பதிவு செய்த நாள்
28
ஆக
2015
12:08
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.,1ல் திரிவேணி விழா துவங்குகிறது. மதுரை தெய்வநெறி கழகம், சிவானந்த தபோவன தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி கூறியதாவது: சுவாமி சிவானந்தரின் 129வது ஜெயந்தி விழா, தெய்வநெறி கழக 77வது ஆண்டு விழா, சிவானந்த தபோவனத்தின் 48வது ஆண்டு விழா ஆகியவை திரிவேணி விழாவாக செப்.,1 முதல் 8 வரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கிறது. மணிமொழியன் துவக்குகிறார். இளம்பிறை மணிமாறனின் சொற்பொழிவு நடக்கிறது. செப்.,2ல் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம், செப்.,3ல் பேராசிரியர் ரா.மோகன், செப்.,4ல் வை.ராஜகோபால கனபாடிகள் ஆகியோரின் சொற்பொழிவு நடக்கிறது. செப்.,5ல் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. செப்.,6ல் சிம்மக்கல் சாரதா வித்யாவனம் பள்ளி மாணவிகளின் நாட்டியம், செப்.,7 ல் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் நகைச்சுவை சொற்பொழிவும், செப்., 8ல் ஸ்ரீசத்குரு சங்கீத வித்யாலயம் இணை பேராசிரியை ஸ்ரீமதி பாலா நந்தகுமார் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. பரிசளிப்பு விழாவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன், புரவலர் சங்கர சீத்தாராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர், என்றனர்.