ராஜபாளையம்: ராஜபாளையம் சிவன் கோயில்களில் கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சங்குகளை லிங்க வடிவில் அடக்கி சிறப்பு யாகங்கள் நடத்திய பின் உற்ஸவர் சிலைக்கு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. ராஜபாளையம் மாயூர நாத சுவாமி கோயில், சொக்கர் கோயில், திருச்சிற்றம்பல குருநாதசாமி கோயில், சேத்துார் திருக்கண்ணீஸ்வரர், தெற்கு வெங்கா நல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சோமவார வழிபாடு நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு 108 சங்குகள் வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டது.