திருத்தணி: திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறித்தாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி, காலை 8:00 மணி முதல், காலை 9:30 மணி வரை மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மதிய ஆரத்தியும், இரவு 7:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தது. அதே போல், குரு பிரதோஷத்தை முன்னிட்டு, திருத்தணி நந்தி ஆற்றக்கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் மற்றும் நாபளூர் அகத்தீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், நேற்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தன.