர் பெரும்பாலான நாட்களை துவாரகையிலேயே கழித்தார். அப்படி ஒரு நாள் மிகுந்த புண்ணியவானான உனது தந்தை வசுதேவர், நாரதரிடம் இருந்து பல ஞான உபதேசங்களைப் பெற்றார். பக்தர்களில் சிறந்தவரும், அறிவு நிரம்பியவரும் ஆகிய உத்தவர் உன்னிடம் இருந்தே நேரடியாக ஞானம் பெற்றார். உனது கட்டளைப்படி உத்தவர் இன்னமும் பத்ரியில் மக்களின் நலனுக்காகத் தவம் புரிகிறார்.
12. ஸ: அயம் க்ருஷ்ண அவதார ஜயதி தவ
விபோ யத்ர ஸௌஹார்த்த பீதி
ஸ்நேஹ த்வேஷ அநுராக ப்ரப்ருதிபி:
அதுலை: ஆச்ரமை: யோக பேதை:
ஆர்த்திம் தீர்த்வா ஸமஸ்தாம் அம்ருத பதம்
அரு: ஸர்வத: ஸர்வலோகா:
ஸ த்வம் விச்வ ஆர்த்தி சாந்த்யை பவந
புர பதே பக்தி பூர்த்யை ச பூயா:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது இந்த கிருஷ்ணாவதாரம் அனைத்து அவதாரங்களையும் விட சிறப்பானது. என்ன காரணம்? இந்த அவதாரத்தில் யோக மார்க்கம் போன்ற கடினமான வழிகளில் மோட்சம் அடையாமல், எளிய வழிகளான அன்பு (வசுதேவர்), பயம் (கம்சன்), பகைமை( சிசுபாலன்), நட்பு (பாண்டவர்கள்), காமம் (கோபிகைகள்) முதலானவை மூலம் பலரும் மோட்சம் பெற்றனர். இப்படிப்பட்ட க்ரு ஷ்ணனாகிய நீயே இந்த உலகின் துன்பங்கள் நீங்கவும், பக்தி என்பது வளரவும் அருள் புரிய வேண்டும்.