பதிவு செய்த நாள்
25
ஆக
2015
12:08
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, வெண்ணந்தூரில் விசாலாட்சி உடனமர் விஸ்வநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் மிகுந்த பொருட்செலவில், கோவில் கோபுரம், முன் மண்டபம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட், 27ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய விழாக்குழுவினர் முடிவு செய்தனர். விழாவை முன்னிட்டு, இன்று (ஆக., 25) மாலை, 6 மணிக்கு, கணபதி, சங்கல்பம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (ஆக., 26) அதிகாலை, 4.30 மணிக்கு, கணபதி, நவக்கிரஹம் மற்றும் மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. பகல், 12 மணிக்கு, பூர்ணாகுதி,
தீபாராதனையும், மாலை, 4 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தொடர்ந்து, மாலை, 6 மணிக்கு, யாகசாலை பூஜை, மூலமந்திரம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆகஸ்ட், 27ம் தேதி காலை, 6 மணிக்கு, சங்கல்பம், 8 மணிக்கு, நாடி சந்தானம், கலசம் புறப்பாடு நடக்கிறது. 9 மணிக்கு, விமான கோபுரத்திற்கும், மூலஸ்தானம், விசாலாட்சி உடனமர் விஸ்வநாத ஈஸ்வரர் மற்றும் 63 நாயனமார்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.