Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » வ்ருகாஸுர வதம்,
வ்ருகாஸுர வதம்,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2015
17:27

ப்ருகு முனிவர் பரீட்சை

1. ரமா ஜாதே ஜாநே யத் இஹ தவ பக்தேஷு விபவோ
ந ஸத்ய : ஸம்பத்ய: தத் இஹ மத க்ருத்வாத் அசமிநாம்
ப்ரசாந்திம் க்ருத்வா ஏவ ப்ரதிசஸி தத: காமம் அகிலம்
ப்ரசாந்தேஷு க்ஷிப்ரம் ந கலு பவதீயே ச்யுதி கதா

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மஹாலக்ஷ்மியின் தலைவனே! இந்த உலகில் உனது பக்தர்களுக்குச் செல்வம் என்பது விரைவாகச் சேர்வது  கிடையாது. அப்படிச் சேர்ந்தால் அது பக்திக்குத் தடையாக உள்ள கர்வத்தை உண்டாக்கி விடும் என்றே நான் கருதுகிறேன். அமைதி இழந்து தவிப் பவர்களுக்குத் தேவையான அமைதியை அளிக்கிறாய். பின்னர், அமைதி அடைந்தவுடன் அவர்கள் விருப்பம் அனைத்தையும் நிறைவேற்றுகிறாய்.  நீ உனது பக்தர்களை நழுவ விடுதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை அல்லவா?

2. ஸத்ய: ப்ரஸாத ருஷிதாந் விதி சங்கர ஆதீந்
கேசித் விபோ நிஜ குண அநுகுணம் பஜந்த:
ப்ரஷ்டா பவந்தி பத கஷ்டம் அதீர்க த்ருஷ்ட்யா
ஸ்பஷ்டம் வ்ருகாஸுர உதாஹரணம் கில அஸ்மிந்

பொருள்: குருவாயூரப்பா! ப்ரும்மாவும் சிவனும் வெகு சீக்கிரம் மகிழ்வு, கோபம் அடைபவர்கள் ஆவர். இவர்களை தங்கள் குணத்திற்கு ஏற்ப  மக்கள் வணங்குவார்கள். ஆனால் நீண்ட காலத்தைப் பற்றி யோசிக்காமல் வணங்குவதால் ஒரு நிலையில் வீழ்ச்சி அடைகின்றனர். வ்ருகாசுரனின்  சரிதம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு அல்லவா?

3. சகுநிஜ: ஸ து நாரத மேகதா
த்வரித தோஷம் அப்ருச்ச ததீச்வரம்
ஸ ச திதேச கிரீசம் உபாஸிதும்
ந து பவந்தம் அபந்தும் அஸாதுஷு

பொருள்: குருவாயூரப்பா! ஒரு முறை சகுனியின் மகனான வ்ருகன் என்பவன் நாரதரிடம் சென்றான். அவரிடம் விரைவாக வரம் அளிக்கக்கூடிய  கடவுள் யார் என்று கேட்டான். நாரதர் அவனிடம் சிவனை உபாஸனை செய்யும்படி கூறினார். அவர் அசுரர்களுக்கும் தீய எண்ணம்  படைத்தவர்களுக்கும் உறவினன் அல்லாத உன்னைச் சொல்லவில்லை.

4. தப: தப்த்வா கோரம் ஸ கலு குபித: ஸப்தம் திநே
சிர: ச்சித்வா ஸத்ய: புர ஹரம் உப ஸ்தாப்ய புரத:
அதிக்ஷுத்ரம் ரௌத்ரம் சிரஸி கர தாநேந நிதநம்
ஜகத் நாதாத் வவ்ரே பவதி விமுகாநாம் க்வ சுபதீ:

பொருள்: குருவாயூரப்பா! வ்ருகாசுரன் மிகவும் கடுமையான தவம் புரியத் தொடங்கினான். ஏழு நாட்கள் கழிந்தன. அவனுக்கு மிகவும் கோபம் வந் தது (சிவன் அதுவரை வரவில்லை என்பதால்). உடனே தனது தலையை அறுக்க முடிவு செய்தான். அப்போது சிவன் அவன் முன்பாகத் ÷ தான்றினார். வ்ருகாசுரன் சிவனிடம் நான் யார் தலைமீது கை வைக்கின்றேனோ அவர்கள் உடனே இறந்துவிட வேண்டும் என்று மிகவும் கொடுமை யான வரத்தை வேண்டினானாமே! உன்னிடம் பக்தி செலுத்தாதவர்களுக்கு நல்ல அறிவு என்பது எப்படி இருக்க முடியும்?

5 மோக்தாரம் பந்த முக்த: ஹரிண பதி:
இவ ப்ராத்ரவத் ஸ: அத ருத்ரம்
தைத்யாத் பீத்யா ஸ்ம தேவ: திசி திசி
வலதோ ப்ருஷ்டத: தத்த த்ருஷ்டி:
தூஷ்ணீகே ஸர்வ லோகே தவ பதம்
அதிரோக்ஷ்யந்தம் உத்வீக்ஷ்ய சர்வம்
தூராத் ஏவ அக்ரத: த்வம் படு வடு
வபுஷா தஸ்திஷே தாநவாய

பொருள்: குருவாயூரப்பா! கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்கம் தனது கூண்டினைத் திறந்து விடுதலை செய்பவன் மீது பாய்வது போல்,  தனக்கு வரம் கொடுத்த சிவனையே (தனது வரத்தைத் சோதித்துப் பார்க்க) துரத்திக் கொண்டு ஓடினான். சிவன் அவனுக்காகப் பயந்து பின்புறம் திரு ம்பிப் பார்த்துக் கொண்டு அனைத்துத் திசைகளிலும் ஓடினார். இதனைக் கண்டு உலகம் முழுதும் எதுவும் செய்ய இயலாத நிலையில் அமைதி  காத்தது. இதனால் வேதங்களுக்கு இருப்பிடமான வைகுண்டத்தை அடைய சிவன் முடிவு செய்தார். இதனை உணர்ந்த நீ ஓர் அந்தணன் போல் ÷ வடம் பூண்டு வ்ருகாசுரன் முன்பு நின்றாய்.

6 பத்ரம் தே சாகுநேய ப்ரமஸி கிம் அதுநா
த்வம் பிசாசஸ்ய வாசா
ஸந்தேஹ: சேத் மத் உக்தௌ தவ கிமு ந
கரோஷி அங்குலீம் அங்க மௌலௌ
இத்தம் த்வத் வாக்ய மூட: சிரஸி க்ருத
கர: ஸ: அபதத் சிந்ந பாதம்
ப்ரம்ச: ஹி ஏவம் பர உபாஸிது: அபி ச கதி:
சூலிந: அபி த்வம் ஏவ

பொருள்: குருவாயூரப்பா! நீ அவனிடம் சகுனியின் மகனே! நலமாக உள்ளாயா? ஒரு பிசாசு கூறியது என்று ஏன் இப்படி ஓடுகிறாய்? நான்  சொல்வதில் நம்பிக்கை பிறக்கவில்லை என்றால் உனது தலைமீது கையை வைத்துப்பார் என்று தந்திரமாகக் கூறினாய். உனது வார்த்தையைக் கேட்ட  அந்த முட்டாள் அசுரன் அப்படியே செய்தான். உடனே வேர் இற்ற மரம் போன்று கீழே விழுந்தான். மற்ற வரதேவதைகளை வழிபட்டால் இதுதான்  முடிவு போலும். சூலம் ஏந்திய சிவனுக்கும் நீதானே அடைக்கலம் ஆனாய்.

7. ப்ருகும் கில ஸரஸ்வதீ நிகட வாஸிந: தாபஸா:
த்ரிமூர்த்திஷு ஸமாதிசந் அதிக ஸத்வதாம் வேதிதும்
அயம் புந: அநாதராத் உதித ருத்த ரோஷேவிதௌ
ஹரே அபி ச ஜிஹிம் ஸிஷௌ கிரிஜயா த்ருதே த்வாம் அகாத்

பொருள்: குருவாயூரப்பா! ஒரு முறை சரஸ்வதி நதியின் கரையில் தவம் இயற்றிக் கொண்டிருந்த முனிவர்கள், மும்மூர்த்திகளில் ஸத்வ குணம்  உடையவர் யார் என்று அறிய எண்ணினர். இதற்காக ப்ருகு முனிவரை அனுப்பினர். அவர் முதலில் ப்ரும்மாவின் இருப்பிடம் சென்று வணங்காமல்  நின்றார். இதனைக் கண்ட ப்ரும்மா கோபம் கொண்டு, பிறகு கோபம் தணிந்தான். அதன் பின்னர் அவர் சிவலோகம் சென்றார். இவரைக் கண்ட சி வன் விரைந்து வந்து கட்டித் தழுவி வரவேற்க வந்தார். உடனே ப்ருகு முனிவர். நீ ஆசாரமாக இல்லாதவன், என்னைத் தொடாதே, என்றார். உடனே  உன்னைக் கொல்ல முயன்ற சிவனைப் பார்வதி தடுத்தாள். பின்னர் ப்ருகு உனது இருப்பிடம் வந்தாராமே!

8. ஸுப்தம் ரமா அங்க புவி பங்கஜ லோசநம் த்வாம்
விப்ரே விநிக்நதி பதேந முகா உத்தித: த்வம்
ஸர்வம் க்ஷமஸ்வ முநி வர்ய பவேந் ஸதா மே
த்வத் பாத சிஹ்நம் இஹ பூஷண இதி அவாதீ:

பொருள்: குருவாயூரப்பா! தாமரை போன்ற அழகிய கண்கள் கொண்ட நீ, மஹாலக்ஷ்மியின் மடியில் தலை வைத்து சயனித்திருந்தாய், இதனைக்  கண்ட ப்ருகு முனிவர் தனது காலால் உனது மார்பில் உதைத்தார். உடனே நீ எழுந்து அவரை மகிழ்வுடன் வரவேற்று, ப்ருகு முனிவரே! எனது  குற்றத்தை மன்னிக்க வேண்டும் உங்கள் காலின் சுவடு என்றும் என் மார்பில் விளங்கும் என்றாய்.

9. நிச்சித்ய தே ச ஸுத்ருடம் த்வயி பத்த பாவா:
ஸாரஸ்வதா முநி வரா: ததிரே விமோக்ஷம்
த்வாம் ஏவம் அச்யுத புந: ச்யுதி தோஷ ஹீநம்
ஸத்வ உச்சய ஏத தநும் ஏவ வயம் பஜாம:

பொருள்: குருவாயூரப்பா! ப்ருகு முனிவர் ஸரஸ்வதி நதிக்கரையில் உள்ள முனிவர்களிடம் நடந்ததைக் கூறினார். அவர்கள் நீயே ஸத்வகுணம்  உள்ளவன் என்று முடிவு செய்து உன்மீது மிகுந்த பக்தி கொண்டு, மோட்சம் பெற்றனர். அடியார்களைக் கைவிடாதவனே! அச்சுதனே! ஸத்வ குணமே  உனது உருவமாக உடையவனே! உன்னையே நாங்கள் துதிக்கின்றோம்.

10. ஜகத் ஸ்ருஷ்டி ஆதௌ த்வாம்
நிகம நிவஹை: வந்திபி: இவ
ஸ்துதம் விஷ்ணோ ஸத் சித்
பரம ரஸ நிர்த்வைத உபுஷம்
பர ஆத்மாநம் பூமந் பசுப
வநிதா பாக்ய நிவஹம்
பரீதாப ச்ராந்த்யை பவந
புர வாஸிந் பரிபஜே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ உலகத்தை உருவாக்க ஆரம்பித்த சமயம், துதிபாடும் கூட்டம் போல் உபநிஷத்துக்கள் துதித்தன. நீ சச்சி தானந்த ரூபமாகவும், அத்வைத வடிவமாகவும் அனைத்திற்கும் ஆத்மாவாகவும் உள்ளாய். கோபிகைகள் அனைவரும் செய்த புண்ணியங்கள் ஒரு  வடிவம் பெற்றதுபோல் உள்ளவனே! எனது துன்பங்கள் அனைத்தும் விலக உன்னை வணங்குகிறேன்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar