நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவார விழா நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 1008 சங்குகள் அமைக்கப்பட்டு அதில் வில்வ இலைகள், புஷ்பங்களால் அலங்கரிங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதைப்போலவே அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோவில், காம்பார்பட்டி ஆத்மலிங்கேஸ்வரர் 1008 சிவன் கோயில்,குட்டூர்- உண்ணாமுலை அம்பாள் உள்ளிட்ட சிவாலயங்களில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு 108 சங்குகள் அமைக்கப்பட்டு சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.