பதிவு செய்த நாள்
25
ஆக
2015
11:08
வேலூர்: திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு, வேலூரில் இருந்து, 200 பஸ்கள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா அரசு போக்குவரத்துக் கழகம், சித்தூர் மண்டல மேலாளர் முனிஸ்வரன், வேலூரில் நேற்று கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பிரமோற்சவ விழா செப்டம்பர், 16ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடக்கிறது. மே<லும், அக்டோபர்,14 முதல், 24ம் தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது. இதில், கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் வசதிக்காக, இந்தாண்டு திருப்பதியில் இருந்து திருமலைக்கு கூடுதலாக, 600 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் தினமும், 4,000 முறை திருப்பதி - திருமலைக்கு பஸ்கள் சென்று வரும். வேலூரில் இருந்து திருமலைக்கு கூடுதலாக, 200 பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.