பதிவு செய்த நாள்
25
ஆக
2015
12:08
நாமக்கல்: நாமக்கல் அடுத்த, சேந்தமங்கலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், 16வது ஆடிப்பூர விழா, ஆகஸ்ட், 30ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. அன்று காலை, 9 மணிக்கு மகளிர் கஞ்சிக்கலயம், முளைப்பாரி, அக்னி சட்டி, பால்குடம் ஏந்தி
அலங்கரிக்கப்பட்ட குரு-கருவறை படத்துடன், ஆன்மிக ஊர்வலம் நடக்கிறது.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின், நாமக்கல் மாவட்ட நிர்வாகக்குழு தலைவர் கணேசன் தலைமை வகிக்கிறார். இணைச் செயலாளர் அங்கமுத்து முன்னிலை வகிக்கிறார். தாசில்தார்
சுப்ரமணியன் ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார். சேந்தமங்கலம் நைனாமலை சாலை முருகன் ரைஸ் மில் மைதானத்தில் துவங்கி, பி.டி.ஓ., அலுவலகம், மேட்டுத்தெரு, மேற்கு கடைவீதி, மெயின் சாலை, பெருமாள் கோவில் தெரு வழியாக, வளையல்காரத்தெருவில்
உள்ள சக்தி பீடத்தை அடைகிறது. அதை தொடர்ந்து, காலை, 11 மணிக்கு, பாலாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, மேல்மருவத்தூர்
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட நிர்வாகிகள், உறுப்பினர் செய்துள்ளனர்.