பதிவு செய்த நாள்
25
ஆக
2015
11:08
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள, 43 உபசன்னதிகளுக்கும், 11 கோபுரங்களுக்கும், செப்டம்பர், 9ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 186 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ரெங்கநாதருக்கும், தாயாருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. ராஜகோபுரம் உட்பட மொத்தம், 21 கோபுரங்கள் இந்த கோவிலை சுற்றி
உள்ளது. கடந்த, 2001ம் ஆண்டு, மார்ச், 15ம் தேதி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனால், 12 ஆண்டுகளுக்கு பின், கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, 10 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியது. இந்த நிதியின் மூலம், கடந்த, 2014ம் ஆண்டு ஜூன், 5ம் தேதி துவங்கிய கோவில் புனரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
முதல் கட்டமாக, கோவிலில் உள்ள, 43 உபசன்னதிகளுக்கும், 11 கோபுரங்களுக்கும் வரும் செப்., 9ம் தேதி காலை, 5.40 மணி முதல், 6.40 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி செப்., 7ம் தேதி மாலை, முதற்கால யாக சாலை பூஜைகளும், 8ம் தேதி, காவிரியில் புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 2ம் கால மற்றும், 3ம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது. செப்., 9ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.