பதிவு செய்த நாள்
28
ஆக
2015
11:08
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூரண புஷ்கலா சமேத குளங்கரை கூத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்புத்தூர் பெரியகண்மாய் கரையில் திருப்புத்தூர்,தம்பிபட்டி, புதுப்பட்டி கிராமத்தினருக்கு பாத்தியப்பட்ட குளங்கரை காத்த அய்யனார் கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு, திருப்பணி நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 25ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம்,தன பூஜை,நவக்கிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து திருத்தளிநாதர் கோயிலிலிருந்து சிவாச்சாரியார்கள் யாகசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 51 கலசங்களுடன் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில், குன்றக்குடி திருநீலகண்ட நாயனார் மடாலயம் பாண்டிச்செல்வம் சிவாச்சாரியார் தலைமையில் 21 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையை நடத்தினர். நேற்று காலை 9.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் யாகசாலையிலிருந்து புனித நீர் நிரம்பிய கலசங்களுடன் புறப்பட்டனர். திருக்கோயிலை வலம் வந்து விமான,கோபுர கலசங்களுக்குச் சென்றனர். காலை9.50 மணிக்கு கருடன் வட்டமிட,மேளதாளங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,உமாதேவன், முன்னாள் தக்கார் தங்கவேலு, ஆ.பி.சீ.அ.கல்லுõரி செயலர் ராமேஸ்வரன், டத்தோ துரைசிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் அன்னதானம், மகா அபிஷேகம் நடந்தது. மாலையில் கும்பாபிஷேக மலர் வெளியிடப்பட்டது. ஸ்தபதி கார்த்திகேயன், இன்ஜினியர் அருணாச்சலம், ஆகியோர் கட்டுமான,சுதை வேலைகளை மேற்கொண்டனர். ஏற்பாட்டினை திருப்பணிக்குழுவினர்,கிராமத்தினர் செய்தனர்.