ராமநாதபுரம்: ஏர்வாடி செய்யது அபுபக்கர் பாதுஷா நாயகத்தின் சந்தன கூடு திருவிழா செப்., 8 ல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு அன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக செப்., 19 ல் வேலை நாளாக கொண்டு அரசு அலுவலகங்கள் செயல்படும். அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள், அனைத்து அரசு அலுவலகங்கள் செப்., 8 ல் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும், என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.