ஸ்ரீவில்லிபுத்தூர்: இல்லத்து பிள்ளைமார் சமூகத்திற்கு பாத்தியபட்ட வேப்பங்குளம் முத்துமாரியம்மன் கோயில் 11ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. அர்ச்சகர் ரமேஷ் நடத்தினர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் மாரியப்பன், சக்தி சிங்காரவேலு, மாரிமுத்து, பாலகிருஷ்ணன், முனீஸ்வரன், அர்ச்சகர்கள் குருசாமி, மாரிமுத்து செய்திருந்தனர்.
* மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் ராஜபாளையம் அருகே உள்ள ராக்காச்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. ராஜபாளையத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர். அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இருநாள்களும் மதியம் அன்னதானம் நடந்தது. ராஜபாளையம் மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர்.