பதிவு செய்த நாள்
04
செப்
2015
11:09
அன்னுார்: அன்னுார் பெருமாள் கோவிலில், மகாபாரத தொடர் சொற்பொழிவு வரும், 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 69வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மகாபாரத தொடர் சொற்பொழிவு நடக்கிறது. திருச்சியை சேர்ந்த புலவர் கல்யாணராமன், பேசுகிறார். வரும், 7ம் தேதி மாலை, 6:30 மணிக்கு சொற்பொழிவு துவங்குகிறது. அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை என்னும் தலைப்பில், கல்யாணராமன் பேசுகிறார். தொடர்ந்து, 14ம் தேதி வரை, தினமும் மாலை 6:30 மணி முதல், இரவு 8:30 மணி வரை, மகாபாரதத்தில் பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார். நிறைவு நாள் சொற்பொழிவு, வரும் 15ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை, ஸ்ரீராமானுஜர் பக்த ஜன பேரவையினர் செய்து வருகின்றனர்.