காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.27 லட்சம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2025 09:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 லட்சத்து 11,585 ரூபாய் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வாயிலாக எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவிலில் உள்ள நிரந்தர உண்டியல் 10 உட்பட 12 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன.
காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், காஞ்சிபுரம் சரக ஆய்வாளர் அலமேலு, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலையில், பக்தர்கள், தன்னார்வலர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் வாயிலாக எண்ணப்பட்டது.
இதில், மொத்தம் 27 லட்சத்து 11,585 ரூபாய் ரொக்கம், 5 கிராம் தங்கம், 101 கிராம் வெள்ளி, கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர்.